Tag: சரத் வீரசேகர
சரத் வீரசேகரவுக்கு எதிராக சட்டத்தரணிகள் போராட்டம்
சரத் வீரசேகரவுக்கு எதிராக சட்டத்தரணிகள் போராட்டம்
பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர முல்லைத்தீவு நீதிபதி தொடர்பாக தெரிவித்த கருத்தினைக் கண்டித்து யாழ்ப்பாண மாவட்டத்தில் நீதிமன்றத்தில் சட்டத்தரணிகள் இன்றையதினம்(25) பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 22 ம் திகதியன்று முல்லைதீவு நீதிபதி தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர
அவதூறு பரப்பும் வகையிலும் நீதித்துறை சுதந்திரத்தை கேள்விக்கு உட்படுத்தும் வகையிலும் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையை கண்டித்தும் எதிர்ப்பு தெரிவித்தும் முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கம் இன்று (25) காலை
9.30 மணி முதல் 10.30 மணி வரை நீதிமன்ற நடவடிக்கைகளை புறக்கணித்து அடையாள கண்டன போராட்டம் ஒன்றை நடத்த அழைப்பு விடுத்தது
இந்த அடையாள புறக்கணிப்பு போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் ஏனைய கிளைச் சங்கங்களும் தத்தமது நீதிமன்றங்களில் குறித்த அடையாள கண்டன போராட்டத்தினை மேற்கொண்டன.
- தேசத்தின் குரலப்பா தேனிசை செல்லப்பா|710|தேனிசை செல்லப்பா ||Thenisai Chellappaby நிருபர் காவலன்
- செல்லப்பா செல்லப்பா நீங்க எங்கள் தாயகத்தின் செல்லப் பிள்ளை |தேனிசை செல்லப்பா |709|Thenisai Chellappaby நிருபர் காவலன்
- தேனிசை செல்லப்பா இறுதி நிகழ்வு காட்சிகள்by நிருபர் காவலன்
- செல்லப்பா உன்ன தேசம் மறக்குமா |709|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappaby நிருபர் காவலன்
- பாணரே எங்க பாணரே |707|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappaby நிருபர் காவலன்
முல்லைத்தீவு நீதிபதி ஒரு மனநோயாளி சரத் வீரசேகர
முல்லைத்தீவு நீதிபதி ஒரு மனநோயாளி சரத் வீரசேகர
முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ஒரு மனநோயாளி. இவ்வாறானவரால் எவ்வாறு சரியான முறையில் செயற்பட முடியும். ஆகவே முல்லைத்தீவு நீதிமன்றத்துக்கு வேறொரு நீதிபதியை நியமிக்க வேண்டும் என்பதை நீதியமைச்சிடம்
வலியுறுத்துகிறேன். குருந்தூர் மலையில் கை வைப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். சிங்கள பௌத்தர்களின் பொறுமைக்கு எல்லையுண்டு. அதை
கோழைத்தனம் என்று கருத வேண்டாம் என தேசிய பாதுகாப்பு தொடர்பான பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (22) இடம்பெற்ற சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
குருந்தூர் மலையில் பொங்கல் பொங்கும் இந்து மத வழிபாட்டில் ஈடுபட முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி அனுமதி வழங்கியுள்ளார்.
தொல்பொருள் கட்டளைச்சட்டத்துக்கு எதிராகவே முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி செயற்படுகிறார். தொல்பொருள் கட்டளைசட்டத்தில் பௌத்தர்களின் மனங்களை பாதிக்கும் செயற்பாடுகளுக்கு இடமளிக்க கூடாது. அவ்வாறான செயற்பாடுகள் தண்டனைக்குரிய குற்றம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறான தெளிவான கட்டளைச்சட்டங்கள் காணப்படுகின்றன நிலையில் நீதிபதி தவறான கட்டளைகளை பிறப்பித்துள்ளமை பெரும் பிரச்சினையாக உள்ளது. கடந்த 18 ஆம் திகதி குருந்தூர் மலைக்கு தமிழ் அரசியல்வாதிகளுடன்
வருகை தந்த குண்டர்கள் அப்பகுதியில் இருந்த குருந்தூர் மலையின் விகாராதிபதி சாந்த போதி தேரரை தகாத வார்த்தைகளால் தூற்றி,வெளியேற்றியது முறையற்றது. இவ்வாறான செயற்பாடுகளினால் பௌத்தர்களின் மனம் பாதிக்கப்படாதா ?
நாங்கள் பொறுமையாக இருக்கிறோம், அந்த பொறுமையை கோழைத்தனம் என்று கருத கூடாது என்பதை தெளிவாக குறிப்பிட்டுக் கொள்கிறோம்.
தூர நோக்கற்ற வகையில் பிறப்பிக்கப்படும் கட்டளைகளினால் இனவாத முரண்பாடுகள் தோற்றம் பெறும். அவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றால் அதற்கு பொறுப்பான நீதிபதி, தமிழ் அரசியல்வாதிகள் பொறுப்புக்கூற வேண்டும்.
முல்லைத்தீவு நீதிபதி ஒரு மனநோயாளி சரத் வீரசேகர
முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ஒரு மனநோயாளி என்றும் அவரை தான் மனநோய் வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதாக வும் குறித்த நீதிபதியின் மனைவி முல்லைத்தீவு பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார். ஆகவே நீதிபதி மனநோயாளி என்றால் அவர் குணமடைய நாங்களும் உதவி புரிவோம்.
மனநோயால் பாதிக்கப்பட்டுள்ள ஒருவர் எவ்வாறு நீதிபதியாக செயற்பட முடியும் என்பது பிரச்சினைக்குரியதாக உள்ளது. இவர் பௌத்தர்களுக்கு
இடமளிக்கமாட்டார் ஆனால் பொங்கல் பொங்குவதற்கு இடமளிப்பார். சரியான தீர்மானத்தை இந்த நீதிபதியால் எடுக்க முடியாது. ஏனெனில் அவர் ஒரு மனநோயாளி.
இனவாத கொள்கையற்ற தமிழ் நீதிபதிகள் பலர் நாட்டில் உள்ளார்கள். ஆகவே அவர்களை முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க வேண்டும்.
எம்மத்தியில் இனவாதம், மதவாதம் கிடையாது. இல்லாத முரண்பாடுகளை தோற்றுவிக்க வேண்டாம் என்பதை தமிழ் அரசியல்வாதிகளிடம் கேட்டுக் கொள்கிறேன்.
முல்லைத்தீவு நீதிபதி ஒரு மனநோயாளி சரத் வீரசேகர
குருந்தூர் மலையில் கை வைப்பதை அடிப்படைவாதிகள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் சிங்கள பௌத்தர்களின் பொறுமைக்கும் எல்லையுண்டு.
தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன். எனது உரைக்கு பின்னர் எனக்கு எதிராக
இலங்கை சட்டத்தரணிகள் செயற்படுவதை விடுத்து உண்மையான பிரச்சினைக்கு தீர்வு காண பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்பதையும் குறிப்பிட்டுக் கொள்கிறேன் என்றார்.
- தெற்கு லெபனான் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் இஸ்ரேலியத் தாக்குதலில் பலிby நிருபர் காவலன்
- இஸ்ரேல் பிரிட்டன் முறுகல் இஸ்ரேல் உறவு முறிந்ததுby நிருபர் காவலன்
- அமெரிக்காவின் அரசு ஆதரவு கடற்கொள்ளைby நிருபர் காவலன்
- ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இரண்டு இஸ்ரேலிய வீரர்கள் காயம்by நிருபர் காவலன்
- ஈரான் போர் குறித்து பென்டகன் தலைவர் சாட்சியமளிக்கிறார்by நிருபர் காவலன்
முடிந்தால் செய்து காட்டுங்கள் என சரத் வீரசேகரக்கு சவால் விட்ட செல்வம் அடைக்கலநாதன்!
முடிந்தால் செய்து காட்டுங்கள் என சரத் வீரசேகரக்கு சவால் விட்ட செல்வம் அடைக்கலநாதன்!
சரத்வீரசேகர இராணுவத்தில் றொட்டி சுட்டுக் கொண்டா இருந்தார். முடிந்தால் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை கைது செய்து காட்டுங்கள் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (16.06) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
முன்னாள் அமைச்சர் சரத்வீரசேகர அவர்கள் கடந்த காலங்களில் பல கருத்துக்களை கூறியுள்ளார். குறிப்பாக தமிழ் பிரதேசங்களில் நடைபெறுகின்ற அடக்கு முறைக்கு எதிராக குரல் கொடுக்கின்ற தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று சொல்லியிருக்கின்றார். மாகாணசபை முறையையும் இல்லாது ஒழிக்க வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
முடிந்தால் செய்து காட்டுங்கள் என சரத் வீரசேகரக்கு சவால் விட்ட செல்வம் அடைக்கலநாதன்!
சரத் வீரசேகர அவர்கள் இராணுவத்தில் றொட்டி சுட்டுக் கொண்டா இருந்தார். ஏனெனில் எங்களது மக்களது பிரச்சனை என்பது காலம் காலமாக இருந்து வரும் பிரச்சனை. தங்களது பிரச்சனைகளைப் பேசுவதற்கே மக்கள் பாராளுமன்றம் அனுப்புகிறார்கள். தங்களுக்கான அநீதிகளை சுட்டுக் காட்டும் வழியிலும் தான் நாடாளுமன்றம் அனுப்புகிறார்கள். அந்தவகையில் தங்களது தேசத்து மக்களது பிரச்சனைகளை பாராளுமன்ற உறுப்பினர்கள் பேசுகிறார்கள். இவர் யார்? தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை கைது செய்து சிறையில் அடைக்கச் சொல்வதற்கு இவருக்கு என்ன உரிமை இருக்கிறது? முடிந்தால் அதை செய்து பார்க்கட்டும். சும்மா இராணுவத்தில் இருந்து எதையெல்லாம் செய்து போட்டு வந்து கொக்கரிக்க கூடாது. எனவே அவருக்கு சவால் விடுகின்றேன். மக்கள் நலன் சார்ந்து பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்களை கைது செய்யுங்கள் பார்க்கலாம். அடுத்து என்ன நடக்கும் என பார்ப்பீர்கள் எனத் தெரிவித்தார்.



















