பிரித்தானிய தம்பதியினரிடம் கைவரிசையை காட்டியவர் சிக்கினார்
Posted in இலங்கை செய்திகள்

பிரித்தானிய தம்பதியினரிடம் கைவரிசையை காட்டியவர் சிக்கினார்

பிரித்தானிய தம்பதியினரிடம் கைவரிசையை காட்டியவர் சிக்கினார்

பிரித்தானிய தம்பதியின் பொருட்களையும் பணத்தையும் திருடிய குற்றச்சாட்டில் வஸ்கடுவ பிரதேசத்தை சேர்ந்த 26 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரித்தானிய தம்பதியிடம் இருந்து இரண்டு வெளிநாட்டு கடவுச்சீட்டுகள், விசாக்கள், வங்கி அட்டைகள் மற்றும் 40 இலட்சம் ரூபா பெறுமதியான பணம் என்பன திருடப்பட்டுள்ளன.

திருடப்பட்ட பொருட்கள் சில பற்றைக்குள் மறைக்கப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் பிரித்தானிய தம்பதியின் பணத்தையும் பொருட்களையும் திருடி, பாதுகாப்பு பெட்டகத்தை கடலில் வீசியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதையடுத்து, சந்தேகநபர் களுத்துறை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

No posts found.