Tag: குளவிக் கொட்டுக்கு இலக்காகி சிறுமி மரணம்
Posted in இலங்கை செய்திகள்
குளவிக் கொட்டுக்கு இலக்காகி சிறுமி மரணம்
Author: நலன் விரும்பி Published Date: 23/03/2022 Leave a Comment on குளவிக் கொட்டுக்கு இலக்காகி சிறுமி மரணம்
குளவிக் கொட்டுக்கு இலக்காகி சிறுமி மரணம்
இராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மந்திரிதென்ன கிராமத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகி ஐந்து வயது சிறுமியொருவர், நேற்று (22) இரவு உயிரிழந்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமை மதியம் தனது தாயுடன் அவர்களது விவசாய நிலத்துக்கச் சென்ற போது, குளவி கலைந்து இருவரையும் கொட்டியுள்ளது.
இதனையடுத்து, இவர்களை உடனடியாக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு
சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (22) இரவு சிகிச்சை பலனின்றி ஐந்து வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக இராகலை பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன் தாய் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






