Tag: குற்றச்செயல்கள்
சிறுவர்களால் வருடாந்தம் 5000 குற்றச்செயல்கள் பதிவு
சிறுவர்களால் வருடாந்தம் 5000 குற்றச்செயல்கள் பதிவு
இலங்கையில் வருடாந்தம் சிறுவர்கள் சம்பந்தப்பட்ட சுமார் 5,000 குற்றச்செயல்கள் பதிவாகுவதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் பாவனை மற்றும் செல்போன் பாவனையே இவ்வாறான பல குற்றச் செயல்களுக்கு வழிவகுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
”இலங்கையில் வருடாந்தம் சிறுவர்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் சுமார் 5,000 பதிவாவதாக இந்த புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.
எமது நாட்டில் பாரிய பிரச்சினையாக மாறியுள்ள போதைப்பொருள் பிரச்சினையே.
சிறுவர்களால் வருடாந்தம் 5000 குற்றச்செயல்கள் பதிவு
சிறுவர் துஷ்பிரயோகம் மற்றுமொரு மிகப்பெரிய காரணி. இலங்கையில் மேல் மாகாணத்தில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களில் பதிவாகும் சிறுவர்கள் தொடர்பான குற்றங்கள் பற்றி எங்களுக்குத் தெரியும்.
கையடக்கத் தொலைபேசிகள் சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு இட்டுச் செல்லும் ஆபத்தான ஆயுதமாக மாறியுள்ளது. இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோகத்தை குறைக்க நாம் முயற்சி எடுத்தால், பெற்றோர்கள் கண்டிப்பாக வீட்டில் கையடக்கத் தொலைபேசி பாவனையை கட்டுப்படுத்த வேண்டும்.” என அவர் குறிப்பிட்டார்.
- மவுண்ட் லவினியா துப்பாக்கிச் சூடு 2நபர்கள் கைது
- 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவுக்கு எதிராகத் தாக்கல்
- இலஞ்சம் வாங்கிய பொலிஸ் அதிகாரி கைது
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை
- 2027 ஆம் ஆண்டுக்கான பள்ளிப் பருவ கால அட்டவணையை கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது
- நந்த மாலினி மறைவையொட்டி இலங்கை அரச நிறுவனங்களில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்
- இலங்கையில் டெங்கு மரண எண்ணிக்கை 71 ஆக உயர்வு
- எல் நினோ வறண்ட வானிலை ஏழு மாவட்டங்களில் 81 000 மக்கள் பாதிப்பு
- மேகசின் சிறைக்குள் ரீசார்ஜ் செய்யக்கூடிய பேட்டரிகளை வீச முயன்ற சந்தேக நபர் கைது
- ரஷ்ய தாக்குதலில் 13 பேர் பலி

















