Posted in இலங்கை செய்திகள்

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு அரசாங்கம் விசேட நிவாரணம்

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு அரசாங்கம் விசேட நிவாரணம்: மீண்டும் விண்ணப்பிக்க கோரிக்கை

குறைந்த வருமானம் கொண்ட குடும்ப பயனாளர்களுக்கான நிவாரண தொகை எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் வழங்கப்படும் என பதில் நிதி அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

சமூக கட்டமைப்பில் ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்கும் செயற்திட்டத்தை வெளிப்படை தன்மையின் முன்னெடுக்கவும், தகுதியானவர்களுக்கு மாத்திரம் நிவாரணம் வழங்கவும் விசேட கவனம் செலுத்தியுள்ளோம்.

சமுர்த்தி பயனாளர்களில் 30 சதவீதத்துக்கும் அதிகமானோர் நிவாரண தொகையை பெற்றுக் கொள்வதற்கு தகுதியற்றவர்கள் என தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட பரசீலனைகள் ஊடாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. தகுதியுள்ளவர்கள் புறக்கணிக்கப்பட்டு, தகுதியற்றவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

அரச நிவாரண வழங்கல் திட்டத்தை மறுசீரமைக்கும் வகையில் அஸ்வெசும நிவாரண திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு விசேட ஒழுங்குவிதிகள் உருவாக்கப்பட்டுள்ளது.

அஸ்வெசும நிவாரண திட்டத்தில் குடும்ப அடிப்படையிலான பயனாளர்களின் பெயர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பல்வேறு தரப்பினர் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள்.

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு அரசாங்கம் விசேட நிவாரணம்: மீண்டும் விண்ணப்பிக்க கோரிக்கை

தகுதியானவர்கள் புறக்கணிக்கப்பட்டிருந்தால் அவர்கள் பிரதேச சபை ஊடாக எதிர்வரும் 30 ஆம் திகதி வரை மேன்முறையீடு செய்யலாம். அத்துடன் தகுதியற்ற ஒருவரின் பெயர் நிவாரண திட்ட பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருந்தால் பொது மக்கள் எவரும் உரிய பிரதேச சபையில் முறைப்பாடு செய்வோம்.

குடும்ப பயனாளர்களுக்கான நிவாரண தொகை எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் வழங்கப்படும். அத்துடன் நீரழிவு நோயாளர்கள், சிரேஷ்ட பிரஜைகள் மற்றும் விசேட தேவையுடையவர்கள் என்ற அடிப்படையில் தனிநபர் பயனாளர்களின் பெயர் பட்டியல் எதிர்வரும் இருவார காலப்பகுதிகளுக்குள் வெளியிடப்படும்.

அஸ்வெசும நிவாரண செயற்திட்டத்தின் இரண்டாம் கட்ட விண்ணப்பம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் கோரப்படும். இந்த ஆண்டு விண்ணப்பம் செய்யாதவர்கள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் விண்ணப்பிக்க முடியும்.

ஆகவே அஸ்வெசும நிவாரண செயற்திட்டம் சிறந்த முறையில் முன்னெடுக்கபடுகிறது. ஒருதரப்பினரது கோரிக்கைக்கு அமைய செயற்திட்டத்தை இடைநிறுத்த முடியாது. குறைப்பாடுகள் காணப்படுமாயின் அதனை ஆராய்ந்து தீர்த்துக் கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.

குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு 1 996 வீடுகள்
Posted in இலங்கை செய்திகள்

குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு 1 996 வீடுகள்

குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு 1 996 வீடுகள்

கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட வீட்டுத்திட்டங்களை தொடர்ந்தும் அமுல்படுத்துமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

நாடு பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், திறைசேரிக்கு சுமையை ஏற்படுத்தாமல் வீடமைப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நிதியைக் கண்டுபிடிப்பதில் கவனம் செலுத்துமாறும் அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

கலைஞர்கள் மற்றும் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கான ஐந்து வீட்டுத் திட்டங்களின் கீழ் 1,996 வீட்டு அலகுகளை நிர்மாணிக்கும் பணிகள் இந்த வருட ஆரம்பத்தில் ஆரம்பிக்கப்படும் என்று நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்தது.

சீன அரசின் கடன் உதவித் திட்டத்தின் கீழ் இந்த வீடுகள் கட்டப்படுகின்றன. சீன அரசாங்கம் 552 மில்லியன் யுவான் கடனுதவியை வழங்கும், அதற்கான ஒப்பந்தம் கடந்த ஆண்டு ஜனவரி 9ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ் குறைந்த வருமானம் பெறுவோருக்கு 1,888 வீடுகளும், பழம் பெரும் கலைஞர்களுக்கு 108 வீடுகளும் நிர்மாணிக்கப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு 1 996 வீடுகள்

பேலியகொட, மஹரகம, மொரட்டுவ, தெமட்டகொட ஆகிய பகுதிகளில் இந்த வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதுடன், கலைஞர்களுக்கான வீட்டுத்திட்டம் கொட்டாவ பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட உள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்காக சீன அரசு மற்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் பிரதிநிதிகள் இணைந்து மக்கள் தொகை ஆய்வை மேற்கொண்டுள்ளனர். நகர அபிவிருத்தி அதிகார சபையினால் வீடுகளை நிர்மாணிப்பதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான ஒப்பந்தத்தின் பிரதி நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த நவம்பரில் சீன அரசாங்கத்தினால் இந்த வேலைத்திட்டத்திற்காக நியமிக்கப்பட்ட நிறுவனத்திற்கு நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் நிதி அமைச்சின் முன்மொழிவுகள் அனுப்பி வைக்கப்பட்டன.

No posts found.
குறைந்த வருமானம் பெறும் 31 இலட்சம் குடும்பங்களுக்கு நலன்புரி உதவிகள்
Posted in இலங்கை செய்திகள்

குறைந்த வருமானம் பெறும் 31 இலட்சம் குடும்பங்களுக்கு நலன்புரி உதவிகள்

குறைந்த வருமானம் பெறும் 31 இலட்சம் குடும்பங்களுக்கு நலன்புரி உதவிகள்

இலங்கையிலுள்ள குறைந்த வருமானம் பெறும் 31 இலட்சம் குடும்பங்களுக்கு நலன்புரி உதவிகள் வழங்கும் வேலைத்திட்டம் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

‘எவரையும் கைவிடாதீர்’ எனும் தொனிப்பொருளில் நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்தத் திட்டத்தின் கீழ், சமுர்த்தி, முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறுநீரக நோய் வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் பயனடையும் குடும்பங்கள்

அல்லது தனிநபர்கள், மானியங்களை எதிர்பார்த்து காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்கள் மற்றும் தற்போதைய பொருளாதார நெருக்கடியால்

பாதிக்கப்பட்டு அரசாங்க உதவியை எதிர்பார்க்கும் நபர்கள் ஆகியோருக்கு இந்த சலுகைகள் கிடைக்கும் என்று இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ராஜாங்க அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான கால அவகாசம் ஒக்டோபர் 15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நலன்புரி நன்மைகள் சபையின் (www.wbb.gov.lk) இணையத்தளத்தில் இருந்து எவரும் உரிய விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும் கருத்து தெரிவித்த நிதி இராஜாங்க அமைச்சர்,

புதிய விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதன் ஊடாக தகுதியுள்ள அனைத்து பயனாளிகளையும் உள்வாங்க எதிர்பார்க்கிறோம். நலன்புரி நன்மைகள் சபையின் மூலம் தகுதியான அனைவருக்கும் நிவாரணங்கள் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.

சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டு கொடுப்பனவுகளை குறைப்பதற்கு அரசாங்கம் தயாராவதாக சிலர் பொய்ப்பிரசாரம் செய்து வருகின்றனர்.

தற்போது நலன்புரித்திட்ட உதவிகள் பெறும் குழுக்களையும், நலன்புரித்திட்ட உதவிகளுக்காக காத்திருக்கும் குழுக்களையும் சரியான முறையில் உள்வாங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இந்தத் திட்டத்தை நாம் விரைவில் செயல்படுத்துவோம். இந்த ஆண்டு இறுதிக்குள், அனைத்து தகவல்களையும் சேகரித்து, தேவையான, பொருத்தமான மற்றும் சரியான முறையில் கொடுப்பனவை வழங்க இருக்கிறோம்..

யாரையும் விட்டு விடாமல் இந்த கொடுப்பனவு வழங்க வேண்டும் என்ற தேசியப் பொறுப்பில் நாங்கள் ஒன்றுபட்டுள்ளோம்.

தற்போது பொது உதவி, நலன்புரித்திட்ட உதவிகள் மற்றும் ஊனமுற்றோர் உதவித்தொகை பெறும் பலர் உள்ளனர்.

அவர்கள் பிரதேச செயலகத்தில் பதிவு செய்வது கட்டாயமாகும். தற்போது குறைந்த அளவிலான பயனாளிகள் மட்டுமே பதிவு செய்துள்ளனர். அதனால்தான் பதிவு காலத்தை நீடித்திருக்கிறோம்.

இதனை மேலும் நீடித்தால் பயனாளிகளுக்கு கொடுப்பனவு வழங்குவது இன்னும் தாமதமாகும்.எனவே இதை துரிதமாக முன்னெடுக்க வேண்டும்.

அதற்கு நமக்கு ஒரு தரவு கட்டமைப்பொன்று அவசியமாகிறது. விண்ணப்பங்களைப் பெற்று தரவு கட்டமைப்பொன்றை தயாரிக்க இருக்கிறோம்.

தற்போது உதவித்தொகை பெறுபவர்களும் கட்டாயம் தங்களை பதிவு செய்ய வேண்டும். இதை வெளிப்படைத் தன்மையுடன் செய்ய தரவு கட்டமைப்பை தயாரித்துள்ளோம்.

கிராமத்து இளைஞர்களுக்கும் இதில் பெரும் பொறுப்பு உள்ளது. கிராமத்தில் உள்ள ஆதரவற்ற மக்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு இந்த திட்டம் தொடர்பாக தெளிவுபடுத்த முடியும்.

முதியவர்கள், ஊனமுற்றோர், சிறுநீரக நோயாளிகள் மற்றும் ஆதரவற்ற குடும்பங்கள் கிராமங்களில் வாழ்கின்றன.

அவர்கள் அனைவரையும் இந்தத் தரவுக் கட்டமைப்பிற்குள் உள்வாங்கி அவர்களின் நலன்களை கவனிக்க நலன்புரி நன்மைகள் சபை எதிர்பார்க்கிறது.

விண்ணப்பம் கிடைக்கப் பெற்றதன் பின்னர் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் சென்று குறித்த குடும்பங்கள் தொடர்பில் ஆராய்ந்து மேலதிக நடவடிக்கைகளை எடுப்பார்கள்.

பின்தங்கிய குடும்பங்களுக்கு புள்ளிகள் வழங்கும் முறையொன்றும் ஆரம்பிக்கப்படும். அதன்படி, அவை தரவு கட்டமைப்பில் சேர்க்கப்படும்.

இந்த செயல்பாட்டின் கீழ் தெரிவுசெய்யப்படாதவர்களுக்கு மேன்முறையீடு செய்ய முடியும். தகுதியற்ற ஒருவர் இதில் சேர்க்கப்பட்டிருந்தால் ஆட்சேபனை முன்வைக்க முடியும்.

யாருடைய கொடுப்பனவுகளையும் குறைப்பதற்காக இந்த செயற்பாடுகள் மேற்கொள்ளப்படவில்லை.


வெளிப்படையான முறையில் நலன்புரி கொடுப்பனவுகள் வழங்கப்படும்’’ என்றும் அவர் தெரிவித்தார்.