Tag: குண்டுவெடிப்பு
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் – உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் – உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி
இலங்கையில் கடந்த வருடம் உயிர்த்த ஞாயிறு அன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்ம
சாந்திக்காக இன்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் மௌன அஞ்சலி மற்றும் மத வழிபாடுகள் நடைபெற்றன.
திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலகத்தில் ஆளுனர் அனுராதா யஹம்பத் தலைமையில் உயிர்
இழந்தவர்களின் ஈத்ம சாந்திக்காக மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இன்று காலை 8.45 மணியளவில் இடம் பெற்று இந்த நிகழ்வில் அலுவலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
மலையகத்திலும் இன்று (21.04.2020) வழிபாடுகள் நடைபெற்றன.
மலையகத்திலுள்ள தேவாலயங்களில் இன்று விசேட ஆராதனைகள் நடைபெற்றன.
கோவில்கள்இ விகாரைகள்இ பள்ளிவாசல்கள் ஆகியவற்றிலும் உயிரிழந்த மக்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி வழிபாடுகள் இடம்பெற்றன.


மைத்திரி ரணில் சிறை செல்லும் அபாயம்
மைத்திரி ரணில் சிறை செல்லும் அபாயம்
இலங்கையில் தொடராக இடம்பெற்ற எட்டு வெடிகுண்டு தாக்குதலின் பொழுது உளவு பிரிவினருக்கு குண்டு வெடிப்பு தொடர்பாக தகவல் கிடைக்க பெற்ற பொழுதும்
அதனை கவனத்தில் எடுத்து மக்கள் பாதுகாப்பை வழங்க மறுத்தமை தொடர்பில்
பொறுப்புக்கூறும் வகையில் நீதி மன்றுக்கு ரணில்,மற்றும் மைத்திரி செல்லும் நிலை தோற்றம் பெற்றுள்ளது
இந்தியா மூன்று முறை மேற்படி தகவலை வழங்கி இருந்தும் அதனை அவ்வேளை நாடாண்ட நல்லாட்சி என படும்
ரணில் ,மைத்திரி ஆட்சி தடுக்க தவறியதன் விளைவாக பல நூறு மக்கள் பலியாகி இருந்தமை குறிப்பிட தக்கது
இந்த விசாரணைகள் திட்டமிட்டபடி நடைமுறை படுத்த பட்டால் இருவரும் சிறை செல்லும் நிலை ஏற்படலாம் என எதிர் பார்க்க படுகிறது







