Posted in Uncategorized உலக செய்திகள்

உலக பணக்காரர்கள் வரிசையில் கவுதம் அதானி 6-வது இடம்

உலக பணக்காரர்கள் வரிசையில் கவுதம் அதானி 6-வது இடம்

கவுதம் அதானியின் சொத்து தற்போது கூகுள் நிறுவனத்தை சேர்ந்த லேரி பேஜ் மற்றும் செர்ஜிபிரின் ஆகியோரை விட அதிகமாக உள்ளது.

உலக பணக்காரர்கள் வரிசையில் கவுதம் அதானி 6-வது இடம்
கவுதம் அதானி

உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்கள் பட்டியலில் அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி இருக்கிறார். கடந்த ஆண்டில் அதிகமாக சொத்து சேர்த்த வகையில் அவர் மிகப்பெரிய லாபம் அடைந்தார்.

கவுதம் அதானி கடந்த ஆண்டே ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தார். அவர் ரிலையன்ஸ் குழும நிர்வாக இயக்குனர் மற்றும் தலைவருமான முகேஷ் அம்பானியை பின்னுக்கு தள்ளினார்.

இந்த நிலையில் உலக பணக்காரர்கள் வரிசையில் பட்டியலில் கவுதம் அதானி 6-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். போர்ப்ஸ் வெளியிட்ட தகவல்படி அவர் அமெரிக்காவின் சாப்ட்வேர் சக்கரவர்த்தி லேரி எலிசனை முந்தினார்.

கவுதம் அதானியின் சொத்து நேற்று (ஏப்ரல் 11) ஒரே நாளில் ரூ.68 ஆயிரம் கோடி உயர்ந்து உள்ளது. அதன் காரணமாக அவர் உலக பணக்காரர்களின் வரிசையில் 6-வது இடத்தை பிடித்துள்ளார்.

கவுதம் அதானியின் சொத்து தற்போது கூகுள் நிறுவனத்தை சேர்ந்த லேரி பேஜ் மற்றும் செர்ஜிபிரின் ஆகியோரை விட அதிகமாக உள்ளது.

நேற்றைய வர்த்தகம் முடிவில் கவுதம் அதானியின் சொத்து மதிப்பு ரூ.9.27 லட்சம் கோடியாகும். இது முகேஷ்அம்பானியின் சொத்தைவிட ரூ.1.67 லட்சம் கோடி

அதிகமாகும். 2 வாரத்தில் இருவருக்கும் இடையே உள்ள சொத்து மதிப்பு வித்தியாசம் அதிகமாகி உள்ளது. கவுதம் அதானியின் 7 நிறுவனத்தின் பங்குகளின் விலையால் அவரது சொத்து மதிப்பும் அதிகரித்து உள்ளது.

அதானி குழுமத்தின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனமான அதானி கிரீன் எனர்ஜியின் பங்குகள் விலை 20 சதவீதம் அதிகரித்து உள்ளது.
இதனால் தான் ஒரே நாளில் அவரது சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது.

Posted in உலக செய்திகள்

1,002 கோடியுடன் பணக்காரர்கள் பட்டியலில் 2-வது இடத்தில் கவுதம் அதானி

1,002 கோடியுடன் பணக்காரர்கள் பட்டியலில் 2-வது இடத்தில் கவுதம் அதானி

ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் ரிலையன்ஸ் சேர்மன் முகேஷ் அம்பானி முதல் இடம் வகிக்கும் நிலையில், கவுதம் அதானி 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

தினசரி வருவாய் ரூ. 1,002 கோடியுடன் பணக்காரர்கள் பட்டியலில் 2-வது இடத்தில் கவுதம் அதானி
கவுதம் அதானி


ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் ரிலையன் சேர்மன் முகேஷ் அம்பானி முதல் இடத்தில் உள்ள நிலையில், அதானி குழுமத்தின் கவுதம் அம்பானி 2-வது இடத்திற்கு உயர்ந்துள்ளார். இந்த

உயர்வுக்கு காரணம் அவரது சொத்து மதிப்பு 1,40,200 கோடி ரூபாயில் இருந்து 5,05,900 கோடி ரூபாயாக உயர்ந்ததுதான். இது ஏறக்குறைய நான்கு மடங்கு அதிகமாகும். கவுதம் அதானியின்

தினசரி வருவாய் 1002 கோடி ரூபாய் ஆகும். இதன் மூலம் சீனாவின் தண்ணீர் பாட்டில் தயாரிக்கும் ஜோங் ஷன்ஷானை முந்தியுள்ளார்.

ரிலையன்ஸ் சேர்மன் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 7,18,000 கோடி ரூபாயாகும். கவுதம் அதானியின் சகோதரர் வினோத் ஷாந்திலால் அதானி 1,31,600 கோடி ரூபாய் உடன் 8-வது இடத்தில் உள்ளார். இவரது சொத்து மதிப்பு மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.

முகேஷ் அம்பானி

ஷிவ் நாடார் மற்றும் அவரது குடும்பம் 2,36,600 கோடி ரூபாய் உடன் 3-வது இடத்தில் நீடிக்கிறது. ஹெச்.பி. இந்துஜா 2,20,000 கோடி ரூபாய் உடன் 4-வது இடத்தில் உள்ளார். சைரஸ் எஸ். பூனவல்லா

,74,400 கோடியுடன் 6-வது இடத்தில் உள்ளார். இந்தத் தகவலை ஐ.ஐ.எஃப்.எல். நிறுவனம் வெளியிட்டுள்ளது.