Tag: கனடா புதிய பிரதமரின் அதிரடி அறிவிப்பு
Posted in உலக செய்திகள்
கனடா புதிய பிரதமரின் அதிரடி அறிவிப்பு
Author: நிருபர் காவலன் Published Date: 15/03/2025
கனடா புதிய பிரதமரின் அதிரடி அறிவிப்பு
கனடா புதிய பிரதமரின் அதிரடி அறிவிப்பு ,கனடாவின் புதிய பிரதமராக பதவியேற்றுக் கொண்ட மார்க் கார்னி கனடா அமெரிக்காவின் ஒரு பகுதியாக ஒருபோதும் இருக்கப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.
கனடாவின் புதிய பிரதமராக நேற்று பதவியேற்றுக் கொண்டதன் பின்னர் நிகழ்த்திய உரையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
‘மற்றுமொருவர் கொண்டு செல்ல முடியாத வகையில் நம்மை நாமே கட்டியெழுப்ப வேண்டும்” என்று கனடாவின் புதிய பிரதமர் தமது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கு தமது அரசாங்கம் இன்னும் நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பிரதமராக பதவியேற்றதன் பின்னர் தமது முதலாவது சர்வதேச விஜயமாக அடுத்த வாரம், அவர் பிரித்தானியாவுக்கும் பிரான்ஸுக்கும் விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.







