Tag: கந்தகாடு
Posted in இலங்கை செய்திகள்
கந்தகாடு நிர்வாகத்தை மாற்ற அவதானம்
Author: நிருபர் காவலன் Published Date: 14/01/2024
கந்தகாடு நிர்வாகத்தை மாற்ற அவதானம்
தொடர்ந்து மோதல்கள் இடம்பெறும் கந்தகாடு புனர்வாழ்வு நிலையம் தொடர்பில் புதிய வேலைத்திட்டம் ஒன்றை அமுல்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அதன் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பிலான கலந்துரையாடல் எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ளதாக அமைச்சர் இன்று அத தெரணவிடம் தெரிவித்தார்.
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தின் நிர்வாக மாற்றம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் உணவுப் பிரச்சினை காரணமாக ஏற்பட்ட மோதலால் 29 கைதிகள் நேற்று (12) தப்பிச் சென்ற நிலையில், அவர்களில் 16 பேர் மாத்திரம் இன்று புலஸ்திபுர பொலிஸில் சரணடைந்துள்ளனர்.
- செல்லப்பா உன்ன தேசம் மறக்குமா |709|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa
- பாணரே எங்க பாணரே |707|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa
- செல்லப்பா செல்லப்பா தேனிசை செல்லப்பா |706| Thenisai Chellappa
- செல்லப்பா எங்க செல்லப்பா |705| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa
- தேசம் மறக்குமா எங்க தேசம் மறக்குமா செல்லப்பா |704| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa












