3பொலிஸாருக்கு 7வருட கடூழிய சிறை
Posted in இலங்கை செய்திகள்

3பொலிஸாருக்கு 7வருட கடூழிய சிறை

3பொலிஸாருக்கு 7வருட கடூழிய சிறை

3பொலிஸாருக்கு 7வருட கடூழிய சிறை ,பொலன்னறுவையில் ஹோட்டல் ஒன்றின் முகாமையாளர் ஒருவரை 2004 ம் ஆண்டு தாக்கியதில் அவர்

உயிரிழந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 3 பொலிஸாருக்கு பொன்னறுவை மேல் நீதிமன்ற நீதிபதி 7 வருட கடூழிய சிறை தண்டனை வழங்கி வெள்ளிக்கிழமை (12) தீர்ப்பளித்தார். .

பொலன்னறுவை மாவட்ட போதை ஒழிப்பு பொலிஸ்

பொலன்னறுவை மாவட்ட போதை ஒழிப்பு பொலிஸ் பிரிவினர் கடந்த 2004ம் ஆண்டு பொலிஸ் பரிசோதகர் தலைமையில் 4 பொலிஸார் ஹோட்டல் ஒன்றில் சட்டவிரோத மதுபானம் தேடி சென்று சோதனை நடத்திய நிலையில் அந்த

ஹோட்டலின் முகாமையாளருக்கும் பொலிஸாருக்கும் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தையடுத்து முகாமையாளர் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியதில் அவர் உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து குறித்த 4 பொலிஸாரையும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர்

நீதிமன்ற பிணையில் வெளிவந்ததுடன் அவர்கள், பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

வழக்கு விசாரணை பொலன்னறுவை மேல் நீதிமன்றத்தில்

இந்த நிலையில் குறித்த வழக்கு விசாரணை பொலன்னறுவை மேல் நீதிமன்றத்தில் இடம் பெற்று வந்த நிலையில் பொலிஸ் பரிசோதகர் வசந்த, நோய் காரணமாக உயிரிழந்துள்ளார்.

இதனை தொடர்ந்து ஏனைய 3 பொலிஸாருக்கு 2025 ம் ஆண்டு கடந்த ஜனவரி மாதம் மீண்டும் பணியில் இணைந்து கொண்டதுடன் அவர்களில் ஒருவரான

பொலிஸ் கான்ஸ்டபிள் ஜெகத் பிரியந்த மட்டக்களப்பு பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்துக்கும் ஏனைய இருவரும் வேறு மாவட்டங்களில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு இடமாற்றப்பட்டனர்

இவ்வாறான நிலையில் வெள்ளிக்கிழமை (12) மேல் நீதிமன்றில் வழக்கு விசாரணைக்கு எடுத்து கொண்ட போது 3 பொலிசாரும் ஆஜராகிய நிலையில் நீதிபதி 3 பேரும் குற்றவாளிகள் என சாட்சிகள் மற்றும் ஆதாரங்கள் மூலம்

கண்டறியப்பட்டதை அடுத்து அவர்களுக்கு 7 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

இதையடுத்து 3 பேரையும் சிறைச்சாலை அதிகாரிகள் பொறுப்பேற்று பொலன்னறுவை சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்றனர்.

மஹிந்தானந்த பெர்னாண்டோவுக்கு கடூழிய சிறை
Posted in இலங்கை செய்திகள்

மஹிந்தானந்த பெர்னாண்டோவுக்கு கடூழிய சிறை

மஹிந்தானந்த பெர்னாண்டோவுக்கு கடூழிய சிறை

மஹிந்தானந்த பெர்னாண்டோவுக்கு கடூழிய சிறை ,முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர், முன்னாள் வர்த்தக அமைச்சருமான நளின்

பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் குறித்த இருவரும் குற்றவாளிகள் என மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது, ​​சதொச ஊடாக 14,000 கேரம் பலகைகளை கொள்வனவு செய்ததன் மூலம் 53 மில்லியன்

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு

ரூபா நட்டம் ஏற்பட்டதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு குற்றம் சுமத்தியிருந்தது.

அதற்கமைய, குறித்த வழக்கு இன்று மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதன்படி, சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர், முன்னாள் வர்த்தக அமைச்சருமான நளின் பெர்னாண்டோவுக்கு 25 வருட கடூழிய

கடூழிய சிறைத்தண்டனை

சிறைத்தண்டனையும், முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவுக்கு 20 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

தீர்ப்புக்கு முன்னர் நீதிமன்றத்தில் சாட்சியங்களை சமர்ப்பித்த இலஞ்ச விசாரணை ஆணைக்குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரி, இந்த

பிரதிவாதிகள் தங்கள் பதவியின் அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்வதன் மூலம் தவறான செயலைச் செய்துள்ளதாக குறிப்பிட்டார்.

இந்தத் தவறு காரணமாக, அரசாங்கம் 53 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பொது வரி வருமானத்தை இழந்துள்ளதாகவும், இதனால் பொதுமக்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, இதுபோன்ற குற்றங்களைச் செய்யத் தயாராகி வருபவர்களுக்கு ஒரு பாடமாக அமையும் வகையிலும் ஊழல் எதிர்ப்பு ஆர்வலர்களை ஊக்குவிக்கும்

வகையிலும் தீர்ப்பை வெளியிடுமாறு இலஞ்ச விசாரணை ஆணைக்குழு சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தைக் கோரினார்.

முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த பின்னர், நீதிபதி மஹேன் வீரமன் தலைமையிலான மூவரடங்கிய மேல் நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

குருநாகல் முன்னாள் நகர முதல்வகுருநாகல் 03 வருட கடூழிய சிறை
Posted in இலங்கை செய்திகள்

குருநாகல் முன்னாள் நகர முதல்வகுருநாகல் 03 வருட கடூழிய சிறை

குருநாகல் முன்னாள் நகர முதல்வகுருநாகல் 03 வருட கடூழிய சிறை

குருநாகல் முன்னாள் நகர முதல்வகுருநாகல் முன்னாள் நகர முதல்வர் துஷார சஞ்சீவ விதாரண உள்ளிட்ட 5 பிரதிவாதிகளுக்கு 03 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குருநாகல் நகரில் அமைந்துள்ள புவனேகபாகு மன்னர் காலத்து ராஜசபை கட்டடத்தை இடித்ததாக குறித்த சந்தேக நபர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இதன்போது முன்னாள் நகர முதல்வர் துஷார சஞ்சீவ விதாரண உள்ளிட்ட 5 பிரதிவாதிகளுக்கு 03 வருட கடூழிய கடூழிய சிறைத்தண்டனை விதித்து குருநாகல் மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

புவனேகபாகு மன்னர் காலத்து ராஜசபை கட்டடத்தை இடித்தமைக்காக குருநாகல் மாவட்டத்தின் முன்னாள் நகர முதல்வர் துஷார சஞ்சீவ விதாரண

உள்ளிட்ட சிலருக்கு எதிராக சட்டமா அதிபர் உயர்நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.ருக்கு கடூழிய சிறைத்தண்டனை

வீடியோ

சிறுமி வன்புணர்வு 66 வயதானவருக்கு கடூழிய சிறை
Posted in இலங்கை செய்திகள்

சிறுமி வன்புணர்வு 66 வயதானவருக்கு கடூழிய சிறை

சிறுமி வன்புணர்வு 66 வயதானவருக்கு கடூழிய சிறை

சிறுமி ஒருவரை தனது 44 வயதில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட ஒருவருக்கு எம்பிலிப்பிட்டிய மேல் நீதிமன்ற நீதிபதி 25 வருடங்கள் கடூழிய சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

சம்பவம் இடம்பெற்றபோது சந்தேகநபருக்கு 44 வயதாகும். தற்போது அவருக்கு 66 வயதாகு

இச்சம்பவம் தொடர்பில் எம்பிலிப்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்டிருந்த முறைப்பாட்டுக்கு இணங்க பொலிஸார் எம்பிலிப்பிட்டிய

செவனகல மஹகம பிரதேசத்தை சேர்ந்த சந்தேக நபருக்கு எதிராக எம்பிலிப்பிட்டிய மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர்.

சிறுமி வன்புணர்வு 66 வயதானவருக்கு கடூழிய சிறை

சிறுமி மீது குறித்த நபர் 2011 ஆண்டு பல முறை பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டதாக குறிப்பிட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கின் தீர்ப்பு 12 ஆண்டுகளுக்கு பின் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.

தீர்ப்பினை வழங்கிய நீதிபதி புத்திக சீராகல சிறைத்தண்டனையுடன் சிறுமிக்கு 2 இலட்சம் ரூபாய் நஷ்ட ஈட்டை வழங்குமாறும் 25,000 ரூபாய் அபராதத்தை செலுத்துமாறும் தீர்ப்பளித்தார்.