Tag: கடும் வெப்பம்
கடும் வெப்பம் மக்களுக்கு எச்சரிக்கை
கடும் வெப்பம் மக்களுக்கு எச்சரிக்கை
நாட்டின் பல பகுதிகளில் கடுமையான வெப்பம் காரணமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், வெப்ப சுட்டெண் ஆலோசனையை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்திலும் சில இடங்களில் வெப்பச் சுட்டெண், எச்சரிக்கை மட்டம் வரை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
ஈரப்பதம் மற்றும் அதிகபட்ச வெப்பநிலையைப் பயன்படுத்தி வெப்பசுட்டெண் கணக்கிடப்படுவதுடன், இது ஒரு நபரின் உடலில் உணரப்படும் நிலை என்பது குறிப்பிடத்தக்கது.
கடும் வெப்பம் மக்களுக்கு எச்சரிக்கை
சுகாதாரம் மற்றும் சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சின் ஆலோசனையின்படி தயாரிக்கப்பட்ட சுட்டெண்ணின்படி, ‘எச்சரிக்கை’ நிலை என்பது நீண்டகால வெளிப்பாடு மற்றும் செயல்பாடுகளால் சோர்வு மற்றும் வெப்ப பிடிப்புகளையும் ஏற்படுத்தலாம்.
கடுமையான வெளிப்புற நடவடிக்கைகளைக் கட்டுப்படுமாறும், குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் நோயாளிகளைக் கவனிக்குமாறும், வெள்ளை அல்லது வெளிர் நிற ஆடைகளை அணியுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் நீராகாராங்களைப் பருகுமாறும், முடிந்தவரை அடிக்கடி நிழலில் ஓய்வெடுக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
- 2.5 மில்லியன் டாலர் கொள்ளை அனுரா அரசு சாதனைby நிருபர் காவலன்
- 13 2 பில்லியன் NDB மோசடி அனுரா அரசின் ஊழல்by நிருபர் காவலன்
- முன்னாள் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகோடிக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுby நிருபர் காவலன்
- விஜய் ஆட்சி அமைக்க திண்டாட்டம்by நிருபர் காவலன்
- வாகன விலைகள் மேலும் உயர்கின்றனby நிருபர் காவலன்
கடும் வெப்பம் வடக்கு கிழக்கில் மக்கள் அவதி
கடும் வெப்பம் வடக்கு கிழக்கில் மக்கள் அவதி
சமகாலத்தில் நாட்டில் நிலவும் கடும் வறட்சி மற்றும் வெப்பமான காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அடுத்த சில நாட்களில் சில பகுதிகளில் வழக்கத்திற்கு மாறாக வெப்பமான காலநிலை நிலவும் என திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
கிழக்கு, வடமத்திய மாகாணங்களிலும் வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, குருநாகல், மன்னார், மொனராகலை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்றைய தினம் வெப்பச் சுட்டெண் குறிப்பிடத்தக்க அளவில் தொடரும் என வானிலை அறிக்கை தெரிவிக்கிறது.
எனினும் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் பொதுமக்கள் பகலில் வெளியில் நேரத்தை செலவிடும் போது அதிக தண்ணீர் மற்றும் அதிகப்படியான திரவங்களை அருந்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது


















