Posted in இலங்கை செய்திகள்

எவருக்கும் அடிபணியாது – நாட்டை கொண்டு செல்வேன் – கோட்டா முழக்கம்

எவருக்கும் அடிபணியாது – நாட்டை கொண்டு செல்வேன் – கோட்டா முழக்கம்

9வது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து ஜனாதிபதி தெரிவிப்பு…

 அரசாங்கத்தின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை பாதுகாக்கப்படும்…

 19வது அரசியலமைப்பு திருத்தம் நீக்கப்படும்…

 ஒரு நாடு ஒரே சட்டம் என்ற எண்ணக்கருவுக்கு முதலிடம் வழங்கும் புதிய அரசியலமைப்பு…

 அமைச்சுக்கள்இ நிறுவனங்களில் வீண்விரயம் மற்றும் ஊழலுக்கு முற்றுப்புள்ளி…

 மக்கள் பிரதிநிதிகள் தொடர்ச்சியாக மக்களிடம் செல்ல நடவடிக்கை…

எந்தவொரு சக்திக்கும் அடிபணியாது நாட்டின் இறைமையையும் நாட்டு மக்களையும் பாதுகாத்து நாட்டை சுபீட்சத்தை நோக்கி கொண்டு செல்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

கட்டியெழுப்பப்பட்டுள்ள நம்பிக்கையின் காரணமாக இம்முறை பொதுத் தேர்தலில் மக்கள் உற்சாகமாக எமக்கு ஆதரவு வழங்கியுள்ளனர். அந்த நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையில்

மக்களுக்கு தொடர்ந்தும் சேவை செய்வதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். எக்காரணத்தினாலும் அந்த எதிர்பார்ப்புகள்

வீண்போவதற்கு நாம் இடமளிக்க மாட்டோம் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

நேற்று (20) பிற்பகல் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து ஆற்றிய கொள்கைப் பிரகடன உரையின்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஒன்பதாவது பாராளுமன்றக் கூட்டத்தொடரை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு பாரம்பரியங்களுக்கு முன்னுரிமையளித்து எளிமையாக

நடைபெற்றது. அணிவகுப்பு ஊர்வலம் போன்ற அம்சங்கள் நிகழ்வில் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.

பாராளுமன்ற கட்டிடத்தொகுதிக்கு வருகைதந்த ஜனாதிபதி அவர்களை புதிய சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்த்தன மற்றும்

பாராளுமன்றத்தின் பொதுச் செயலாளர் தம்மிக தசநாயக ஆகியோர் வரவேற்றனர்.

பிரதான வாயிலில் பாடசாலை மாணவிகள் மங்கள கீதம் இசைத்து ஜனாதிபதியை வரவேற்றனர்.

ஆகஸ்ட் மாதம் 05ஆம் திகதி இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தல் இலங்கை தேர்தல் வரலாற்றில் புரட்சியொன்றை ஏற்படுத்திய ஒரு முக்கிய தேர்தலாகும். வரலாற்றில் முதற் தடவையாக விகிதாசார

முறைமையின் கீழ் இடம்பெற்ற தேர்தல் ஒன்றில் 2ஃ3 வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மக்கள் ஆணையுடன் ஸ்திரமான ஆட்சியொன்றை அமைக்கும் வாய்ப்பு அரசாங்கத்திற்கு

கிடைத்துள்ளது. இந்த மக்கள் ஆணையை வழங்கிய நாட்டுப் பற்றுடைய மக்களுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதிஇ மக்கள்

அரசாங்கத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் மக்களுக்கு தொடர்ச்சியாக சேவைகளை வழங்குவதாக குறிப்பிட்டார்.

ஜனாதிபதி தேர்தல் முதல் பாராளுமன்ற தேர்தல் வரையான காலம் எமக்கு மிகவும் சவால்மிக்க ஒரு காலப்பகுதியாக இருந்தது. வீழ்ச்சியடைந்திருந்த ஒரு பொருளாதாரத்தையே நாம்

பொறுப்பேற்றோம். இதற்கு மேலதிகமாக எமக்கு இக்காலப்பகுதியில் முழு உலகையும் ஆட்கொண்டிருந்த கொவிட் 19 நோய்த் தொற்றுக்கு முகங்கொடுக்க வேண்டியதாயிற்று. நோய்த்

தொற்று நிலைமை பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக நாம் மேற்கொண்ட நடவடிக்கைகள் வெளிநாடுகளினதும் பாராட்டைப் பெற்றது. இந்த ஒன்பது மாதக் காலப் பகுதியில் பல்வேறு

தடைகளுக்கு மத்தியில் நாம் நாட்டை நிர்வகித்த முறைபற்றி நாட்டு மக்கள் தெளிவுடன் உள்ளார்கள் என்பதை கிடைத்துள்ள மிகப்

பெரும் மக்கள் ஆணை எடுத்துக்காட்டுகிறது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

நாட்டின் அரசியலமைப்பின் பிரகாரம் தனது பதவிக்காலப் பகுதியில் நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாப்பதாகவும்இ பௌத்த சாசனத்தை பாதுகாத்து வளப்படுத்துவதாகவும் தான்

உறுதியளித்திருப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதிஇ அரச நிர்வாகத்திற்காக ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்கு தான் முன்னணி பௌத்த பிக்குகளைக் கொண்ட ஆலோசனை சபை

ஒன்றை அமைத்துள்ளதாகவும் குறிப்பிட்டார். தொல்பொருள் பெறுமதிவாய்ந்த இடங்களை பாதுகாப்பதற்கும் பௌத்த மரபுரிமைகளை பாதுகாப்பதற்கும் விசேட செயலணி ஒன்று

அமைக்கப்பட்டுள்ளது. பௌத்த சமயத்திற்கான முன்னுரிமையை உறுதிசெய்யும் அதேநேரம்இ இந்த நாட்டின் எந்தவொரு பிரஜையும் தாம் விரும்பும் சமயத்தை பின்பற்றுவதற்கான சுதந்திரம் மிகச்

சிறப்பாக பாதுகாக்கப்பட்டுள்ளது என்பதுவும் மக்களுக்கு தற்போது தெளிவாகியுள்ளது.

2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் காரணமாக வீழ்ச்சியடைந்திருந்த நாட்டின் பாதுகாப்பு பற்றிய நம்பிக்கை உறுதி செய்யப்பட்டு சுதந்திரமாக வாழக்கூடிய

சூழல் ஒன்று மீண்டும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று தான் உறுதியளித்தவாறு பொதுவான மக்கள் வாழ்க்கைக்கு தடையாக உள்ள பாதாள உலக செயற்பாடுகள்இ போதைப்பொருள்

பிரச்சினை போன்ற சமூக சீரழிவுகளில் இருந்து மக்களை மீட்பதற்காக முறையான வேலைத்திட்டமொன்று

முன்னெடுக்கப்பட்டு இருப்பது மக்களின் நம்பிக்கை மேம்படுத்துவதற்கு காரணமாகியுள்ளது என ஜனாதிபதி தெரிவித்தார்.

நாட்டின் அரசியல் கலாசாரத்தில் தெளிவானதொரு மாற்றத்தை செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதில் ஒரு கட்டமாக அரச நிறுவனங்களுக்கு தலைவர்களை நியமிப்பதற்காக

அதுவரையில் இருந்துவந்த சம்பிரதாயங்களை மாற்றி நிபுணர் குழுவொன்றின் ஊடாக தகைமைகளை கண்டறிந்து

நியமனங்களை மேற்கொள்ளும் முறையான பொறிமுறையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதேபோன்று உற்பத்தி பொருளாதாரம் ஒன்றை கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் விவசாயத்துறையில் புத்தெழுச்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது. சுதேச வர்த்தகர்களையும் தொழிற்துறையாளர்களையும் பாதுகாப்பதற்கு இறக்குமதியை மட்டுப்படுத்தியதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

மக்கள் வாக்குகளினால் தெரிவு செய்யப்படும் மக்கள் பிரதிநிதி ஒருவரின் அடிப்படை பொறுப்பு மக்கள் சேவையாகுமென்பதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதிஇ அனைத்து பதவிகளும்

பொறுப்புக்களே அன்றி வரப்பிரசாதங்கள் அல்ல என்றும் அதனை நினைவில் வைத்து மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.


சுதந்திரம் பெற்று 72 வருடங்களின் பின்னரும் மக்களின் பெரும்பாலான சாதராணமான தேவைகளுக்கும் தீர்வுகள் கிடைக்கப்பெறவில்லை என்பதை தான் தேர்தல் காலத்தில் நாடளாவிய ரீதியில் மேற்கொண்ட சுற்றுப் பயணத்தின் போது நேரில் கண்டுகொண்டதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள்இ பல ஆண்டுகளாக தாம் வாழ்ந்து வரும் காணிகளுக்கு உரிய உறுதிகள் கிடைக்கப்பெறாத மக்கள் உள்ளனர். குடிநீர் பிரச்சினைஇ யானைகள் – மனிதர்கள் மோதல் பிரச்சினையை தீர்த்தல்இ கிராமிய வைத்தியசாலைகளின் வளங்கள்இ வசதிகளை மேம்படுத்தல்இ அனைத்து பிள்ளைகளுக்கும் சமமான கல்வி வாய்ப்பினை வழங்குதல் போன்றவற்றுக்கு ஒரு விசேட நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பிக்கப்படும் என்றும் கூறினார்.

வேலை வாய்ப்பின்மை பிரச்சினையை தீர்ப்பதற்கு குறுகிய காலஇ நீண்டகால தீர்வுகள் வழங்கப்படுவதுடன்இ தேசிய பொருளாதாரத்தை பலப்படுத்திஇ ஏற்றுமதி வருமானத்தை அதிகரிப்பதும் அரசாங்கத்தின் அடிப்படை இலக்காகும். விவசாயத் துறையை முழுமையாக சேதன பசளைப் பாவனைக்கு மாற்றுவதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

துரிதமானதும் வினைத்திறன் வாய்ந்ததுமான அரச சேவையை தாபிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன்இ அனைத்து அமைச்சுக்கள்இ நிறுவனங்களில் வீண்விரயத்தையும் ஊழலையும்

முழுமையாக ஒழிக்க நடவடிக்கை எடுப்போம் என்றும் வீண்விரயம்இ ஊழலுடன் சம்பந்தப்படுபவர்களுக்கு அவர்களது

தராதரங்களை பொருட்படுத்தாது சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தான் பின்னிற்க மாட்டேன் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். ஏதேனும் ஒரு அமைச்சு அந்த

இலக்குகளை அடைவதில் பின்னிற்குமாயின்இ அரசாங்கத்தின் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான

மாற்றங்களை செய்வதற்கும் தான் ஒருபோதும் பின்னிற்கப் போவதில்லை என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் அமைச்சர்கள்இ இராஜாங்க அமைச்சர்கள்இ பாராளுமன்ற உறுப்பினர்கள் அடிக்கடி மக்களிடம் சென்று அவர்களது

உண்மையான பிரச்சினைகளை கண்டறிந்து அவற்றுக்கு தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

அரசியலமைப்பில் மாற்றத்தை செய்வதற்காக நாம் கோரிய மக்கள் ஆணை எமக்கு கிடைக்கப் பெற்றுள்ள காரணத்தினால் எமது முதலாவது பணியாக நாம் மக்களுக்கு உறுதியளித்தவாறுஇ

19வது அரசியலமைப்பு திருத்தத்தை நீக்க நடவடிக்கை எடுப்போம் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். அனைவருடனும் இணைந்து நாட்டுக்கு தேவையானதும் பொருத்தமானதுமான புதிய

அரசியலமைப்பொன்றை கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதன் போது ‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ என்ற

எண்ணக்கருவுக்கு முதலிடம் வழங்கப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

‘நான் எனது நாட்டை நேசிக்கின்றேன். நான் எனது நாடு குறித்து பெருமையடைகிறேன். எனக்கு எனது நாடு பற்றிய ஒரு தொலைநோக்குள்ளது. எமது நோக்கம் வினைத்திறன் மிக்க

பிரஜைஇ மகிழ்ச்சியாக வாழும் குடும்பம்இ ஒழுக்கப் பண்பாடான சமூகத்தைக் கொண்ட சுபீட்சமான தேசத்தை

கட்டியெழுப்புவதாகும்’ எனக் குறிப்பிட்ட ஜனாதிபதிஇ மக்களுக்கு உறுதியளித்த சுபீட்சமான தேசத்தை கட்டியெழுப்புவதற்காக

தன்னுடன் ஒன்றிணையுமாறு அனைவருக்கும் நட்புக் கரம் நீட்டி அழைப்பு விடுப்பதாகவும் தெரிவித்தார்.