Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

எட்டப்பரே உமக்கு எச்சரிக்கை …!

எட்டப்பரே உமக்கு எச்சரிக்கை …!

குண்டெறிந்து வீடழித்து
குடி மகிழ்ந்த குடியரசு
தந்திடுமா தமிழருக்கு
தனி வீடாம் தனி யரசு …?

புலி என்று தமிழ் அழித்து
புலிவேட்டை முடித்தவர்கள்
காலடியில் நசுங்கும் தமிழ்
கண்டிடுமா கல் வீடு …?

கோவணத்தை இழந்து விட்டு
கோடியிலே நிற்கும் தமிழ்
ஆவணத்தை காட்டி விடின்
அலரி மாளிகை கொஞ்சிடுமா …?

கடப்பையில நின்றவர்கள்
காலாட்டி நடக்கையில
கோல் ஊன்றி நின்றவர்கள்
கொதிக்காரா வெடிக்காரா …?

காற்சட்டை நனைந்தவர்கள்
காரிலே ஊர்வலமாம்
நாளை அவர் வருவார்கள்
நன்றாக சுற்றி வா

ஏளனம் விதைப்பவரே
எண்ணி சில ஆண்டுக்குள்
முன்னேறி வருவார்கள்
முதுகெலும்பு உடைப்பார்கள்

தப்பி ஓட நாடின்றி
தம்பிகளா தவிப்பீர்
கல் வீட்டு கண்ணீர்
காலடி கழுவும்

ஆறடி இன்றி
அடையாளம் தொலைப்பீர்
வேரடி இன்றி
வேளைக்கு முடிவீர்

காலம் சில காலம்
காவடிகளே ஆடும்
கார்த்திகை பூக்கும்
கனரகம் கொதிக்கும் …..!

வன்னி மைந்தன்
ஆக்கம் -11-10-2020

Home » எட்டப்பரே உமக்கு