Tag: உடல் எடை
உடல் எடையால் ஐரோப்பாவில் 12 லட்சம் மக்கள் மரணம் – அதிர்ச்சி தகவல்
உடல் எடையால் ஐரோப்பாவில் 12 லட்சம் மக்கள் மரணம் – அதிர்ச்சி தகவல்
ஐரோப்பாவில் அதிக உடல் எடை கொண்ட நாடாக பிரிட்டன் இடம் பிடித்துள்ளது ,இந்த
உடை எடை அதிகரிப்பால் ,அவர்கள் தம் அவயவங்களை இழக்கும் நிலை ஏற்படுகிறது.
மேலும் இந்த உடல் எடையால் ஆண்டு தோறும் பண்ணி ரெண்டு லட்சம் மக்கள் பலியாகி வருகின்ற அதிர்ச்சிக்கர
தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு கரணம் ,அதிக உணவு உட் கொள்ளுதல் ,சொகுகாச வாழ்தல் ,மற்றும் உடல் பயிற்சி இன்மை ,போன்ற காரணங்களும் முதன்மை இடம் வகிக்கின்றன.
மெதுவாக சாப்பிடுவதால் உடல் எடை குறையுமா?
மெதுவாக சாப்பிடுவதால் உடல் எடை குறையுமா?
உணவின் சுவைக்கு முக்கியத்துவம் கொடுக்கும்போது இயற்கை மற்றும் ஆரோக்கியமான உணவுகளே அதிகமாக உணவு விருப்பப் பட்டியலில் இடம்பெறும்.
மெதுவாக சாப்பிடுவதால் உடல் எடை குறையும் என்ற கருத்து பலரிடம் உள்ளது. ‘ஸ்லோ ஈட்டிங்’ என்பது நாம் சாப்பிடும் உணவின் அளவை குறைக்கும். இதனால் இயல்பாகவே உடல் எடையைக் கட்டுக்குள் வைக்கலாம்.
‘லெப்டின் மற்றும் க்ரெலின்’ எனும் இரண்டு ஹார்மோன்களும் பசிக்குத் தொடர்புடையவை ஆகும். இதில் ‘லெப்டின்’ உடலுக்குத் தேவையான கலோரியின்
அளவு மற்றும் பசியைக் கட்டுப்படுத்தும். உடல் எடை இழப்புக்கு உதவும். ‘க்ரெலின்’ பசியைத் தூண்டும்; உடல் எடையை அதிகரிக்க உதவும்.
மெதுவாக, உணவை நீண்ட நேரம் சாப்பிடும்போது, குடலில் சுரக்கும் ஹார்மோன்களுக்கு, ‘உடலுக்குத் தேவையான அளவு உணவு கிடைத்துவிட்டது’ என்று
மூளையில் இருந்து சமிக்ஞைகளை அனுப்பும். சுமார் 20 நிமிடத்துக்கு மேல் சாப்பிடும்போது, வயிறு நிறைந்த திருப்தி உண்டாகும்.
மேலும், மெதுவாக உணவு சாப்பிடும்போது உணவில் உள்ள சுவையையும், வாசனையையும் நம்மால் நன்றாக உணர முடியும். அதேநேரம், சுவையின் இன்பத்தை
ரசிக்கும் போது சாப்பிடும் நேரம் இரட்டிப்பாகும். இது சாப்பிடும் உணவின் அளவை தன்னிச்சையாக குறைக்கும்.
மெதுவாக சாப்பிடுவதால் உடல் எடை குறையுமா?
உணவின் சுவைக்கு முக்கியத்துவம் கொடுக்கும்போது இயற்கை மற்றும் ஆரோக்கியமான உணவுகளே அதிகமாக உணவு விருப்பப் பட்டியலில் இடம்பெறும்.
அடுத்த முறை உணவு உண்ணும்போது, சுவையின் திருப்தியை நாம் அடைந்தவுடன் பசியின்மை ஏற்படும்.
உணவை நன்றாக மென்று சாப்பிடும்போது, உணவுப் பொருட்கள் வாயில் உள்ள உமிழ் நீருடன் கலக்கும். உமிழ்நீரில் உயிரியல் ரீதியாக செயல்படும் பொருட்கள் உள்ளன. ஆகையால், இது உணவு செரிமானத்தை வாயில் இருந்தே தொடங்குகிறது.
மெதுவாக சாப்பிடும்போது உணவு வயிற்றை சென்றடைய 20 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும். இது வயிற்றின் வேலையை மிகவும் எளிதாக்குவதுடன், சாப்பிட்ட
உணவை எளிதில் செரிமானம் அடையச் செய்யும். இதனால், நாம் அடுத்த வேளை
உணவு சாப்பிடும்போது இயல்பாகவே உற்சாகம் ஊற்றெடுக்கும்
பெண்களே உடல் எடையை குறைக்க வேண்டுமா?
பெண்களே உடல் எடையை குறைக்க வேண்டுமா?
குழந்தைகள் பாக்கெட்டில் அடைத்திருக்கும் நொறுக்குத்தீனிகளை கேட்டு அடம் பிடிக்கும் போது வேறு வழியில்லாமல் வாங்கி கொடுத்து விட்டு நாமும் அதையே மாலை நேர சிற்றுண்டியாக சாப்பிடுவோம்.
பெண்களே உடல் எடையை குறைக்க வேண்டுமா? அப்போ இந்த சிற்றுண்டிகளை சாப்பிடாதீங்க…
பெண்கள் உடல் எடையை குறைக்க மாலை சிற்றுண்டியில் தவிர்க்க வேண்டியவை
நம்முடைய உணவுமுறையில் ஒரு நாளுக்கு மூன்று வேளை உண்பதை வழக்கமாக
கொண்டிருக்கிறோம். மூன்று வேளை உணவை 5 அல்லது வேளையாக பிரித்து சாப்பிடுவது ஆரோக்கியத்துக்கு நல்லதுஎன்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். இதனால் உடலில் சேரும்
கலோரிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியும். இந்த வழிமுறை குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
பலருக்கும் 3 வேளையும் வயிறு நிறைய சாப்பிட்டாலும் மாலை நேரத்தில் நொறுக்குத்தீனி சாப்பிடவில்லை என்றால் அந்த நாளே முழுடையடையாதது போல் இருக்கும்.
மாலை மேகங்களை பார்க்கும் போது குளிர்ந்த காற்றை உணரும் போது காரசாரமாக பஜ்ஜி சாப்பிட்டால் நன்றாக
பெண்களே உடல் எடையை குறைக்க வேண்டுமா?
இருக்கும் வேலைக்கு நடுவே ஏலக்காய் சேர்ந்த சூடான டீ குடித்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் தோன்றும்.
குழந்தைகள் பாக்கெட்டில் அடைத்திருக்கும் நொறுக்குத்தீனிகளை கேட்டு
அடம் பிடிக்கும் போது வேறு வழியில்லாமல் வாங்கி கொடுத்து விட்டு நாமும் அதையே மாலை நேர சிற்றுண்டியாக சாப்பிடுவோம்.
இவற்றை தவிர்த்து மாலை நேர சிற்றுண்டியை ஆரோக்கியமானதாக மாற்றி கொண்டால் உடல் எடையை குறைக்க முடியும்.
மாலையில் டீ, காபிக்கு பதிலாக மோர், கிரீன் டீ, முலிகை டீ, பாதாம் பால் குடிக்கலாம். நார்ச்சத்துள்ள பழங்கள் சாப்பிடலாம்.
புரதச்சத்து நிறைந்த நட்ஸ், உலர்பழங்கள் சாப்பிடலாம்.
காய்கறி சாண்ட்விச், காய்கறி சாலட் உடன் அக்ரூட் பருப்பு, பேரீச்சம் பழம் சேர்த்து கொள்ளலாம்.
பழங்கள் சேர்த்த ஸ்மூர்த்தி, லஸ்ஸி பருகலாம்.
சிறுதானிய புட்டு, பணியாரம், காய்கறி சூப் குடிக்கலாம்.
இந்திய உணவு கலாசாரத்தை பொறுத்தவரை வீட்டில் சமைக்கும் உணவுகளுக்க உடல் உடையை குறைக்கும் தன்மை உள்ளது, காரணம், ஆரோக்கியமான சமையல் முறை மற்றும் சமையல் பொருட்கள்.
கடைகளில் தயாரிக்கும் உணவுகளில் இடம் பெறும் கொழுப்பு பொருட்கள், சோடா, கார்பனேட்டட் பானங்கள், அதிக கலோரி, சர்க்கரை சேர்த்த உணவுகள் உடலில் எடையை அதிகரிக்க செய்யும்.
மேலும் சர்க்கரைநோய், இதய நோய், உடல்பருமன் போன்ற நோய்களை உண்டாக்கும். ஆகையால் மாலை சிற்றுண்டி பட்டியலில் நீக்க வேண்டியசில உணவுகள் இதோ…
சோடா, கார்பனேட்டட்பானங்கள் அதிக சர்க்கரை மற்றும் நிறமிகள் சேர்த்த குளிர்பானங்கள்
சாக்லேட், ஐஸ்கிரீம், மைதாவில் செய்த கேக், குக்கீஸ்,
எண்ணெயில் பொரித்த, வறுத்த உணவுகள் மற்றும் இறைச்சி.
வனஸ்பதி, வெண்ணெய், கனோலா எண்ணெய், சோயாபீன் எண்ணெய், கிராஸ்பீத் எண்ணெய் போன்றவற்றால் செய்யப்பட்ட உணவுகள்.
இந்த சிற்றுண்டிகளின் பெயரை கேட்டவுடனேயே சுவைப்பதற்கு தூண்டும். ஆனால் மனதை கட்டுப்படுத்தி இவற்றை தவிர்த்தால் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.
உடல் எடை கூடுவதற்கான காரணங்கள்
எடை கூடுவதற்கான காரணங்கள்
அதிக எடை, பருத்த உடல் எடை என்பது இன்றைய கால கட்டத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியதாக உள்ளது
. இந்த அதிக எடையுடன் சர்க்கரை நோய், இருதய நோய், புற்றுநோய், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு என கைகோர்த்து வருகின்றது. சுமார் 34 சதவீதம்
பெரியோர்களும், 19 சதவீதம் குழந்தைகளும் கூடுதல் எடையுடன் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
பெண்கள் உடல் எடை கூடுவது என்பது குறிப்பிட்ட ஒரு காரணத்தினால் மட்டும் அல்ல.
பலர் அவர்களின் முன்னோர்களை விட அதிக எடையுடன் இருக்கின்றனர். அதனை குறைக்கவும் கஷ்டப்படுகின்றனர்.
ஆனால் உணவு, பயிற்சி இவை மட்டும் இன்றி வேறு சில காரணங்களும் எடை கூடுதலுக்கு காரணமாக இருக்கின்றன என்று ஆய்வுகள் கூறுகின்றன.
- சூழ்நிலையும் உடல் எடை எடை கூடுதலுக்கு காரணமாக அமைகின்றது. நமது உணவு, நீர், காற்று, கட்டிடப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் என
- பலவற்றில் ரசாயன கலவைகள் இருக்கும் வாய்ப்புகள் உள்ளது. இவை அனைத்தும் மனித உடலின் செயல்திறனை மாற்றி நாளமில்லா சுரப்பிகளை
- தாக்குவதன் மூலம் உடல் எடை கூடுதல் ஏற்படுகின்றது.
- பிளாஸ்டிக், அலுமினியம் இவற்றில் உள்ள
- நச்சுப்பொருட்கள் உடலில் சேர்ந்து விடுகின்றன.
- நீரில் கிருமிகளை அழிக்க பயன்படுத்தப்படும் ரசாயனங்கள்.
- நாம் பயன்படுத்தும் தரம் குறைவான சுகாதார பொருட்கள் இவை ஹார்மோன் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.
- பல ரசாயனங்களை நாம் சுவாசிக்கின்றோம். இவை எல்லாம் 100 வருடங்களுக்கு முன்பு இருந்ததில்லை. இவை நாகரீக உலகின் மாற்றங்கள்.
- நம் பல பூச்சி கொல்லி மருந்துகள்.
- பல மருந்துகளை நாம் அன்றாடம் எடுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்.
மேற்கூறிய காரணங்களால் தூக்கம் பாதிக்கப்படுகின்றது. ஹார்மோன்கள் பாதிக்கப்படுகின்றன.
குடலில் நல்ல பாக்டீரியாக்கள் அழிகின்றன. உடலில் வீக்கம் ஏற்படுகின்றது.
- ஓயாத மனஉளைச்சலில் வாழ்கின்றோம். இப்படிக்கூடும் பல்வேறு காரணங்களாலும் உடலில் எடை கூடுதல் ஏற்படுகின்றது என ஆய்வுகள் கூறுகின்றன.உடல் எடை
இதற்கான தீர்வு தான் என்ன?
- இயற்கையோடு ஒன்றி இருப்போம்.
தேவையான அளவு 8 மணி நேர தூக்கம் அவசியம். - அளவான உப்பினை உபயோகிப்போம்.
- வெள்ளை சர்க்கரை, அதிக இனிப்புகள் இவற்றினைத் தவிர்ப்போம்.
- சோடா வேண்டாம்.
இப்படி சில வழிமுறைகளையும் சரியான
உணவு உடற்பயிற்சி இரண்டினையும் கடைப்பிடிக்கும் போது
கூடுதல் எடை ஏற்படுவதை தவிர்க்க முடியும்.
சிறந்த உடல் நலத்திற்கான சில டிப்ஸ்கள் :
- உடற்பயிற்சி, உணவு முறை, முறையான தூக்கம்
- இவை உடல் நலத்தின் மூன்று தூண்கள் ஆகும்.
- வறுத்த, பொறித்த உணவுகளையும், தெருக்களில் சுகாதாரமற்று விற்கும் உணவுகளையும் தவிர்ப்போம்.
- காலையில் தேனும், எலுமிச்சை சாறும் மிக நல்லது.
என ஆயுர்வேதம் வலியுறுத்துகின்றது. - வாரத்தில் ஓரிரு வேளையாவது உண்ணாவிரதம் இருக்கலாம்.
- தினம் காலை உணவினை தவிர்க்கவே கூடாது.
- கிரீன் டீ நல்ல பயன் அளிக்கும்.
- மெதுவாக உண்ண பழகுங்கள். ஒவ்வொரு கவள உணவினையும் 32 முறை நன்கு மெல்லுங்கள் என்று கூறப்படுகின்றது. முடியுமா?
மனித உடல் எடை கூடுவதற்கான காரணங்கள்
- தூங்குவதற்கு 3 மணி நேரம் முன்பாக உணவினை முடித்துவிடுங்கள்.
- பழங்களை தனியாகவும், காய்கறிகளைத் தனியாகவும் உண்ணுங்கள். ஆனால் பழங்கள், காய்கறிகளை நன்கு சேர்த்துக்கொள்ளுங்கள்.
- நார் சத்து உணவே அவசியம்.
- வானவில் நிறங்கள் அனைத்தும் உங்கள் அன்றாட உணவில் இருக்க வேண்டும்.
- விருந்துக்கு செல்வதற்கு முன்னால் வீட்டில் உண்டுவிட்டு செல்லுங்கள்.
- நெல்லி சாறு மற்றும் தேனை காலை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
- நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருங்கள்.
- ஒவ்வொரு மணி நேரத்துக்கு ஒரு முறை 5 நிமிடங்கள் நடங்கள்.
- 2 மணிக்கொரு முறை 2 நிமிடங்கள் கை, கால் முதுகினை நீட்டி மடக்கி சிறு பயிற்சி செய்யுங்கள்.
- முடிந்த பொழுதெல்லாம் கண்ணை மூடி திறங்கள். இது தானாகவே நிகழும் என்றாலும் கவனம் கொண்டு சில முறை செய்யுங்கள்.
- சிரிப்பு பயிற்சியினை காலையில் செய்யுங்கள்.
சி மார்பக புற்று நோய்: மார்பக புற்று நோயினைப் பற்றிய விழிப்புணர்வினை மருத்துவ உலகம் பெண்களிடையே நன்கு ஏற்படுத்தி உள்ளது.
மார்பகத்தில் கட்டி, உருண்டை போன்ற ஒரு உறுத்தல் இவைகளை சுய பரிசோதனை மூலமும், மருத்துவ பரிசோதனை மூலமும் கண்டறிந்து சிகிச்சை பெற
வேண்டும் என்ற உண்மைகளை மக்கள் நன்கு அறிந்துள்ளனர் என்றே சொல்ல வேண்டும்.
இதில் மேலும் சில கூடுதல் செய்திகளை அறிந்து கொள்வோம்.மார்பகத்தில் சிறுகுழிவு, தோல் பின் வாங்குதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் செல்ல வேண்டும்.
சரும பாதிப்பிற்கு பல காரணங்கள் இருக்கலாம்.
இவை மார்பக சரும பாதிப்பிற்கும் பல காரணங்கள் உண்டு. மார்பக உள்ளாடை மிக இருக்கமாக இருந்தாலும் சரும
பாதிப்பு ஏற்படும். மார்பகத்தில் திடீரென சிகப்பு, வீக்கம், அரிப்பு போன்றவை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
பொதுவாக மார்பகத்தில் இருந்து திரவம் வடிந்தால் கவனம் தேவை. இது கர்ப்ப காலம், தாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் கவலைக்கு உரியது அல்ல.
பெண் மார்பத்தில் கறுப்பு புள்ளி, திட்டுகள் இருந்தால் சரும நிபுணரை அணுக வேண்டும்.
சிகப்பு திட்டுகள் இருந்தாலும் அதே போல் சரும நிபுணர் ஆலோசனையை உடனடியாக பெற வேண்டும்.மார்பக காம்பிலும்,
அதனை சுற்றிய பகுதியிலும் எந்த வித மாறுதல்கள் ஏற்பட்டாலும் மருத்துவர் ஆலோசனை அவசியம்.
மேலும்மார்பக சருமத்தில் மாறுதல்
வீக்கம், வலி உடல் எடை
மார்பக உருவில் மாற்றம்
இப்படி எந்த மாறுதல்களுக்கும் உடனடியாக மருத்துவ உதவி பெற்றால் எளிதில் தீர்வு பெறலாம்.
ருத்துவம் மிக நல்ல முன்னேற்றத்தினை பெற்றுள்ளது. அதனின் முழுபயனை அனைவரும் பெற வேண்டும்.







