Tag: இலங்கையில் மேலும்
Posted in இலங்கை செய்திகள்
இலங்கையில் மேலும் 82 பேருக்கு கொரோனா வைரஸ்
Author: நலன் விரும்பி Published Date: 27/05/2020 Leave a Comment on இலங்கையில் மேலும் 82 பேருக்கு கொரோனா வைரஸ்
இலங்கையில் மேலும் 82 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று
உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1453 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை இன்றைய தினம் இதுவரை 134 கொரோனா நோயாளிகள் நாட்டில் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இவர்களில் 732 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மேலும் 711 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.






