Tag: இலங்கையர்கள் நாடு திரும்பினர்
31 இலங்கையர்கள் நாடு திரும்பினர்
31 இலங்கையர்கள் நாடு திரும்பினர்
குவைத்தில் நீண்ட காலமாக வீசா இன்றி இலங்கைக்கு வரமுடியாமல் தங்கியிருந்த 31 இலங்கையர்கள், அங்குள்ள இலங்கை தூதரகத்தின்
தலையீட்டில் ஏற்பாடு செய்யப்பட்ட தற்காலிக விமான அனுமதியின் கீழ் இன்று (19) காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அவர்கள் இலங்கைக்கு வருவதற்காக குவைத்தில் உள்ள இலங்கை தூதரகத்தில் பதிவு செய்யப்பட்ட இலங்கையர்களின் குழுவாகும்.
இவர்கள் இன்று காலை 06.16 மணியளவில் குவைத்தில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-230 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். அவர்களில் 03 ஆண்களும் 28 பெண்களும் அடங்குவர்.
31 இலங்கையர்கள் நாடு திரும்பினர்
மேலும், கடந்த 12 ஆம் திகதி குவைத்தில் இருந்து 33 பேர் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர், அவர்களில் 09 ஆண்களும் 24 பெண்களும் இருந்தனர்.
அதன்படி, இந்த இரண்டு வாரங்களில், குவைத்தில் வீட்டு வேலை செய்யச் சென்று விசா இல்லாமல் தங்கியிருந்த 64 இலங்கையர்கள், அங்குள்ள இலங்கை தூதரகத்தில் பதிவு செய்யப்பட்டவர்கள், இலங்கைக்கு அனுப்பப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் அனுராதபுரம், குருநாகல், காலி, மாத்தறை மற்றும் மொனராகலை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இஸ்ரேலியத் தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என ஹிஸ்புல்லா நாடாளுமன்ற உறுப்பினர்by நிருபர் காவலன்
- இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக வெளியேற வேண்டும் ஹிஸ்புல்லாby நிருபர் காவலன்
- ஈரான் மீதான போர் மீண்டும் தொடங்கும் என 62 சதவீத இஸ்ரேலியர்கள் கருதுகின்றனர்by நிருபர் காவலன்
- ஈரான் கப்பலை அனுப்ப ஆஸ்திரேலியாவுக்குக் கோரிக்கை வரவில்லைby நிருபர் காவலன்
- ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடிகளை அகற்றும் திறன் ஐரோப்பாவிற்கு உள்ளது என பிரெஞ்சுby நிருபர் காவலன்
சூடானில் இருந்து 14 இலங்கையர்கள் நாடு திரும்பினர்
சூடானில் இருந்து 14 இலங்கையர்கள் நாடு திரும்பினர்
சூடானில் நிலவும் மோதல் சூழ்நிலை காரணமாக, அங்கு தங்கியிருந்த நிலையில் மீட்கப்பட்ட 14 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
குறித்த குழுவினர் நேற்று (29) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போது, அவர்களை வரவேற்க வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளும் பிரசன்னமாகியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
வெளிவிவகார அமைச்சின் ஒருங்கிணைப்பில், சவுதி அரசாங்கத்தின் ஆதரவுடன், குறித்த தரப்பினர் மீட்கப்பட்டுள்ளனர்.
சூடானில் இருந்து 14 இலங்கையர்கள் நாடு திரும்பினர்
சூடான் இராணுவத்தினருக்கும் அந்நாட்டு துணை இராணுவத்திற்கும் இடையில் ஏற்பட்ட மோதல் தீவிரமான சூழ்நிலையாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, சூடானில் இருந்து மீட்கப்பட்ட இலங்கையர்களின் இரண்டாவது குழு சவூதி அரேபியாவின் ஜித்தா நகருக்கு அழைத்து வரப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட இரண்டாவது குழுவில் 6 இலங்கையர்களும் உள்ளடங்குவதாக சவூதி அரேபியாவில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
சூடான் துணை இராணுவத்திற்கும் மற்றும் சூடான் இராணுவத்துக்கும் இடையே மோதல் கடந்த இரண்டு வாரங்களாக இடம்பெற்று வருகின்றது.
பல சந்தர்ப்பங்களில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டாலும், நாட்டின் தலைநகர் கார்டூம் உட்பட பல நகரங்களில் மோதல்கள் தொடர்கின்றன.
வன்முறை மோதல்களில் 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும், 4000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது



















