இலங்கை பாராளுமன்றுக்குள் பதற்றம் செங்கோலுக்கு கடும் பாதுகாப்பு
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை பாராளுமன்றுக்குள் பதற்றம் செங்கோலுக்கு கடும் பாதுகாப்பு

இலங்கை பாராளுமன்றுக்குள் பதற்றம் செங்கோலுக்கு கடும் பாதுகாப்பு

இலங்கை பாராளுமன்றுக்குள் பதற்றம் செங்கோலுக்கு கடும் பாதுகாப்பு பாராளுமன்றத்தில் தற்போது பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது. சபைக்கு நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்துக்கு திருத்தங்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன.

எதிர்கட்சியினால் இதுவரையிலும் கொண்டுவரப்பட்ட இரண்டு திருத்தங்களையும் ஏற்க ஆளும் கட்சி மறுத்துவிட்டது.

இந்நிலையில், ஒழுங்குப் பிர​ச்சினை எழுப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், தயாசிறி ஜயசேகர, சந்திம வீரக்கொடி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை கவனத்தில் கொள்ளாது திருத்தங்கள் செய்யப்படுகின்றன.

இது சட்டவிரோதமானது என்றும் எதிர்க்கட்சியின் குற்றஞ்சாட்டினர். அத்துடன் சபைக்குள் நடுவை இறங்கிவிட்டனர்.

ஆளும் கட்சியினரும் சபையின் ஓரத்திலுள்ள ஆசனங்களுக்கு முன்பாக குவிந்து நிற்கின்றனர்.

இதனால் இருதரப்பினரும் காரசாரமாக கருத்துக்களை தெரிவிக்கின்றனர். இந்நிலையில், படைகல சேவிதர்கள் மற்றும் உதவியாளர்கள் செங்கோலுக்கு அருகில் நின்று, செங்கோலுக்கு பாதுகாப்பு வழங்கிக்கொண்டிருக்கின்றனர்.