Posted in உலக செய்திகள்

ரஷ்ய சிரியா திடீர் இராணுவ போர் ஒத்திகை

ரஷ்ய சிரியா திடீர் இராணுவ போர் ஒத்திகை

சிரியா ரஷ்ய இராணுவம் இணைந்து திடீர் இராணுவ போர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளன .


சிரியா மற்றும் ரசியா இராணுவத்தினரின் முப்படைகள் இணைந்தது இந்த இராணுவ ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர்.

சிரியாவில் தொடர் மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ள நிலையிலும் உக்கிரேன் மீது ரஷ்ய தொடர்ந்து தாக்குதல்களை
நடத்திய வண்ணம் உள்ளது .

இவ்வாறன நெருங்கடியான நிலையில் இந்த போர் ஒத்திகை இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது.

    Posted in Uncategorized

    ஈரான் ஓமான் இராணுவம் கூட்டு இராணுவ போர் ஒத்திகை

    ஈரான் ஓமான் இராணுவம் கூட்டு இராணுவ போர் ஒத்திகை

    ஈரான் மற்றும் ஓமான் இராணுவத்தின் இனைந்து பாரிய போர் ஒத்திகை ஒன்றை நடத்தியுள்ளனர்

    முப்படைகளும் கலந்து கொண்ட பாரிய ஒத்திகை அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுக்க

    பட்டுள்ளதாக நோக்க படுகிறது

      Posted in இலங்கை செய்திகள்

      திருகோணமலையில் பாரிய இராணுவ போர் ஒத்திகை நடவடிக்கை

      திருகோணமலையில் பாரிய இராணுவ போர் ஒத்திகை நடவடிக்கை

      இலங்கை, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் கடற்படையினர் பங்கு கொள்ளும் கூட்டு கடற்பயிற்சி நடைவடிக்கை திருகோணமலை கடற்படை தளத்தில் நேற்று (24) ஆரம்பமானது.

      (Cooperation Afloat Readiness and Training Exercise-2021 (CARAT-21) “நீர்வழி தயார் நிலை, ஒத்துழைப்பு

      மற்றும் பயிற்சி தொடர்பான கூட்டுப் பயிற்சி” மூன்று கட்டங்களாக எதிர்வரும் 30ஆம் திகதி வரை திருகோணமலை துறைமுக மற்றும் கிழக்கு கடற்பரப்பில் நடைபெறவுள்ளது.

      பயிற்சியின் துறைமுக சார்ந்த பயிற்சிகள் ஜூன் 24 மற்றும் 25 ஆகிய திகதிகளில் திருகோணமலை துறைமுகத்தில் செயற்கை நிரை அமைப்பில் நடைபெறும் அதேவேளை, அதன்

      கடல் சார்ந்த பயிற்சிகள் ஜூன் 26 முதல் 30 வரை திருகோணமலையில் நடைபெறவுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

      கடல்சார் ஈடுபாடு மற்றும் இயங்குதளத்தை மேம்படுத்துதல், பகிரப்பட்ட கடல்சார் சவால்களில் மேலும் ஒருங்கிணைப்பை வளர்ப்பது, செயல்பாட்டு சூழல், விதிமுறைகள் மற்றும் தரநிலைகள் குறித்து நன்கு புரிந்துகொள்வது, கடல்சார் கூறுகள் மற்றும் சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு

      இடையிலான தொடர்புகளை எளிதாக்குதல், கடல்சார் பரஸ்பர திறனை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் சர்வதேச சட்டத்திற்கு ஏற்ப செயல்படுதல் என்பன பயிற்சியின் முக்கிய நோக்கங்களில் அடங்கும் என கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

      அமெரிக்காவின் 7ஆவது கடற்படை குழுமம் மற்றும் ஜப்பானிய கடல்சார் தற்காப்பு படை, இலங்கை கடற்படை ஆகியவற்றுக்கிடையில் மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நிவாரணம்,

      கடல்சார் கள விழிப்புணர்வு, கடல்சார் விமான போக்குவரத்து, கடலில் நிரப்புதல், மேற்பரப்பு டிராக்கெக்ஸ், வருகை வாரிய தேடல் மற்றும் பறிமுதல் மற்றும் தேடல் மற்றும் மீட்பு உள்ளிட்ட பல்வேறு கூட்டு பயிற்சி வாய்ப்புகள் இடம்பெறவுள்ளன.

      இந்த கூட்டுப் பயிற்சியில் இலங்கை கடற்படையின் ஆழ் கடல் ரோந்து கப்பல்களான சயுரல, கஜபாஹு, ஆகிய கப்பல்களும் இலங்கை விமானப்படையின் பெல் 212, 412 ரக

      ஹெலிகொப்டர்கள், B 200 ரக பீச் கிராப்ட் விமானம், அமெரிக்காவின் 7ஆவது கடற்படை குழுமத்திற்கு சொந்தமான யூஎஸ்எஸ் சார்ள்ஸ்டன் கப்பல், பி-8 பொசிடன் போயிங் கடல் சார்

      ரோந்து விமானம் மற்றும் எஸ்எச்-60 ரக ஹெலிகொப்டர் ஆகியவற்றுடன் ஜப்பான் கடற்படையின் ஜேடிஎஸ் யூகிரி நாசகாரி கப்பல் மற்றும் எம் எச் -60ஆர் ஹெலிகொப்டர் ஆகியன பங்கெடுக்கின்றதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.

      இந்த கூட்டுப் பயிற்சியின் அங்குரார்பன நிகழ்வில் இலங்கை கடற்படையின் பிரதிப் பிரதம அதிகாரியும் கிழக்கு கடற்பிராந்திய கட்டளைத் தளபதியுமான ரியர் அட்மிரல் வை என் ஜயரட்ண,

      இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் கடற்படை பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கொமாண்டர் ரிச்சர்ட் லிஸ்டெர் உட்பட உயர் அதிகாரிகள் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.