O/L பரீட்சைகள் இரண்டு வாரத்திற்கு ஒத்திவைப்பு
Posted in இலங்கை செய்திகள்

O/L பரீட்சைகள் இரண்டு வாரத்திற்கு ஒத்திவைப்பு

O/L பரீட்சைகள் இரண்டு வாரத்திற்கு ஒத்திவைப்பு

எதிர்வரும் மே மாதம் 15 ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த 2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை இரண்டு வாரங்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

பரீட்சைத் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

அதன்படி, எதிர்வரும் மே மாதம் 29 ஆம் திகதி கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது

Posted in இலங்கை செய்திகள்

O/L பரீட்சை 9 ஆம் திகதி ஆரம்பம்

O/L பரீட்சை 9 ஆம் திகதி ஆரம்பம்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான

முன்னோடிப் பரீட்சை ஜனவரி மாதம் 9 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இதனை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித் தெரிவித்துள்ளார்.

அத்துடன், 11 பாடவிதானங்களுக்கான முன்னோடிப் பரீட்சைகள் இடம்பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விடைகளை

மதிப்பீடு செய்யும் பணிகள் அடுத்த மாதம் 15ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந்த பணிகள் ஐந்து கட்டங்களின் கீழ் 17 நகரங்களில் நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உயர்தரப் பரீட்சை விடைகளை மதிப்பீடு செய்யும் பணிகள் கடந்த 25 ஆம் திகதி ஆரம்பமாகியிருந்தது.

Posted in இலங்கை செய்திகள்

O/L பரீட்சைக்கான திகதி அறிவிப்பு

O/L பரீட்சைக்கான திகதி அறிவிப்பு

2020 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதரப் பத்திர சாதாரண தர பரீட்சை 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாவரி 18 ஆம் திகதி தொடக்கம் 28 ஆம் திகதி வரை பரீட்சையை நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ எல் பீரிஸ் இதனை இன்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், அரச பாடசாலைகளின் மூன்றாம் தவணை விடுமுறையை டிசம்பர் 24 ஆம் திகதி வழங்கப்படவுள்ளது.