Tag: 24 மணிநேரத்தில் 836 சந்தேக நபர்கள் கைது
Posted in இலங்கை செய்திகள்
24 மணிநேரத்தில் 836 சந்தேக நபர்கள் 24 மணிநேரத்தில் 836 சந்தேக நபர்கள் கைது
Author: நிருபர் காவலன் Published Date: 29/01/2024
24 மணிநேரத்தில் 836 சந்தேக நபர்கள் கைது
நாடு தழுவிய போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையான ‘யுக்திய’ நடவடிக்கையின் ஒரு பகுதியாக நள்ளிரவு 12.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மேலும் 836 சந்தேக நபர்கள் பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 6 பேரை தடுப்புக் காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒருவர் புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த காலப்பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்களில் 142 கிராம் ஹெரோயின், 95 கிராம் ஐஸ் மற்றும் 1,650 போதை மாத்திரைகள் அடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.







