Tag: .ஸ்டாலின்
பஸ் பயணிகளிடம் உரையாடிய மு.க.ஸ்டாலின்
பஸ் பயணிகளிடம் உரையாடிய மு.க.ஸ்டாலின்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் துரைப்பாக்கம் கண்ணகி நகரில் 5 இடங்களில் நடந்த சிறப்பு முகாமினை ஆய்வு செய்தார்.
பஸ் பயணிகளிடம் உரையாடிய மு.க.ஸ்டாலின்- இலவச பயணம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்த பெண்கள்
முக ஸ்டாலின்
இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.
சென்னை:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து பொதுமக்களை பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தினசரி முகாம்கள் நடந்தாலும் கூட, ஞாயிற்றுக்கிழமைகளில் கடந்த 5 வாரமாக மெகா சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இதன்மூலம் தடுப்பூசி இலக்கை நெருங்க முடிவதால் இத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.
இதனால் தமிழகம் முழுவதும் மெகா முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. இதில் ஒவ்வொரு வாரமும் 2 லட்சம் ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள்.
காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை இந்த சிறப்பு முகாம்கள் நடைபெறுவதால், ஒவ்வொரு பகுதியில் உள்ள மக்கள் தங்கள் வசதிக்கேற்ப சென்று தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
வீடுகளுக்கு அருகே முகாம்கள் நடைபெறுவதால் எளிதாக சென்று மக்கள் தடுப்பூசியை செலுத்தி வந்தனர்.
இந்தநிலையில் அசைவ மற்றும் மது பிரியர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் தடுப்பூசி போட முன்வராததால் மெகா சிறப்பு முகாம் சனிக்கிழமைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி இன்று தமிழகம் முழுவதும் மெகா சிறப்பு முகாம்கள் 50 ஆயிரம் இடங்களில் நடக்கிறது.
2-வது தவணை தடுப்பூசி செலுத்தாதவர்களை இந்த சிறப்பு முகாம்கள் மூலம் பயன்பெற ஒவ்வொரு பகுதியிலும் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டன.
சென்னை சென்ட்ரலில் நடந்த தடுப்பூசி முகாம்
இதுவரையில் தடுப்பூசி போடாதவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும், தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் மற்றும் முதியவர்ளை கண்டறிந்து அவர்களை முகாமிற்கு அழைத்து வரவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
தடுப்பூசி கையிருப்பு அதிகமாக உள்ளதால் அவற்றை விரைவாக பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் சுகாதாரத்துறை தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.
சென்னையில் 1,600 முகாம்களில் தடுப்பூசி போட மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது. வார்டுகளுக்கு 4 முகாம்கள் வீதம் அமைக்கப்பட்டுள்ளன. நடமாடும் முகாம்களும் செயல்படுகின்றன.
மாநகராட்சி பள்ளிகள், கல்லூரிகள், சுகாதார மையங்கள், தனியார் குடியிருப்பு இடங்கள், அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்களில் மெகா முகாம்கள் நடக்கின்றன.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் துரைப்பாக்கம் கண்ணகி நகரில் 5 இடங்களில் நடந்த சிறப்பு முகாமினை ஆய்வு செய்தார்.
அப்போது தியாகராயா நகரில் இருந்து கண்ணகி நகருக்கு மாநகர பஸ் ஒன்று வந்தது. அந்த பஸ்சில் மு.க.ஸ்டாலின் ஏறி அதில் பயணம் செய்த பெண்களிடம் இலவச பயணம் குறித்து விசாரித்தார்.
அரசு வழங்கும் இலவச பயணம் வசதியாக இருக்கிறதா? குறிப்பிட்ட நேரத்திற்கு பஸ் வருகிறதா? இருக்கைகள் வசதியாக உள்ளதா? என்று அவர் கேட்டார். அதற்கு அவர்கள் இலவச பயணம் எங்களுக்கு மிகுந்த பயன் உள்ளதாக இருக்கிறது என்று தெரிவித்தனர்.
இந்த ஆய்வின்போது பொதுமக்கள் அவரிடம் கோரிக்கை மனுக்களையும் கொடுத்தனர். அதை அவர் அன்போடு வாங்கிக்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
இந்த ஆய்வின்போது தலைமை செயலாளர் இறையன்பு, சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன், மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, வீரராகவ ராவ் ஐ.ஏ.எஸ். அதிகாரி மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., அரவிந்த் ரமேஷ் எம்.எல்.ஏ. உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
சென்னை மாநகரில் நடந்த முகாம்களில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர். அலுவலகங்களுக்கு செல்லக் கூடியவர்கள் காலையிலேயே சென்று தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.
ஒருசில இடங்களில் ஊழியர்கள் வீதி வீதியாக சென்று தடுப்பூசி போடாதவர்களை அழைத்து வந்தனர்.
இதேபோல புறநகர் பகுதியிலும் தடுப்பூசி போட பொதுமக்களிடையே ஆர்வம் இருந்தது. பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர், திருநீர்மலை உள்ளிட்ட பல இடங்களில் நடந்த சிறப்பு முகாம்களில் ஆர்வத்துடன் தடுப்பூசி போட வந்தனர்.
செம்பரம்பாக்கம் ஏரிகளில் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு
செம்பரம்பாக்கம் ஏரிகளில் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு
3,645 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது 2,789 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளதாகவும், 77 சதவீத அளவுக்கு நீர் நிரம்பி உள்ளதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.
புழல்-செம்பரம்பாக்கம் ஏரிகளில் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு
புழல் ஏரியை பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை:
சென்னையின் குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகள் உள்ளன. தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக இந்த ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது.
புழல் ஏரியில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதையொட்டி ஏரியின் கரைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. ஷட்டர்களும் பழுதுபார்க்கப்பட்டுள்ளன.
3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் தற்போது 2,772 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 23 கனஅடி தண்ணீர் வந்துகொண்டு இருக்கிறது.
புழல் ஏரியை பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
புழல் ஏரியில் 84 சதவீதம் அளவுக்கு நீர் நிரம்பி உள்ளது. முழு கொள்ளளவை விரைவில் எட்ட உள்ளதால் இந்த ஏரியை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஏரியின் ஷட்டர்கள் சரியாக இயங்குகிறதா? என்பதை கேட்டறிந்தார். எவ்வளவு தண்ணீர் வருகிறது. குடிநீருக்கு எவ்வளவு தண்ணீர் தினமும் திறக்கப்படுகிறது என்பதனை கேட்டறிந்தார்.
புழல் ஏரியின் கரைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதால் அதில் நடந்து சென்றும் பார்வையிட்டார். அவருக்கு பொதுப்பணித்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா விரிவாக விளக்கி கூறினார்.
இந்த ஆய்வின் போது அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, மாதவரம் சுதர்சனம் எம்.எல்.ஏ., சென்னை குடிநீர் வாரிய இயக்குனர் விஜயராஜ் குமார், தலைமை என்ஜினீயர் ராமமூர்த்தி உடன் இருந்தனர்.
புழல் ஏரியை பார்வையிட்ட பிறகு மு.க.ஸ்டாலின் அங்கிருந்து காரில் குன்றத்தூர் அருகில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரிக்கு சென்றார். அவரை அங்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் வரவேற்றார். செம்பரம்பாக்கம் ஏரிக்கு எவ்வளவு தண்ணீர் வருகிறது, எவ்வளவு தண்ணீர் திறந்துவிடப்படுகிறது என்ற விவரங்களை மு.க.ஸ்டாலினுக்கு அதிகாரிகள் விளக்கி கூறினார்கள்.
3,645 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது 2,789 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளதாகவும், 77 சதவீத அளவுக்கு நீர் நிரம்பி உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அப்போது மு.க.ஸ்டாலின் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பும்போது ஏரியை திறப்பது பற்றி முன் கூட்டியே பொதுமக்களுக்கு அறிவிப்பு வெளியிட வேண்டும். அவ்வப்போது உள்ள நிலவரத்தை மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
கதவணை பகுதிக்கும் சென்று பார்வையிட்டார். ஏரியின் கரைகள் எந்த அளவு பலப்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின் போது அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, தா.மோ. அன்பரசன், செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., பொதுப்பணித்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, சென்னை குடிநீர் வாரிய இயக்குனர் விஜயராஜ் குமார் மற்ற அதிகாரிகள் உடன் இருந்தனர்.
கச்சத்தீவை மீட்க தமிழக முதல்வா் தீவிர நடவடிக்கை
கச்சத்தீவை மீட்க தமிழக முதல்வா் தீவிர நடவடிக்கை
கச்சத்தீவை மீட்க தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறாா் என ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் தெரிவித்தாா்.
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் ஊரகப் பகுதியில் நடைபெற்ற பல்வேறு பணிகளில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. இதுதொடா்பாக தொடா்ந்து ஆய்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.
திமுகவின் தோ்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளபடி கச்சத்தீவை மீட்க தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறாா்.
தமிழக அரசு தடுப்பூசி கொள்முதல் செய்ய மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளது. இதேபோன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.800 கோடி மதிப்பீட்டில் உள்ள தடுப்பூசி உற்பத்தி செய்யும் மையத்தை தமிழக அரசே திறக்க அனுமதி கோரப்பட்டுள்ளது.
திமுக ஆட்சியில் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வழங்கப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான தங்கத் தேரை கடந்த அதிமுக அரசு முடக்கி வைத்திருந்தது. இந்த தங்கத் தேரின் சீரமைப்புப்
பணிகளை விரைந்து மேற்கொள்ள கோயில் நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.






