மொட்டின் புதிய வேலைத்திட்டம் ஆரம்பம்
Posted in இலங்கை செய்திகள்

மொட்டின் புதிய வேலைத்திட்டம் ஆரம்பம்

மொட்டின் புதிய வேலைத்திட்டம் ஆரம்பம்

மொட்டின் புதிய வேலைத்திட்டம் ஆரம்பம்,ரீ லங்கா பொதுஜன பெரமுன (SLPP) தனது அடிமட்ட மக்களை நோக்கிச் செல்லும் வேலைத்திட்டமான “நமல் சமக கமின் கமட்ட” (நாமலுடன் கிராமம் கிராமமாக ) இன்று (01) ஆரம்பிக்கவுள்ளது.

இன்று காலை அனுராதபுரத்தில் உள்ள ஜய ஸ்ரீ மஹா போதியாவிற்கு அருகில் சமய அனுஷ்டானங்களுடன் இந்த முயற்சி ஆரம்பமாகவுள்ளதுடன், அதனைத் தொடர்ந்து உத்தியோகபூர்வ பதவியேற்பு நிகழ்வும் இடம்பெறவுள்ளது.

இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

இந்த வேலைத்திட்டத்தின் கீழ் முதலாவது பொது நிகழ்வு நொச்சியாகமவில் பிற்பகல் 2 மணிக்கு திட்டமிடப்பட்டுள்ளது, அங்கு தற்போதைய அரசியல் நிலைமைகள், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எதிர்கால திட்டங்கள் மற்றும் அரசாங்க கொள்கைகள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளது.

இந்த நிகழ்வில் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் அடக்குமுறை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்படும்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட 14,000 கிராமங்களை உள்ளடக்கியதாக SLPP திட்டத்தை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ள நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இந்த வெளியீட்டு விழாவில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

விசேட தேவையுடையோரின் நலனுக்காக புதிய வேலைத்திட்டம்
Posted in இலங்கை செய்திகள்

விசேட தேவையுடையோரின் நலனுக்காக புதிய வேலைத்திட்டம்

விசேட தேவையுடையோரின் நலனுக்காக புதிய வேலைத்திட்டம்

விசேட தேவையுடையவர்களின் நலனுக்காக புதிய வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார்.

விளையாட்டு, சுகாதாரம், இளைஞர் விவகாரம் உள்ளிட்ட பல அமைச்சுக்களின் ஒத்துழைப்புடன் தயாரிக்கப்படும் இப்புதிய வேலைத்திட்டத்தை விரைவில் அமைச்சரவையில் சமர்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

2022 ஆம் ஆண்டுக்கான சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு இன்று (03) முற்பகல் அலரி மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய நிகழ்வில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

He 02 1பல்வேறு திறன்களைக் கொண்ட விசேட தேவையுடையவர்கள் இருப்பதனால், அவர்களின் படைப்புத் திறமைகளை நாட்டின் எதிர்கால அபிவிருத்திக்காக திறம்பட பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி இங்கு வலியுறுத்தினார்.

விசேட தேவையுடையோரின் நலனுக்காக ,புதிய வேலைத்திட்டம்

news.lk Disable Ranilஅரச நிறுவனங்களில் விசேட தேவையுடையோரின் நலன் தொடர்பில் நிலவும் குறைபாடுகள் குறித்து கவனத்திற்கு கொண்டு வந்த

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், அது தொடர்பில் ஆராய்ந்து அத்துறைகளில் வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சு மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய தலைமைச் செயலகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் பிரதமர் தினேஷ் குணவர்தன, சமூக

வலுப்படுத்துகை இராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவல், மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சின் செயலாளர் நீல்

பண்டார ஹபுஹின்ன, மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய தலைமைச் செயலகத்தின் பணிப்பாளர் அனுராதா ஹேரத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

வேலைத்திட்டம்
Posted in இலங்கை செய்திகள்

ஒரு இலட்சம் வேலைத்திட்டம் நாடு முழுவதும் ஆரம்பம்

ஒரு இலட்சம் வேலைத்திட்டம் நாடு முழுவதும் ஆரம்பம்

பொருளாதாரத்தை வலுவூட்டும் கிராமத்துடன் கலந்துரையாடல் வரவு செலவு திட்ட ஒரு இலட்ச வேலைத்திட்டம் இன்று (04) காலை 8.52 மணிக்கு நாடு முழுவதும் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் மூலம் முன்மொழியப்பட்டத்திற்கு அமைவாக உற்பத்தி பொருளாதாரத்தை வலுவூட்டும் நோக்குடன்

மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த தேசிய வேலைத்திட்டம் தற்பொழுது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதிலும் உள்ள 336 பிரதேச செயலகங்களை உள்ளடக்கிய வகையில் 14 ஆயிரத்து 21 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் இந்த திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

இதற்கமைவாக ஒரு கிராம உத்தியோகத்தர் பிரிவில் 5 தொடக்கம் 6 வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. கிராம உத்தியோகத்தர்

பிரிவுகளை கேந்திரமாக கொண்டு இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பொது மக்கள் தமது தேவையை அவர்களினாலேயே அடையாளம் காணக்கூடிய வகையிலும் அதற்கான திட்டத்தை அவர்களே தேர்ந்தெடுத்து செயற்திறன் மிக்கதாக

முழுமையாக பன்முகப்படுத்தலின் கீழ் நடைமுறைப்படுத்தப்படுகின்றமை விசேட அம்சமாகும்.

ஜனாதிபதி கேட்டபாய ராஜபக்ஷவின் தொலைநோக்கு கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக முன்னெடுக்கப்படும் இந்த தேசிய வேலைத்திட்டம் நிதியமைச்சர் பெசில்

ராஜபக்சவினால் வகுக்கப்பட்டு அவரது வழிகாட்டலுக்கு அமைவாக முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.