Tag: விபத்தில் சிக்கிய வாகனம்
Posted in இலங்கை செய்திகள்
விபத்தில் சிக்கிய வாகனம் – சாரதி தப்பி ஓட்டம்
Author: நிருபர் காவலன் Published Date: 28/01/2020 Leave a Comment on விபத்தில் சிக்கிய வாகனம் – சாரதி தப்பி ஓட்டம்
விபத்தில் சிக்கிய வாகனம் – சாரதி தப்பி ஓட்டம்
ஹட்டன், பொகவந்தலா பிரதான வீதியில் டிக்கோயா நகரை அண்மித்த வனராஜா பகுதியில் 20 அடி பள்ளத்தில் பாய்ந்து
கனரக வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
அக்கரபத்தனையில் இருந்து நோர்வூட் பகுதியை நோக்கி பயணித்த கனரக வாகனமே இவ்வாறு நேற்று இரவு 09 மணி
அளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
வாகனத்தை செலுத்திய சாரதி தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்ததுடன், அதிக வேகமே விபத்துக்கான
காரணம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.







