Posted in இலங்கை செய்திகள்

வவுனியா வைத்தியசாலையில் பாலியல் லஞ்சம் PHOTO

வவுனியா வைத்தியசாலையில் பாலியல் லஞ்சம் PHOTO

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைத்தியசாலை உத்தியோகத்தர்களுக்கு பாலியல் லஞ்சம்

தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு ஒன்று இன்று இடம்பெற்றது.

வைத்தியசாலையின் பணிப்பாளர் கே.நந்தகுமார் தலைமையில் டிரான்ஸ் பேரன்சி இன்டநெசனல் சிறிலங்கா நிறுவனத்தின் வவுனியா கிளையின் ஏற்பாட்டில்

நடைபெற்ற குறித்த செயலமர்வில் நிகழ்ச்சி திட்ட உத்தியோகத்தர் சுஜீத் மற்றும் மங்களா சங்கர் அவர்களும் வளவாளராக கலந்து கொண்டு பாலியல் லஞ்சம்

தொடர்பான விழிப்புணர்வு மற்றும் அதற்கான சட்ட ஏற்புகள் தொடர்பான விளக்கமும் வழங்கப்பட்டது.

இதன்போது பாலியல் லஞ்சம் மற்றும் லஞ்ச ஊழலை கட்டுப்படுத்தல் மற்றும் அது தொடர்பில் சட்ட நடவடிக்கை

எடுத்தல் என்பன தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது. இதில் 50க்கு மேற்பட்ட வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு பயனடைந்திருந்தனர்.

வவுனியா வைத்தியசாலையில்
வவுனியா வைத்தியசாலையில்
Posted in இலங்கை செய்திகள்

வவுனியா வைத்தியசாலையில் 24வயதுடைய பெண் அனுமதி : கொரோனா வைரஸ் என சந்தேகம

வவுனியா வைத்தியசாலையில் 24வயதுடைய பெண் அனுமதி : கொரோனா வைரஸ் என சந்தேகம

கொரோனா வைரஸ் என சந்தேகிக்கப்படும் 24வயதுடைய வவுனியாவை சேர்ந்த பெண்ணொருவர் இன்று (05.02)

காலை 10.30 மணியளவில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக

வடமாகாண சமுதாய வைத்திய நிபுனர் வைத்தியர் ஆர்.கேசவன் தெரிவித்தார்.

வவுனியாவை சேர்ந்த 24வயதுடைய குறித்த யுவதி சீனா நாட்டிக்கு கல்விக்காக சென்ற நிலையில் கடந்த 28ம் திகதி நாடு திரும்பியுள்ளார்.

குறித்த யுவதிக்கு மெல்லிய காய்ச்சல் மற்றும் தடிமல் இருந்தமையினால் குறித்த யுவதி சிகிச்சைக்காக வவுனியா

மாவட்ட பொது வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவிற்கு இன்று (05.02) காலை சென்று அவரது விடயங்களை தெரிவித்துள்ளார்.

குறித்த யுவதி கொரோனா வைரஸின் மையப்புள்ளியான சீனாவின் வுஹான் நகரில் இருந்து வெகு தொலைவில் தான்

வசித்துள்ளார். எனினும் மெல்லிய காய்ச்சல் மற்றும் தடிமல் போன்ற விடயங்கள் கொரோனா வைரஸின் அறிகுறிகளாக

இருக்கலாம் என்ற அச்சத்தில் அவரை வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒதுக்கப்பட்ட விசேட விடுதியில் தங்கப்பட்டு,

வடமாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதற்கென தெரிவு செய்யப்பட்டுள்ள வைத்தியசாலையான யாழ்ப்பாணம் போதனா

வைத்தியசாலைக்கு மாலை 3.00 மணியளவில் நோயாளர் காவு வண்டி மூலம் அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் குறித்த யுவதிக்கு பரிசோதனைகளை மேற்கொள்ளப்பட்டு பின்னரே குறித்த யுவதி கோரோனா வைரஸ் தொற்றுக்கு

உள்ளாகியுள்ளரா? என்ற விடயத்தினை உறுதிப்படுத்த முடியுமென மேலும் தெரிவித்தார்.