Tag: வடமாகாண விவசாய
வடமாகாண விவசாய அறுவடைகளை தென்பகுதிக்குக் கொண்டு செல்ல விஷேட ரெயில்
வடமாகாண விவசாய அறுவடைகளை தென்பகுதிக்குக் கொண்டு செல்ல விஷேட ரெயில்
வடமாகாணத்தில் சேதனப் பசளை பயன்பாட்டின் மூலம் உற்பத்தி செய்யப்படும் விவசாய
அறுவடை, மீன் மற்றும் கருவாடு போன்றவற்றை தென்பகுதிக்குக் கொண்டு செல்வதற்காக விஷேட ரெயில் ஒன்றை ஈடுபடுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவிற்கும் ரெயில்வே பொது முகாமையாளருக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
வடமாகாணத்தில் மீனவர்கள் எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு கவனம் செலுத்தியிருப்பதாக மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.
வடமாகாணத்தில் சகல துறைகளையும் இலக்காகக் கொண்டு அபிவிருத்தித் திட்டங்கள் விரைவுபடுத்தப்படும்.
மாகாண மக்கள் புரிந்துணர்வுடன் செயற்படுவதற்கான பின்புலம் ஏற்படுத்தப்படுமென்றும் ஆளுநர் ஜீவன் தியாகராஜா மேலும் தெரிவித்துள்ளார்.






