Tag: ருத்ர தாண்டவம்
Posted in Uncategorized
படப்பிடிப்பு தளத்தில் வாக்கு சேகரித்த ஜெயக்குமார்
Author: நிருபர் காவலன் Published Date: 26/03/2021 Leave a Comment on படப்பிடிப்பு தளத்தில் வாக்கு சேகரித்த ஜெயக்குமார்
படப்பிடிப்பு தளத்தில் வாக்கு சேகரித்த ஜெயக்குமார்
மோகன் ஜி இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான திரைப்படம் ‘திரெளபதி’. ரிச்சர்டு ரிஷி நாயகனாக நடித்திருந்த இப்படம் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தாலும், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்தை அடுத்து ‘ருத்ர தாண்டவம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் மோகன் ஜி. ‘திரெளபதி’ பட நாயகன் ரிச்சர்ட் ரிஷி இந்தப் படத்திலும் ஹீரோவாக நடிக்க, சின்னத்திரை
சீரியல்களில் நடித்து பிரபலமான தர்ஷா குப்தா ஹீரோயினாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ராயபுரத்தில் நடைபெற்று வருகிறது.
ருத்ர தாண்டவம்
அப்போது ராயபுரத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த அதிமுக அமைச்சர் ஜெயக்குமார், இயக்குனர் மோகனை சந்தித்து வாக்கு சேகரித்து மோகனையும் வாழ்த்தி சென்றார்.






