Tag: யாழில் மயங்கி வீழ்ந்து ஒருவர் பலி
Posted in இலங்கை செய்திகள்
யாழில் மயங்கி வீழ்ந்து ஒருவர் பலி
Author: நலன் விரும்பி Published Date: 19/08/2020 Leave a Comment on யாழில் மயங்கி வீழ்ந்து ஒருவர் பலி
யாழில். கூலி வேலையில் ஈடுபட்டிருந்தவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
புத்தூர் கலைமதி கிராமத்தை சேர்ந்த உ. சதிஸ் (வயது 43) எனும்
மூன்று பிள்ளைகளின் தந்தையே அவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சுன்னாகம் பகுதியில் கூலி வேலையில் நேற்றைய தினம்
ஈடுபட்டிருந்த வேளை திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
அதனை அடுத்து அங்கிருந்தவர்கள் மயக்கத்தை தெளிய வைக்கும்
நடவடிக்கையினை மேற்கொண்ட போதிலும் அவர்
மயக்கத்திலிருந்து மீளாததால் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
இதன்போது, வைத்திய சாலையில் வைத்தியர்கள் அவர் உயிரிழந்து விட்டார்
என உறுதிப்படுத்தியுள்ளனர். மரண விசாரணையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.







