Tag: மூவர்கைது
யாழில் வன்முறையில் ஈடுபட்ட மூவர்கைது
யாழில் வன்முறையில் ஈடுபட்ட மூவர்கைது
யாழில் வன்முறையில் ஈடுபட்ட மூவர்கைது ,யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையில் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
சந்தேகநபர்களிடமிருந்து ஐந்து வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் வன்முறைக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் மீட்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காளிங்க ஜெயசிங்கவின் உத்தரவுக்கமைய யாழ்ப்பாண மாவட்ட குற்றத் தடுப்புப்பிரிவு பொலிஸாரால் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
அண்மையில் இரண்டு மோட்டார் சைக்கிளில் சென்ற ஆறு பேர் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர்.
இதனால் மூன்று இலட்சம் வரையான பொருட்களுக்கு சேதம் ஏற்பட்டது.
சம்பவம் தொடர்பாக 19 மற்றும் 23 வயதான கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த 2 பேரும் அச்சுவேலியைச் சேர்ந்த ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
பொலிஸ் விசாரணையின் போது துபாயில் இருந்து வீட்டை தாக்க உத்தரவு கிடைத்ததாகவும் அதற்கமைய கூலிப்படையாக குறித்த வன்முறையில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பிள்ளையன் மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- முன்னாள் மீன்பிடி கூட்டுத்தாபனத் தலைவர் மஹீல் செனரத்ன கைது

- 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல்

- முன்னாள் அமைச்சர் அகில விராஜ் கரியவாசத்திற்கு பிணை

- கொலை வழக்கில் பிரதான சந்தேக நபர் விளக்கமறியலில்

- முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இலஞ்ச ஆணைக்குழுவால் கைது

- வியட்நாம் ஏர்லைன்ஸ், வியட்நாம் மற்றும் இலங்கைக்கு இடையே நேரடி விமான சேவை

- இந்தியக் கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் ஆறு பேர் பலி

- நாயறு கடற்கரையில் 51 வயது முதியவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்

- நான்கு பொலிஸ் அதிகாரிகள் கைது









