மின்சார கார்களை பயன்படுத்துங்கோ அனுரா குளறல்
Posted in இலங்கை செய்திகள்

மின்சார கார்களை பயன்படுத்துங்கோ அனுரா குளறல்

மின்சார கார்களை பயன்படுத்துங்கோ அனுரா குளறல்

மின்சார கார்களை பயன்படுத்துங்கோ அனுரா குளறல் ,மின்சார வாகனப் பயனாளர்கள் பகல் நேரத்தில் தங்கள் வாகனங்களை மின்னேற்றம் செய்யுமாறு ஜனாதிபதி வலியுறுத்தல்

மின்சாரத்தைச் சேமிக்கும் ஒரு நடவடிக்கை

மின்சாரத்தைச் சேமிக்கும் ஒரு நடவடிக்கையாக, மின்சார வாகனப் பயனாளர்கள் பகல் நேரத்தில் தங்கள் வாகனங்களை

மின்னேற்றம் செய்யுமாறு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நேற்று வலியுறுத்தினார்.

முன்பை விட மாலை 6 மணிக்குப் பிறகு மின்சாரத்திற்கான தேவை 300 மெகாவாட் அதிகரித்துள்ளதாக ஜனாதிபதி கூறினார்.

மின்சார வாகனப் பயனாளர்கள்

மின்சார வாகனப் பயனாளர்கள் பணியிலிருந்து வீடு திரும்பிய பிறகு மாலை 6 மணிக்கு மேல் தங்கள் வாகனங்களை மின்னேற்றம் செய்வதாகவும், இந்த

அதிகப்படியான தேவையைப் பூர்த்தி செய்ய அனைத்து மின் நிலையங்களையும் இயக்க வேண்டியுள்ளது என்றும் அவர் கூறினார்.

“பகல் நேரத்தில் நம்மிடம் மின்சார உபரி உள்ளது. எனவே, மின்சார வாகனப் பயனாளர்கள் பகல் நேரத்தில் தங்கள் வாகனங்களை மின்னேற்றம் செய்யுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்,” என்று அவர் கூறினார்.

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதலாவது மின்சார கார்

இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதலாவது மின்சார கார்

இலங்கை ,கொழும்பு ; ஐடியல் மோட்டர்ஸ் நிறுவனம் இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதலாவது முழுமையான மின்சார மோட்டார் காரை (29) சந்தைக்கு அறிமுகம் செய்துள்ளது.

இந்த காருக்கு ‘Ideal Moksha’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த புதிய Ideal Moksha கார், உலகம் முழுவதும் அதிக பிரபலம் பெற்ற ஆஸ்டின் மினி மொக் காரை போன்றது

இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதலாவது மின்சார கார்

அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் நேர்த்தியான வடிவமைப்புகளை பயன்படுத்தி அதிக திருப்திகரமான ஓட்டுநர் அனுபவத்தை வழங்கும் வகையில் இந்த காருக்கு ‘Moksha’ என பெயரிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Ideal Moksha கார் இலங்கையின் பாதைகளுக்கு ஏற்றவாறு தயாரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அதன் தோற்றம், இடவசதி, பயண சொகுசு என்பவற்றின் ஊடாக இந்த தயாரிப்பின் தனித்துவத்தைக் காட்டுகின்றது.

நான்கு சக்கர மின்சார Electric Codricycle மாதிரியை சேர்ந்த
Ideal Moksha மோட்டார் கார் 22.46 kWh லித்தியம் பெட்டரி மூலம் இயக்கப்படுகிறது.