Tag: மாடியிலிருந்து பாய்ந்
Posted in இலங்கை செய்திகள்
மாடியிலிருந்து பாய்ந்தார் முதியவர்
Author: நலன் விரும்பி Published Date: 16/01/2022 Leave a Comment on மாடியிலிருந்து பாய்ந்தார் முதியவர்
மாடியிலிருந்து பாய்ந்தார் முதியவர்
வௌ்ளவத்தை பிரதேசத்திலுள்ள தொடர்மாடியொன்றின் 7ஆம் மாடியிலிருந்து விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் 7ஆம் மாடியிலிருந்து கீழ் நோக்கி பாய்ந்துள்ளதாகவும் இதன்போது பலத்த காயமடைந்த நிலையில், களுபோவிலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், உயிரிழந்துள்ளதாக வௌ்ளவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் வௌ்ளவத்தையைச் சேர்ந்த 87 வயதுடையவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை வௌ்ளவத்தை பொலிஸார் முன்னெடுத்து வருவதுடன், குறித்த முதியவர் உளநல பாதிப்பால் இவ்வாறு தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.







