Tag: மகனும் மரணம்
தந்தையின் மரணச் சான்றிதழுக்காகச் சென்ற மகனும் மரணம்
தந்தையின் மரணச் சான்றிதழுக்காகச் சென்ற மகனும் மரணம்
உயிரிழந்த தந்தையின் இறுதிக் கிரியைகளுக்காக மரணச் சான்றிதழை எடுக்கச் சென்ற மகனும் விபத்தொன்றில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புளத்சிங்கல – பஹல நாரகல பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் இவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மோட்டார் சைக்கிளின் பின்னால் சென்ற ரந்திக பியூமல் கமகே என்ற (21) வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார்.
இவர் உயிரிழந்த தனது தந்தையின் மரணச் சான்றிதழைப் பெற்றுக் கொள்வதற்காக வேகமாக புலத்சிங்களவில் இருந்து ஹொரணைக்கு பயணித்துள்ளார்.
தந்தையின் மரணச் சான்றிதழுக்காகச் சென்ற மகனும் மரணம்
இவ்வாறு பயணித்த போது கீழ் நரகல பள்ளத்தாக்குக்கு அருகில் உள்ள வளைவில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகில் உள்ள மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக புலத்சிங்கள பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்தவரும் காயமடைந்து ஹொரண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புலத்சிங்கள பொலிஸ் நிலையப் பிரதான பொலிஸ் பரிசோதகர் சந்தன விதானகேவின் பணிப்புரையின் பேரில், போக்குவரத்துப் பிரிவின் நிலைய கட்டளைத் தளபதி பிரதி பொலிஸ் பரிசோதகர் செனவிரத்ன உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் குழு இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
- பேருந்து மோதி ஒருவர் பலி
- தடம் புரண்ட ரயில்
- கொச்சிக்காடு புனித அந்தோணியார் திருத்தலத்தின் ஆண்டுத் திருவிழாவிற்கான சிறப்புப் போக்குவரத்துத் திட்டம்
- பெட்டா மத்திய பேருந்து நிலையத்தில்அனுரா கொள்ளையர்கள்
- மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
- ஜூன் மாதத்தில் எரிபொருள் மானியங்கள் முடிவடையும் அரசு
- உயர் இரத்த அழுத்தம் கடுமையான நோய்களுக்கு ஒரு முக்கிய காரணம் சிறப்பு மருத்துவர்
- இலங்கையில் 1 1 மில்லியன் நீதிமன்ற வழக்குகள் தேக்கம்
- முன்னாள் முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வாவுக்குப் பிணை வழங்கப்பட்டது
- ராகம மருத்துவமனை உபகரணங்கள் புனரமைக்கப்பட்டு மில்லியன் கணக்கில் சேமிப்பு

















