Tag: பெண்ணின் மீது தாக்குதல்
பெண்ணின் மீது தாக்குதல் 5 பணியாளர்கள் கைது
பெண்ணின் மீது தாக்குதல் 5 பணியாளர்கள் கைது
பொரளை பகுதியிலுள்ள பல்பொருள் அங்காடியொன்றில் பெண் வாடிக்கையாளர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அந்த அங்காடியில் கடமையாற்றும் ஐவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.
பெண் வாடிக்கையாளர் ஒருவர் கொடூரமாக தாக்கப்படும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
பெண்ணின் மீது தாக்குதல் 5 பணியாளர்கள் கைது
ஹன்வெல்ல பிரதேசத்தில் இந்த சம்பவம் செப்டம்பர் 18 ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக முதலில் தெரிவிக்கப்பட்டது. எனினும், பொரளையிலுள்ள விற்பனை நிலையமொன்றில் இடம்பெற்றுள்ளதாக பின்னர் தெரியவந்துள்ளது.
இதேவேளை, இந்த சம்பவத்துடன் தொடர்புடைய தமது ஊழியர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என குறித்த பல்பொருள் அங்காடி நிர்வாகம் இதற்கு முன்னர் அறிவித்திருந்தது.
- தென் கடற்கரையில் இரண்டாவது சரக்குக் கொள்கலன் கரை ஒதுங்கியதுby நிருபர் காவலன்
- கெலியோய பேராதெனியாவிற்கு திடீர் வெள்ள எச்சரிக்கைby நிருபர் காவலன்
- ஜெயவர்தனபுர மருத்துவமனையில் தலைமை வெற்றிடத்தால் நோயாளிகளுக்கு ஆபத்துby நிருபர் காவலன்
- கண்டியின் சில பகுதிகளுக்கு நிலச்சரிவு காரணமாக வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுby நிருபர் காவலன்
- யோஷித ராஜபக்ச மற்றும் கரன்னகோடா மீது குற்றப்பத்திரிகைகள் தாக்கல்by நிருபர் காவலன்












