Tag: பாடசாலை
நாளை (27) முதல் பாடசாலைகள் ஆரம்பம்
நாளை (27) முதல் பாடசாலைகள் ஆரம்பம்
நாளை (27) முதல் 11, 12 மற்றும் 13 ஆம் தர மாணவர்களுக்காக மாத்திரம்
பாடசாலைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது..
அதன்படி, பாடசாலைகள் காலை 7.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு பிற்பகல்
3.30 மணிக்கு நிறைவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டு பொது தேர்தலுக்கு பாடசாலைகளை தயார்ப்படுத்துவது
தொடர்பில் விழிப்புணர்வுகளை வழங்குவதற்கு சகல பாடசாலை அதிபர்
மற்றும் பிரதி அதிபர்கள் ஜூலை மாதம் 28 ,29, 30, 31 ஆம் திகதிகள் பாடசாலையில்
தங்கியிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கால பகுதியில் பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு
பாதிப்பு ஏற்படாதவாறு உதவி தேர்தல் ஆணையாளர்களுடன் கலந்துரையாடி
தேர்தல் நடவடிக்கைக்காக பாடசாலைகளில் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சு குறிப்பிடப்பட்டுள்ளது..
பாடசாலைகளை மீண்டும் எதிர்வரும் 27 ஆம் திகதி ஆரம்பம் – கல்வி அமைச்சு
பாடசாலைகள் மீண்டும் ஆரம்பமாவதை ஒருவாரத்திற்கு ஒத்தி வைப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
அதற்கமைவாக பாடசாலைகளை மீண்டும் எதிர்வரும் 27 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.
இருப்பினும் எதிர்வரும் 27 ஆம் திகதி தரம் 11, 12 மற்றும் 13 ஆம் வகுப்பு மாணவர்களுக்கே கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
ஏனைய அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இராஜாங்கனை மற்றும் வெலிகந்த ஆகிய கல்வி வலையங்களுக்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் எதிர்வரும் ஆகஸ்ட் 10 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க வழங்கிய பரிந்துரைகளுக்கு அமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாட்டின் ஐந்து (05) மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளைச் சேர்ந்த சுமார் 200 பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களிள் PCR முடிவுகள் அடுத்த
சில நாட்களில் வெளிவரவுள்ளது , மூன்று மாணவர்களுக்கு மாத்திரமே தொற்று ஏற்பட்டுள்ளது என்பதையம் கருத்திற்கொண்டு, பாடசாலை கல்வி நடவடிக்கைகளை
முன்னெடுப்பது எனும் முடிவின் அடிப்படையில், பாடசாலை மாணவர்களை மேலும் ஒரு வாரத்திற்கு சமூகத்திலிருந்து
தனிமைப்படுத்துவது அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய எடுக்கக்கூடிய மிகவும் அர்த்தமுள்ள நடவடிக்கை என்று கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது.
அதற்கமைய, பாடசாலைகள் எதிர்வரும் ஜூலை 27 இல் ஆரம்பிப்பது மிகவும் பொருத்தமான திகதியாக இருக்கும் என கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது.
குறித்த வாரத்தில் தரம் 11, 12 , 13 ஆகிய மாணவர்கள் மட்டுமே பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டும்.
ஏனைய தரங்களில் உள்ள மாணவர்களுக்கு தேர்தலுக்குப் பின்னர் வருகின்ற முதலாவது திங்கட்கிழமையான ஓகஸ்ட் 10 ஆம் திகதி
கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க சிறந்த தினமாக இருக்கும் என, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பரிந்துரைத்துள்ளார்.
இருந்த போதிலும், ஓகஸ்ட் 10 ஆம் திகதிக்கு முன்னர் இராஜங்கனை மற்றும் வெலிக்கந்த கல்வி பிரிவுகளில் எந்த பாடசாலைகளையும்
திறக்க வேண்டாம் என்று சம்பந்தப்பட்ட மாகாண அதிகாரிகளுக்கு கல்வி அமைச்சினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று கல்வி
அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு நடவடிக்கைக்காகவே பாடசாலைகள் ஒரு வாரத்திற்கு திறப்பது தள்ளி வைப்பு
பாதுகாப்பு நடவடிக்கைக்காகவே பாடசாலைகள் ஒரு வாரத்திற்கு திறப்பது தள்ளி வைப்பு
பாடசாலைகளை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளமை பாதுகாப்பு நடவடிக்கையாகும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
இருப்பினும் பொது மக்கள் இது தொடர்பில் கூடுதலான கவனம் செலுத்த வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார். கடந்த சில வாரங்களாக பொது மக்கள் சுற்றுலாப்பயணங்களில் ஈடுபடவில்லை. தம்மைப்போன்று ஏனையோரின் சுகாதார பாதுகாப்பு தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும்.
நாடு திறக்கப்பட்டமை பொருளாதாரத்தைப் போன்று தமது வாழ்வாதார தேவைகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கே ஆகும். இருப்பினும் கொரோனா வைரஸ் தொற்று அபாயம் நீங்கவில்லை என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.
பொது தேர்தலை நடத்துவதைப் போன்று ஏனைய நடவடிக்கைகள் தொடர்பில் வழங்கப்பட்ட சுகாதார வழிகாட்டி ஆலோசனைகளுக்கு நடைமுறையில் அதிகாரம் வழங்குவது மிக முக்கியமானதாகும். இது தொடர்பில் சம்பந்தப்பட்ட வர்த்தமானி அறிவிப்பை வெளியிடுவது தொடர்பில் சுகாதார அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அநுராதபுரம், ,ராஜாங்கனை பிரதேசத்தில் சமீபத்தில் இடம்பெற்ற மரண நிகழ்வு மற்றும் அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற தான நிகழ்வு சுகாதார வழிகாட்டி ஆலோசனைகளை மீறிய வகையில் இடம்பெற்றுள்ளது என்றும் கூறினார்.
இதனூடாக இந்த பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவியதாக அனில் யாசிங்க தெரிவித்துள்ளார். கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் பணியாற்றிய ஆலோசகர் ஊடாக ராஜாங்கனை பிரதேசத்தில் நடைபெற்ற தான நிகழ்வில் கலந்துகொண்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் தற்பொழுது இந்த பிரதேசத்தில் கொரோனா தொற்று நோயாளிகள் 12 பேர் பதிவாகியிருப்பதாகவும் அவர் கூறினார்.
தற்பொழுது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டி ஆலோசனைகளை கடைப்பிடிக்காத இடங்களில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதற்கு உள்ள சூழ்நிலைக்கு இது சிறந்த உதாரணமாகும் என்று தெரிவித்த வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க இது தொடர்பில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்படவேண்டும் என்றும் தெரிவித்தார்.
நாட்டை வழமை நிலைக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை மேற்கொண்ட போதிலும் பொது மக்கள் தேவையற்ற வகையில் செயற்படுகின்றனர். இது தொடர்பில் பொது மக்கள் மீண்டு சிந்திப்பது மிக முக்கியமானதாகும்.
பாடசாலைகளை மீளத் திறக்கும் நடவடிக்கைகளின் முதற்கட்டம் இன்று ஆரம்பம்
பாடசாலைகளை மீளத் திறக்கும் நடவடிக்கைகளின் முதற்கட்டம் இன்று ஆரம்பம்
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் சுமார் நான்கு மாதங்களின் பின்னர் இன்று மீண்டும் திறக்கப்படவுள்ளது.
இதன்படி பாடசாலை அதிபர், ஆசிரியர் மற்றும் கல்வி சாரா ஊழியர்கள் மாத்திரம் இன்றைய தினம் பாடசாலைக்கு
சமூகமளிக்க வேண்டும். நான்கு கட்டங்களின் கீழ் பாடசாலைகள் மீள திறக்கப்படவுள்ளன. இன்றைய தினம் முதல் கட்டமாக மாணவர்களை தவிர்த்தே பாடசாலை செயற்பாடுகள்
ஆரம்பமாகவுள்ளது. இதற்கமைவாக முதல் வாரத்தில் பாடசாலைகளின் சுற்றுப்புறச் சூழல் சுத்தப்படுத்தப்பட்டு, தொற்று நீக்கி விசிறப்படவுள்ளது.
பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்கும் போது சுகாதார பணிப்பாளர் நாயகம் வெளியிட்டுள்ள சுற்று நிருபமும், வழிகாட்டல்களும் சகல பாடசாலைகளுக்கும்
வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் என்.எச்.எம். சித்திரானந்த தெரிவித்துள்ளார். அனைத்து பாடசாலைகளும் பாதுகாப்பான இடமாக மாற்றப்பட்டுள்ளதா என்பதனை
கண்காணிப்பதற்கு கல்வி அமைச்சருடன் இணைந்து ஒருவார காலம் பாடசாலைகளை கண்காணிக்கவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்கும் இரண்டாம் கட்டம் எதிர்வரும் ஆறாம் திகதி இடம்பெறவுள்ளது. தரம் 05, 11, 13 ஆகிய வகுப்பு மாணவர்கள் இரண்டாம் கட்டத்தில் பாடசாலைகளுக்கு
அனுமதிக்கப்படுவார்கள். தரம் 10, 12 மாணவர்கள் மூன்றாம் கட்டத்தின் கீழ் யூலை மாதம் 20ஆம் திகதி பாடசாலைகளுக்கு
செல்வதற்கு அனுனுமதி வழங்கப்பட்டுள்ளது. நான்காம் கட்டத்தின் கீழ், தரம் 03, 04, 06, 07, 08, 09 வகுப்புகளைச் சேர்நத மாணவர்களக்கான கற்றல் நடவடிக்கை ஆரம்பமாகவுள்ளது.
பாடசாலைகள் முதற்கட்டமாக எதிர்வரும் திங்கட்கிழமை திறப்பு
பாடசாலைகள் முதற்கட்டமாக எதிர்வரும் திங்கட்கிழமை திறப்பு
கொரோனா வைரஸ் தாக்கத்தினால் மூடப்பட்டிருந்த பாடசாலைகளை மீண்டும் திறக்கும் நடவடிக்கையின்கீழ்
முதற்கட்டத்தின் கீழான பாடசாலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை திறக்கப்படவுள்ளன.
பாடசாலை அதிபர்கள், பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை முகாமைத்துவம், கல்விசாரா ஊழியர்கள் போன்றோர்
ஆகியோருக்காக அன்றைய தினம் பாடசாலைகள் திறக்கப்டவருப்பதாக கல்வி அமைச்சின் செயலாளர் என்.எச்.எம். சித்திரானந்த தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பில் செயலாளர் மேலும்
தெரிவிக்கையில்,,தொற்று நீக்கம் செய்தல், தூய்மைபடுத்துதல், பாடங்களுக்கான நேர அட்டவணை தயாரித்தல் போன்ற
பணிகளில் இவர்கள் ஈடுபடுவார்கள். இரண்டாம் கட்ட நடவடிக்கைகள் அடுத்த மாதம் 6ஆம் திகதி
ஆரம்பமாகவிருக்கின்றன. அன்றைய தினத்தில் தரம் 5ஆம், 11ஆம், 13ஆம் ஆண்டுகளைச் சேர்ந்த மாணவர்கள் பாடசாலைகளுக்குச்
செல்வது அவசியமாகும். பத்தாம், 12ஆம் தரங்களில் கற்கும் மாணவர்கள் ஜூலை மாதம் 20ஆம் திகதி பாடசாலைகளுக்கு அழைக்கப்படவிருக்கிறார்கள் என்றார்.
2 ,வாரங்களுக்குப் பின்னரே பாடசாலைகளை மீண்டும் ஆரம்பம்
2 ,வாரங்களுக்குப் பின்னரே பாடசாலைகளை மீண்டும் ஆரம்பம்
கொவிட் 19 தொற்று பரவலுக்கு பின்னர் பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் திகதியை இன்னும் ஒரு வாரம் அல்லது இரண்டு
வாரங்களில் அறிவிக்கக் கூடியதாக இருக்குமென்று கல்வி அமைச்சர் டலஸ் அளகப்பெரு தெரிவித்தார்.
கல்வி அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனை தெரிவித்தார்.
66 நாட்களுக்குப்பின்னர் இன்று முழுநாட்டிலும் மீண்டும் வழமையான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.இதில் எதிர்வரும் ஒரு வாரக் காலப்பகுதியில் சமூகததின் செயற்பாடு
போக்குவரத்துத் துறையிலான விடயங்கள் முதலான விடயங்கள் ஆராயப்படும் என்று கல்வி அமைச்சர் தெரிவித்தார். இதன்
அடிப்படையில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாக கல்வி அமைச்சும் சுகாதார அமைச்சின் அதிகாரிகளுக்கிடையில் பேச்சுவார்;த்தை நடத்தப்பட்டதாகவும் கூறினார்.
பாடசாலை மாணவர்களை பாடசாலைக்கு அழைப்பது பல கட்டங்களின் கீழ் இடம்பெறும் . முதல் கட்டத்தின் கீழ் உயர்தரத்தில்
கல்வி பயிலும் மாணவர்களுக்காக பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டில்; 43 இலட்சம் பாடசாலை மாணவர்கள் கல்வி பயிலுகின்றனர். இவர்கள் பொதுப்போக்குவரத்தை பயன்படுத்துகின்றனர்.இதனால் இவர்களது போக்குவரத்து
வசதிகளுக்காக போக்குவரத்து அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
தென்கொரியாவில் 4 மாதங்களுக்கு பின்னரே பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டன. பிரிட்டனில் கொவிட் தொற்றுக்கு மத்தியில் ஆரம்ப பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
எல்ரீரீயுடனான போரை முடிவுக்கு கொண்டு வந்தது போன்று இதனை நாம் செய்ய முடியாது. கொரோனா வைரசு தொற்று சர்வதேச ரீதியில் பெரும் பிரச்சினையாக இன்று அமைந்துள்ளது.
இலங்கையிலும் அது உண்டு. இந்த விடயங்களை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்த கல்வி அமைச்சர்
பாடசாலை மாணவர்களை பாதுகாத்து அதாவது பாடசாலைகளை மூடி கொவிட் 19 தொற்றிற்கு எதிரான போராட்டத்தை
ஆரம்பித்தோம். இதே போன்றே இதனை முடிவிற்கு கொண்டு வந்து நாம் மீண்டும் பாடசாலைகளை ஆரம்பிப்போம் என்பதே எமது
நிலைப்பாடு. மாணவர்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்ட பின்னரே பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கபடும் என்று கல்வி அமைச்சர் டலஸ் அளகப்பெரு மேலும் தெரிவித்தார்.
இடிந்து வீழ்ந்த பாடசாலை -8 மாணவர் காயம் – photo
இடிந்து வீழ்ந்த பாடசாலை -8 மாணவர் காயம் – photo
இலங்கை – அம்பலங்கொட பகுதியில் பாடசாலை கட்டிடத்தின் கூரை இடிந்து வீழ்ந்ததில் அவ்வேளை
கல்வி கற்று வந்த எட்டு மாணவர்கள் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .
இந்த பாடசாலை கூரை எவ்வாறு இடிந்து வீழ்ந்தது என்றது தொடர்பில் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
மேற்படி சம்பவம் மக்கள் ,மற்றும் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது








