Tag: நிலவில் மோதியது
லூனா 25 விண்கலம் நிலவில் மோதியது
லூனா 25 விண்கலம் நிலவில் மோதியது
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக லூனா-25 என்ற விண்கலத்தை கடந்த 10ம் திகதி ரஷியா விண்ணில் செலுத்தியது.
இந்த விண்கலத்தை நாளை (21) நிலவின் தென் துருவத்தில் தரையிறக்க திட்டமிட்டு இருந்தது. கடந்த 17ம் திகதி நிலவின் சுற்றுவட்ட பாதைக்குள் ரஷிய விண்கலம் வெற்றிகரமாக நுழைந்தது. தொடர்ந்து படிப்படியாக சுற்றுப்பாதையை குறைக்கும் பணிகள் நடந்து வந்தன.
இந்தியாவுக்கு போட்டியாக ஏவப்பட்ட ரஷிய விண்கலம் நிலவில் தரையிறக்குவதில் சிக்கல் ஏற்பட்டது.
லூனா 25 விண்கலம் நிலவில் மோதியது
திடீரென விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இறுதிக்கட்ட சுற்றுப்பாதையை குறைப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளதாக ரஷிய விண்வெளி நிறுவனம் கூறியது.
இந்தந்லையில் நிலவுக்கு ரஷியா அனுப்பிய லூனா 25 விண்கலம் நிலவில் மோதியது. லூனா 25- விண்கலத்துடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்த ரஷிய விஞ்ஞானிகள் முயற்சித்த நிலையில் இந்த திட்டம் தோல்வி அடைந்தது.
லூனா 25-ன் சுற்றுவட்டப்பாதையை குறைக்கும் போது நேற்றைய தினம் தொடர்பு துண்டிக்கப்பட்டது. நிலவில் மோதியதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது ரஷிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்
- இறுதிப்போர் சாபம் 33 குளங்கள் திறப்பு வெள்ளத்தில் சிங்கள கிராமங்கள்by நிருபர் காவலன்
- இறக்குமதியைக் கட்டுப்படுத்தவும், ரூபாய்க்கு ஆதரவளிக்கவும் இந்தியாby நிருபர் காவலன்
- கனமழைக்கு மத்தியில் நிலச்சரிவு அபாயங்கள்by நிருபர் காவலன்
- மேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களில் 200 மி.மீ-க்கு மேல் கனமழைக்கான எச்சரிக்கைby நிருபர் காவலன்
- மிதவாத-வலதுசாரி அரசியல் முகாமை விட்டு வெளியேறப் போவதில்லை என ஹர்ஷாby நிருபர் காவலன்












