Tag: நிரவ் மோடி
வங்கி கடன் மோசடி- நிரவ் மோடி கூட்டாளி எகிப்து நாட்டில் கைது
வங்கி கடன் மோசடி- நிரவ் மோடி கூட்டாளி எகிப்து நாட்டில் கைது
நிரவ் மோடியின் பெரும்பாலான பண பரிவர்த்தனைகளை சுபாஷ்சங்கர்தான் செய்ததாக தெரிகிறது. இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக சி.பி.ஐ. அதிகாரிகள் அவரை மும்பை அழைத்து வந்துள்ளனர்.
வங்கி கடன் மோசடி- நிரவ் மோடி கூட்டாளி எகிப்து நாட்டில் கைது
சுபாஷ் சங்கர்
இந்தியாவில் பிரபல வைர வியாபாரியாக இருந்தவர் நிரவ்மோடி. இவருக்கு நாடு முழுவதும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தங்க, வைர நகை கடைகள் இருந்தன.
இவர் தனது தொழிலை மேம்படுத்துவதற்காக பல்வேறு வங்கிகளில் கடன் வாங்கி இருந்தார். பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி கடன் பெற்று இருந்தார்.
சுமார் ரூ.30 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் வாங்கி இருந்த அவர் பாதி பணத்தை வங்கிகளுக்கு திருப்பி செலுத்தவில்லை. 13 ஆயிரத்து 578 கோடி ரூபாய் அவர் கடன் மோசடி செய்ததாக வங்கிகள் புகார் தெரிவித்தன. இதையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர்.
இதை அறிந்ததும் நிரவ் மோடியும் அவரது குடும்பத்தினரும் மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளிகளும் வெளிநாடுகளுக்கு தப்பி சென்று விட்டனர். நிரவ் மோடி லண்டனில்
தஞ்சம் அடைந்தார். அவரை அங்கிருந்து இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கு முயற்சிகள் நடந்து வருகிறது.
நிரவ் மோடியின் சொத்துக்களை ஏலம் விட்டு அந்த பணம் வங்கிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. முழுமையாக பணத்தை மீட்பதற்காக அவரது கூட்டாளிகளை கைது செய்யும் நடவடிக்கைகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் நிரவ் மோடியின் மிக முக்கிய நெருங்கிய கூட்டாளி சுபாஷ்சங்கர் எகிப்து நாட்டில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. சி.பி.ஐ. அதிகாரிகள் அவரது
நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். நேற்று அவரை எகிப்து தலைநகர் கெய்ரோவில் கைது செய்தனர்.
நிரவ் மோடியின் பெரும்பாலான பண பரிவர்த்தனைகளை சுபாஷ்சங்கர்தான் செய்ததாக தெரிகிறது. இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக சி.பி.ஐ.
அதிகாரிகள் அவரை மும்பை அழைத்து வந்துள்ளனர். நிரவ் மோடி வழக்கில் சுபாஷ்சங்கர் கைதானது மிக பெரிய வெற்றியாக கருதப்படுகிறது.
மும்பை அழைத்து வரப்பட்டுள்ள சுபாஷ்சங்கர் சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார். அதன் பிறகு அவரை சி.பி.ஐ. அதிகாரிகள் காவலில் எடுத்து
விசாரணை நடத்துவார்கள். இதன் மூலம் பல புதிய தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிரவ் மோடி நடத்தி வந்த நிறுவனங்களில் பயர்ஸ்டார் டைமண்ட் நிறுவனத்தின் துணை பொது மேலாளராக சுபாஷ்சங்கர் இருந்து வந்தார். வைர நகைகளை
கோடிக்கணக்கில் கைமாற்றியதில் இவருக்குதான்
முக்கிய பங்கு இருப்பதாக கருதப்படுகிறது
13 ஆயிரம் கோடி மோசடி மன்னன் -லண்டன் சிறையில் அடைப்பு
13 ஆயிரம் கோடி மோசடி மன்னன் -லண்டன் சிறையில் அடைப்பு
ரூ.13 ஆயிரம் கோடி வங்கி கடன் மோசடியில் கைதாகி சிறையில் உள்ள குற்றவாளி நிரவ் மோடியின் காவலை ஜூலை 9-ம் தேதி வரை நீட்டித்து லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது.
லண்டன் சிறையில் உள்ள நிரவ் மோடியின் காவல் ஜூலை 9 வரை நீட்டிப்பு
நிரவ் மோடி
மும்பையை சேர்ந்த வைர வியாபாரி நிரவ்மோடி (48), தனது உறவினர் மெகுல் சோக்சியுடன் சேர்ந்து பஞ்சாப் நேஷனல்
வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி கடன்பெற்று வெளிநாட்டுக்கு தப்பி ஓடினர்.
லண்டனில் தலைமறைவாக இருந்த நிரவ் மோடி கடந்த மார்ச் மாதம் ஸ்காட்லாந்து யார்டு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
தற்போது கைதிகள் நெருக்கடி மிகுந்த வாண்ட்ஸ் வோர்த் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது.
நிரவ் மோடியை இந்தியாவுக்கு நாடுகடத்துவது தொடர்பான வழக்கு லண்டன் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. அப்போது அவர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தார்.
அந்த மனுவை விசாரித்த வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் நிரவ் மோடியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
மேலும், அடுத்தடுத்து அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் நிரவ் மோடியின் சிறை காவல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது.
சிறையில் உள்ள நிரவ் மோடி, 28 நாள்களுக்கு ஒரு முறை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு வருகிறார்.
இந்நிலையில், இந்த வழக்கு வெஸ்ட்மின்ஸ்ட்டர் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வீடியோ கான்பரன்சில் நிரவ் மோடி ஆஜர்படுத்தப்பட்டார்.
இதையடுத்து, நிரவ் மோடியின் சிறைக்காவலை மேலும் 28 நாட்கள் (ஜூலை 9-ம் தேதி வரை) நீட்டித்து உத்தரவிட்டது. நாடு கடத்துவது
தொடர்பான வழக்கின் இரண்டாம் கட்ட விசாரணை செப்டம்பர் மாதம் 7-ம் தேதி நடைபெறும் என நீதிமன்றம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






