Tag: நகையை பறித்த காதலன்
கள்ள காதலியை மிரட்டி நகையை பறித்த காதலன்
கள்ள காதலியை மிரட்டி நகையை பறித்த காதலன்
பெண் ஒருவருடன் தகாத உறவில் ஈடுபட்டிருந்த 23 வயது இளைஞன், குறித்த பெண்ணின் நிர்வாண புகைப்படங்களை அவரின் கணவனுக்கு அனுப்புவதாக மிரட்டி, பெண்ணிடம் இருந்த தங்க நகைகளை வலுக்கட்டாயமாக பறித்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கள்ள காதலியை மிரட்டி நகையை பறித்த காதலன்
குறித்த பெண்ணை விடுதிக்கு அழைத்துச் சென்று தாம் இருவரும் ஒன்றாக இருக்கும் பொழுது அந்தப் பெண்ணுடன் குறித்த இளைஞர் நிர்வாணமாகப் படம் பிடித்துள்ளார்.
அதனையடுத்து அந்த நிர்வாணப் புகைப்படங்களை பெண்ணின் கணவரிடம் காட்டுவதாகக் கூறி மிரட்டி அவரிடம் இருந்த ரூ. 1,785,000 பெறுமதியான தங்க நகைகளை வலுக்கட்டாயமாகப் பெற்றுள்ளார் என விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது.
நீர்கொழும்பைச் சேர்ந்த குறித்த சந்தேக நபர் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
- மவுண்ட் லவினியா துப்பாக்கிச் சூடு 2நபர்கள் கைது
by நிருபர் காவலன் - 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவுக்கு எதிராகத் தாக்கல்
by நிருபர் காவலன் - இலஞ்சம் வாங்கிய பொலிஸ் அதிகாரி கைது
by நிருபர் காவலன் - பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை
by நிருபர் காவலன் - 2027 ஆம் ஆண்டுக்கான பள்ளிப் பருவ கால அட்டவணையை கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது
by நிருபர் காவலன்







