Tag: செல்வம் அடைக்கலநாதன்
சிங்கள தேசத்தில் தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்தார்கள்
சிங்கள தேசத்தில் தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்தார்கள்
வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்தில் மகா சிவராத்திரி தினத்தன்று குறித்த ஆலயத்திற்குச் சென்ற பல்வேறு துன்பங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
பொலிஸார் அங்கு மேற்கொண்ட நடவடிக்கைகளை வன்மையாக கண்டிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் உள்ள அலுவலகத்தில் நேற்று (14) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த சிங்கள தேசத்தில் தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்தார்கள் என்பதை இல்லாது ஒழிப்பதற்காக பல்வேறு செயல் திட்டங்களை இலங்கை அரசாங்கம்,அதனுடன் சேர்ந்த திணைக்களங்கள் மற்றும் புத்த பிக்குகள் மிகவும் மோசமாக வன்முறையை உறுவாக்குவதற்காகவும் எமது இனத்தை இல்லாது ஒழிப்பதற்குமான செயல்பாட்டை செய்து வருகின்றனர்.
இந்த நிலையிலே,தற்போது உச்ச கட்டமாக சிவராத்திரி அன்று வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்தில் வழிபாட்டிற்காக சென்ற எம் உறவுகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மக்கள் மீது பொலிஸார் வண்முறையை உபயோகித்துள்ளனர், குறித்த சம்பவம் கண்டிக்கத்தக்கது என அவர் மேலும் தெரிவித்தார்.
வடக்கில் அமையவுள்ள சீனித் தொழிற்சாலை யாருடையது என்பதை வெளிப்படுத்திய செல்வம் அடைக்கலநாதன்
வடக்கில் அமையவுள்ள சீனித் தொழிற்சாலை யாருடையது என்பதை வெளிப்படுத்திய செல்வம் அடைக்கலநாதன்
சீனித் தொழிற்சாலை தொடர்பில் யாரும் குத்தி முறிய வேண்டாம் என தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) அமைப்பின் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இன்று (03.07) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது வவுனியாவில் சீனித்தொழிற்சாலை அமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
சீனித்தொழிற்சாலை தொடர்பில் 4 வது தடவையாக அமைச்சரவை அனுமதி கிடைத்திருக்கின்றது. ஆனாலும் நடைமுறைப்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் உருவாக்கப்படவில்லை. நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. முதலீட்டாளர்கள் இன்னும் தமது கருத்துக்களை சொல்லவில்லை. ஆனால் பலர் குத்திமுறிகிறார்கள். சிங்கள குடியேற்றம் வரும் எனவும், சீனா முதலீடு எனவும் கூறுகிறார்கள்.
வடக்கில் அமையவுள்ள சீனித் தொழிற்சாலை யாருடையது என்பதை வெளிப்படுத்திய செல்வம் அடைக்கலநாதன்
எம்மைப் பொறுத்தவரை தமிழீழ விடுதலை இயங்கம் சீனாவின் முதலீட்டை அதாவது இந்தியாவுக்கு எதிரான முதலீட்டை ஏற்கமாட்டோம். இந்தியாவுக்கு எதிரான எந்தவொரு விடயங்களையும் நாங்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. சீனா முதலீட்டை எதிர்போம். நாம் ஒரு போராட்ட இயக்கம். நிச்சயமாக சிங்கள குடியேற்றங்களையும் எதிர்ப்போம்.
சீனித் தொழிற்சாலை முறையாக நடைமுறைப்படுத்தப்படாத நிலையில் பல பேர் குத்தி முறிகிறார்கள். வவுனியா மக்களோ அல்லது வவுனியாவில் உள்ள அரசியல்வாதிகளோ இது தொடர்பில் கருத்து சொல்லவில்லை. வவுனியாவிற்கு வரும் முதலீடு என்ற அடிப்படையில் எங்களது மக்களின் கருத்துக்களையும், இங்குள்ள அரசியல்வாதிகள், பொது அமைப்புக்களின் தலைவர்கள் ஆகியோரது கருத்துக்களையும் பெற்ற பின் தான் இங்கு கொண்டு வருவதா இல்லையா என முடிவெடுப்போம்.
ஆகவே, தயவு செய்து யாரும் கத்தி முறியவேண்டாம். சீனித் தொழிற்சாலையால் சிங்கள குடியேற்றம் வரும். சீனா வரும் என நிரூப்பிக்க முடிந்தால் நிரூப்பிக்கவும். அதைவிடுத்து சும்மா குத்திமுறிவதால் அர்த்தமில்லை.
இந்த தொழிற்சாலை தாய்லாந்து நிறுவனத்தின் முதலீடு. இதில் தமிழீழ விடுதலை இயக்கம் எந்தப் பங்காளியும் இல்லை. இது தென்னிலங்கைக்கு செல்வதற்கான வாய்ப்பை தடுத்து நிறுத்தி வடக்கிற்கு கொண்டு வருவதற்கான ஒரு முயற்சியே. இதற்கான பங்காளிகளாக நாம் இருக்கப் போவதில்லை.
முதலீட்டாளர்களை கொண்டு வருவதற்கான ஒரு செயற்பாடே ஒழிய பங்காளர் இல்லை. மக்களின் நலன், விவசாயிகளின் நலன் என்பன பற்றி கவனம் செலுத்தி வவுனியா மக்களோடு கலந்தாலோசித்து எமது கருத்தை சொல்ல இருகின்றோம். வவுனியா மக்கள் விரும்பவில்லை என்றால் சிங்கள இடத்திற்கு போகட்டும். மக்கள் அபிப்பிராயம் பெற்று தான் நாம் முடிவெடுப்போம்.
எங்களைப் பொறுத்தவரை எமது தேசத்தில் முதலீடுகள் நடைபெற வேண்டும். ஆகவே இதில் முதலீட்டை பார்ப்பதை விட்டுவிட்டு கனவுகளோடு பார்க்க வேண்டாம். ஆதாரம் இல்லாத கருத்துக்களை கூற வேண்டாம்.
வவுனியா மக்கள் ஆதரவு தந்தால் கொண்டு வர முயற்சி செய்வோம். அவர்கள் வேணாம் என்றாம் திருப்பி அனுப்புவோம். தமிழீழ விடுதலை இயக்கம் முதலீட்டை கொண்டு வர முயற்சிக்கின்றது என்பதற்காக சிலர் இதை எதிர்க்கிறார்கள். இது எங்களது ஒரு முயற்சி அவ்வளவு தான். இதை பற்றி யாரும் குத்தி முறிய வேண்டாம். நாமும் குத்தி முறியப்போவதில்லை எனத் தெரிவித்தார்.
ரவுடித்தனம் செய்வது புத்த பிக்குகள் என்கிறார் செல்வம் அடைக்கலநாதன்
ரவுடித்தனம் செய்வது புத்த பிக்குகள் என்கிறார் செல்வம் அடைக்கலநாதன்
புத்தருடைய போதனையை மறந்து இங்கு ரவுடித்தனம் செய்வது எல்லாம் புத்த பிக்குகள் தான் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
வவுனியாவில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
குருந்தூர் மலை காணி விடயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினுடைய கூட்டங்களிலும், ஜனாதிபதி வவுனியா வந்த போதும் நாம் முன்வைத்த கோரிக்கையை ஏற்று 400 ஏக்கர் விவசாய நிலத்தை மக்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என அவர் உத்தரவிட்டிருந்தார்.
ரவுடித்தனம் செய்வது புத்த பிக்குகள் என்கிறார் செல்வம் அடைக்கலநாதன்
தற்போது பௌத்த பிக்குகள் எல்லா விடயங்களிலும் தலையிடுகிறார்கள். எங்களது பிரதேசத்தில் எங்களுக்கு சொந்தமான வயல்களை மக்களுக்கு வழங்க வேண்டும் என்று நாட்டின் ஜனாதிபதி உத்தரவிட்ட பின்பு பௌத்த பிக்குகள் இதற்கு எதிராக குரல் கொடுக்கிறார்கள்.
மூளைக்கு மூளை புத்த கோவில்களை கட்ட முனைகிறார்கள். அதை ஒரு பிரச்சனையாக தமிழ் மக்கள் மத்தியில் உருவாக்க முயல்கிறார்கள். இனப்பிரச்சனையில் கூட புத்த பிக்குகளின் இனத் துவேசத்தை கக்குபவர்களாக தான் இருக்கிறார்கள்.
புத்தர் அந்தப் போதனையை செய்யவில்லை. ஆனால் இங்கு ரவுடித் தனம் செய்வதெல்லாம் புத்த பிக்குகள். என்னைப் பொறுத்தவரை இந்த காணி விடயத்தில் புத்த பிக்குகள் தலையிடக் கூடாது. ஜனாதிபதி உத்ததரவிட்ட விடயம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அது மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் அது தான் எமது கோரிக்கை. இந்த புத்த பிக்குகளின் குரல்களுக்கு எல்லாம் நாங்கள் பதில் சொல்வது எங்களை மலினப்படுத்தும் என்பது தான் எனது கருத்தாகும் எனத் தெரிவித்தார்.
முடிந்தால் செய்து காட்டுங்கள் என சரத் வீரசேகரக்கு சவால் விட்ட செல்வம் அடைக்கலநாதன்!
முடிந்தால் செய்து காட்டுங்கள் என சரத் வீரசேகரக்கு சவால் விட்ட செல்வம் அடைக்கலநாதன்!
சரத்வீரசேகர இராணுவத்தில் றொட்டி சுட்டுக் கொண்டா இருந்தார். முடிந்தால் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை கைது செய்து காட்டுங்கள் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (16.06) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
முன்னாள் அமைச்சர் சரத்வீரசேகர அவர்கள் கடந்த காலங்களில் பல கருத்துக்களை கூறியுள்ளார். குறிப்பாக தமிழ் பிரதேசங்களில் நடைபெறுகின்ற அடக்கு முறைக்கு எதிராக குரல் கொடுக்கின்ற தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று சொல்லியிருக்கின்றார். மாகாணசபை முறையையும் இல்லாது ஒழிக்க வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
முடிந்தால் செய்து காட்டுங்கள் என சரத் வீரசேகரக்கு சவால் விட்ட செல்வம் அடைக்கலநாதன்!
சரத் வீரசேகர அவர்கள் இராணுவத்தில் றொட்டி சுட்டுக் கொண்டா இருந்தார். ஏனெனில் எங்களது மக்களது பிரச்சனை என்பது காலம் காலமாக இருந்து வரும் பிரச்சனை. தங்களது பிரச்சனைகளைப் பேசுவதற்கே மக்கள் பாராளுமன்றம் அனுப்புகிறார்கள். தங்களுக்கான அநீதிகளை சுட்டுக் காட்டும் வழியிலும் தான் நாடாளுமன்றம் அனுப்புகிறார்கள். அந்தவகையில் தங்களது தேசத்து மக்களது பிரச்சனைகளை பாராளுமன்ற உறுப்பினர்கள் பேசுகிறார்கள். இவர் யார்? தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை கைது செய்து சிறையில் அடைக்கச் சொல்வதற்கு இவருக்கு என்ன உரிமை இருக்கிறது? முடிந்தால் அதை செய்து பார்க்கட்டும். சும்மா இராணுவத்தில் இருந்து எதையெல்லாம் செய்து போட்டு வந்து கொக்கரிக்க கூடாது. எனவே அவருக்கு சவால் விடுகின்றேன். மக்கள் நலன் சார்ந்து பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்களை கைது செய்யுங்கள் பார்க்கலாம். அடுத்து என்ன நடக்கும் என பார்ப்பீர்கள் எனத் தெரிவித்தார்.
அனைத்து தமிழ் தேசிய கட்சிகளும் ஒரு குடையின் கீழ் பயணிக்கவேண்டும்-செல்வம் அழைப்பு
அனைத்து தமிழ் தேசிய கட்சிகளும் ஒரு குடையின் கீழ் பயணிக்கவேண்டும்-செல்வம் அழைப்பு
மற்றவர்களை ஒற்றுமைப்படுத்திவிட்டு தங்களது தனித்துவத்தினை பேணவேண்டும் என்று நினைத்தால் அதில்வெற்றிபெறமுடியாது என தெரிவித்துள்ள வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், அனைத்து தமிழ் தேசிய கட்சிகளும் ஒரு குடையின் கீழ் பயணிக்கவேண்டும் எனவும் தெரிவித்தார்.
தற்போது வடகிழக்கில் தமிழ் தேசியத்தினை ஆதரிக்கும் எட்டு கட்சிகள் ஒன்றிணைந்துள்ள நிலையில் அவர்கள் அனைவரையும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கீழ் இணைப்பதா அல்லது வேறு ஒரு குடையின் கீழ் இணைவதா என்பது குறித்து சிந்தித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரமின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், மட்டக்களப்பு மாநகரசபையின் வரவு செலவு திட்டத்தில் பிரச்சினை இருப்பதன் காரணமாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள் பேசி ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்திருக்கின்றோம்.மாநகரசபை வரவு செலவு திட்டத்தில் அனைத்து உறுப்பினர்களும் இணைந்து வாக்களிப்பார்கள் என்ற முடிவினை எட்டியுள்ளோம்.
இன்றைய அரசாங்கம் தமிழ் மக்கள் மீது மிக மோசமான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான வழிமுறைகளை கையாண்டுவருகின்றது.இந்தநிலையில் தமிழர்களின் ஒற்றுமையென்பது மிகவும் முக்கியமாக கருதப்படுகின்றது.
இன்று தமிழர்களின் பூர்வீக இடங்கள் பல்வேறு திட்டங்கள் என்ற பெயரில் அபகரிக்கும் சூழ்நிலையேற்பட்டுள்ளது. மகாவலி, தொல்பொருள், வன இலாகா போன்ற திணைக்களங்களை வைத்துக்கொண்டு கபடத்தனமாக தமிழர்களின் காணிகளை அபகரித்துக் கொண்டுவருகின்றது.
தற்போதைய ஜனாதிபதி கோத்தபாயவின் திட்டங்களை பார்க்கும்போது தமிழர்கள் பூர்விக வரலாற்றினைக்கொண்ட வடகிழக்கு பிரதேசம் அந்த மக்களை சிதைக்கின்ற நிலங்களை அபகரிக்க மிக மோசமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.பல பிரச்சினைகளை எதிர்கொள்ளும் நிலையினை இன்று காணமுடிகின்றது.
கொரோனா காலத்தில் இராணுவத்தின் பிரசன்னம், நேர்முகத்தேர்வுகளின் போது இராணுவத்தினது பிரசன்னம், அரச உயர் பதவிகளில் இராணுவ உயர் அதிகாரிகளை நியமிக்கும் நிலைமைகள், முப்படைகளையும் கொண்டு ஆளும் செயற்பாடுகளை இந்த அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.
இந்த நிலையில் தமிழர்கள் பிரிந்து நின்று கட்சி ரீதியாக செயற்படுகின்றபோது அது இன்னும் இந்த அரசாங்கத்திற்கு பிரித்தாளும் தன்மையினையே ஏற்படுத்திக்கொடுக்கும். இன்று மட்டக்களப்பில் வியாழேந்திரன், பிள்ளையான், கருணா போன்றவர்கள் மட்டக்களப்பில் தமிழ் மக்களின் வாக்குகளைப்பெற்றுக்கொண்டு தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளை நிறுத்துவதற்கான அதிகாரம் அவர்களுக்கு இல்லை. அவர்கள் பேசலாமே தவிர செயல்வடிவத்தில் எதனையும் செய்யமுடியாது. கூடுதலான வாக்குகளை தமிழ் மக்களிடம் இருந்து பெற்றவர்கள் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முடியாத நிலையே உள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மேய்ச்சல் தரை கால்நடைவளர்ப்பாளர்களின் பிரச்சினைகள் பெரும் பிரச்சினையாகவுள்ளது. அரசாங்கம் மிக மோசமான முறையில் திட்டமிட்ட குடியேற்றங்களை மேய்ச்சல் தரை பகுதிகளில் முன்னெடுத்துவருகின்றது. இதனை தடுப்பதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் உhயி தரப்பினருடன் பேசினோம். ஆனால் மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் அதற்கான சரியான தீர்மானத்தினை எடுக்கவில்லை. அரசாங்கத்துடன் இவ்வாறான சந்தர்ப்பங்களின்போது சரியான வேலைகளை செய்யவேண்டும்.
தமிழ் தேசியத்துடன் இருக்கும் கட்சிகள் உளப்பூர்வமாக மக்களின் உரிமைக்காக செயற்படும் கட்சிகளாக இருக்குமானால் ஒற்றுமையாக செயற்படவேண்டும். அரசாங்கத்துடன் இருப்பவர்களை நாங்கள் ஒன்றும் கூறமுடியாது. தமிழ் தேசியத்துடன் செயற்படும் கட்சிகள் ஒன்றுபட்டு செயற்பாடும் காலம் தற்போது உருவாகியுள்ளது.
தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டுமாகவிருந்தால் கொள்கையில் ஒன்றுபட்டுள்ள நாங்கள் தமிழ் மக்களின் பிரச்சினைக்காக ஒன்றுபடமுடியாது. அவ்வாறான ஒரு சூழல் உருவாக்கப்படவேண்டும். இன்று தமிழ் தேசியத்தினை ஆதரிக்கும் எட்டு கட்சிகள் கூடி முடிவுகளை எடுத்து நடவடிக்கைகளை எடுத்துவரும் சூழலில் வடகிழக்கில் ஒன்றிணைந்து செயற்படும் இந்த காலத்தினை தவறவிடுவோமானால் தமிழர்களின் பூர்வீம் வரலாறு, தமிழர்களின் போராட்டம், இறையாண்மை அத்தனையும் இழந்து எங்களையெல்லாம் வந்தேறு குடிகளாக மாற்றும் சிங்களத்தின் கருத்துகளுக்கு துணைபோனதாக அமையும்.
மக்களின் பிரச்சினைகளை பாராளுமன்றத்தில் பேசினால் தமிழ் தேசிய கூட்டமைப்பினை தடைசெய்யவேண்டும் என்று கூறுகின்ற அமைச்சர்களையே இன்று இந்த பாராளுமன்றம் கொண்டுள்ளது. அரசாங்கத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் மக்கள் தொடர்பாக மிக மோசமான சிந்தனைகளை கொண்டுள்ளார்கள் என்பதை கடந்த பாராளுமன்ற அமர்வுகளில் உணரமுடிந்தது.
மூன்று நேரம் உணவு கொடுத்தால் தமிழ் மக்களுக்கு போதும் என்று முக்கியமான அமைச்சர் ஒருவர் கூறியிருந்தார்.தமது உரிமைக்காக போராடிய இனம்,தமது உரிமைக்காக தமது உயிர்களை அர்ப்பணித்த இனம் தமிழினம். ஆனால் அமைச்சர் பிரசன்னா ரணதுங்க மிக சாதாரணமாக தமிழ் மக்களுக்கு மூன்று நேர உணவு கொடுத்தால்போதும் என்று கூறுகின்றார். மூன்று நேர சாப்பாடு பிச்சையெடுப்பவனும் சாப்பிடுவான்.
இந்த அரசாங்கம் கடந்த காலத்தில் தமிழர்களை படுகொலைசெய்து இன்று ஐநா மனித உரிமைகள் சபை உட்பட சர்வதேச நாடுகளினால் குற்றஞ்சாட்டப்படும் அரசாங்கமாகவுள்ளது. இன்று பலர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர். பீல்ட்மார்சலாக இருக்கின்ற சரத்பொன்சேகா உட்பட பலர் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள். அவரும் இன்று கூறுகின்றார் இந்த புயல் மாவீரர் தினமன்று வந்திருக்கவேண்டும் என்று. இவருக்கு வாக்களித்ததற்கு இன்று தமிழ் மக்கள் வெட்கப்படுகின்றார்கள். இவ்வாறான சிந்தனையுடன்தான் இன்று பாராளுமன்றம் இருக்கின்றது.
நாங்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினைக்கொண்டுள்ளோம். நாங்கள் என்ன செய்தாலும் யாருக்கும் அச்சப்படத்தேவையில்லையென கூறுகின்றார்கள். நிச்சயமாக இவர்கள் சர்வதேசத்திடம் பகைத்துக்கொண்டால் தன்னிறைவுகொண்ட நாடாக மாறாது. இவர்களினால் சர்வதேசத்தினை பகைத்துக்கொண்டு ஒருபோதும் செயற்படமுடியாது.
சர்வதேசத்தினைப் பொறுத்தவரையில் இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகள் தமிழர்களின் பிரச்சினைகளில் முனைப்புக்காட்டிவருகின்றது. இந்த நிலையில் இந்த அரசாங்கம் தமிழ் மக்கள் மீது மூர்க்கத்தனமாக பல வழிகளிலும் தமிழ் மக்களின் இறையாண்மையினையும் பரவலையும் தடுக்கின்ற வகையில் செயற்படுகின்றது.
நாங்கள் இந்தவேளையில் ஒற்றுமையாக செயற்படமுன்வரவேண்டும். அரசியலமைப்பு புதிதாக எழுதப்படப்போவதாக சொல்கின்றார்கள். நாங்கள் இந்தவேளையில் தனித்தனியாக செயற்படுவதை விட இனப்பிரச்சினை சார்ந்த விடயங்களையும் தமிழ் மக்களின் சகல விடயங்களையும் உள்ளடக்கியதான ஒரு தீர்வு திட்டத்தினை அனைவரும் இணைந்து வழங்கவேண்டும். அதற்கு நாங்களும் தயாராகயிருக்கின்றோம். இந்த நிலையில் தமிழ் தேசியம் பேசும் கட்சிகள் தங்களது சுய விறுப்பு வெறுப்புகளுக்கு அப்பால் தமிழ் மக்களின் பிரச்சினைக்காக செயற்படுவதாக இருந்தால் அனைவரும் இணைந்து ஒற்றுமையாக செயற்படவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
தமிழ் தேசிய கூட்டமைப்பில் தமிழ் மக்களின் உரிமைசார்ந்து செயற்படும் கட்சிகள் எந்த கட்சியாக இருந்தாலும் தமிழ் மக்களுக்காக சிந்திப்பதாக சொல்லிக்கொண்டு கட்சி பதிவு விடயத்திலும் கட்சி சீரமைப்பு விடயத்திலும் தட்டிக்கழிக்கின்ற செயற்பாடுகள் தொடருமானால் அது மக்களின் நலன் என்று பார்க்கமுடியாது. இதனை எல்லாரும் உணர்ந்துகொள்ள வேண்டும்.
தமிழ் மக்களின் ஒற்றுமைக்காக பயணிக்கும் கட்சிகளுடன் தொடர்ந்து பயணிப்பதே தமிழ் மக்களுக்கு சாதகமான விடயமாகஇருக்கும். மற்றவர்களை ஒற்றுமையாக்கிகொண்டுவந்து அதில் தங்களின் தனித்துவத்தினை காட்டமுற்பட்டால் அதில் எந்தவெற்றியும் பெறமுடியாது.
அனைத்து தமிழ் தேசிய கட்சிகளையும் ஒருங்கிணைப்பது கட்டாயமாகும். ஏற்கனவே எட்டு கட்சிகள் ஒன்றாக இணைந்துகொண்டுள்ளும் சூழ்நிலையுள்ளது. அதனை நாங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் உள்ளீர்க்கலாமா அல்லது வேறு ஒரு குடையின் கீழ் செயற்படமுடியுமா என்பது தொடர்பில் சிந்தித்துவருகின்றோம். எது எவ்வாறு என்றாலும் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைவது காலத்தின் கட்டாயம்.இதனை அனைவரும் உணர்ந்துசெயற்பட வேண்டும்.
.









