Tag: சுற்றுலா பயணிகளி
Posted in இலங்கை செய்திகள்
சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு
Author: நிருபர் காவலன் Published Date: 28/12/2022
சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு
டிசம்பர் 26 ஆம் திகதி வரை சுமார் 701,000 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இந்த வருட இறுதிக்குள், 2022 ஆம் ஆண்டில் சுமார் 720,000 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
2021 இல் 194,495 சுற்றுலாப் பயணிகளே இலங்கைக்கு வந்திருந்தனர்.
இதுவரை வெளியாகியுள்ள தரவுகளின்படி,
இம்மாதம் 26 ஆம் திகதி வரையில் 73,314 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
No posts found.







