Tag: சுகாதார அமைச்சின்
சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்க மீண்டும் நீதிமன்றில்
சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்க மீண்டும் நீதிமன்றில்
சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்க தற்போது மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் இறக்குமதி சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க கடந்த 4 ஆம் திகதி நீதிமன்றில் விசேட வாக்குமூலம் ஒன்றை வழங்கவிருந்த நிலையில் அந்த நடவடிக்கை இன்றைய தினம் வரை பிற்போடப்பட்டிருந்து.
இந்நிலையில் குறித்த வாக்குமூலத்தை வழங்குவதற்காக தற்போது அவர் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
சுகாதார அமைச்சின் மேலதிகச் செயலாளரை பாராட்டி கௌரவிப்பு
சுகாதார அமைச்சின் மேலதிகச் செயலாளரை பாராட்டி கௌரவிப்பு
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் மேலதிகச் செயலாளராக கடமையாற்றிய வி.திவாகர சர்மா தனது அரச சேவையிலிருந்து இன்றைய
தினம் (31) ஓய்வுபெறவுள்ளதையடுத்து அவரின் சேவைகளை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் (திருமதி) ஜே.ஜே.முரளிதரன் தலைமையில் இடம்பெற்றது.
அமைச்சின் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்ற இந்த கௌரவிப்பு
நிகழ்வில் அமைச்சின் கணக்காளர் எஸ்.சட்குணேஸ்வரன்,
திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், நிருவாக உத்தியோகத்தர்
எஸ்.ஸ்ரீவாணி, பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்
(திருமதி) எஸ்.விஜயகுமார் மற்றும் அமைச்சின் உத்தியோகத்தர்கள்,
ஊழியர்கள் கலந்துகொண்டு அவரின் சேவைகளைப் பாராட்டி பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னங்களையும் வழங்கி கௌரவித்தனர்.
அபு அலா –








