Posted in இலங்கை செய்திகள்

கிராமிய வைத்தியசாலை மூடப்பட்டது; வைத்தியர் உள்ளிட்ட குழுவினருக்கு கொரனோ

கிராமிய வைத்தியசாலை மூடப்பட்டது; வைத்தியர் உள்ளிட்ட குழுவினருக்கு கொரனோ

கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிராமிய வைத்தியசாலையின் வைத்தியர், தாதியர்கள், பணியாளர்கள்

உள்ளடங்களாக 16 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று, பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

மேற்படி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நோயாளர் ஒருவருக்கு, கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டதையடுத்தே, வைத்தியசாலையை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வைத்தியசாலையை அண்மித்து அமைந்துள்ள மருந்தகங்கள் சிலவும் மூடப்பட்டுள்ளதுடன், மருந்தகங்களில்

பணியாற்றியவர்களையும் தனிமைப்படுத்தியுள்ளதாக சுகாதார பரிசோதகர்கள் மேலும் தெரிவித்தனர்.

குறித்த தொற்றாளர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளதுடன், பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்தியுள்ளார்

என்றும் எனவே அவர் பயணித்த பஸ் மற்றும் பயணிகளின் விவரங்களைப் பெற்றுக்கொள்வதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்