Tag: ஏழு மாடி கட்டடத்தில் இருந்து வீழ்ந்த வாலிபன்
Posted in இலங்கை செய்திகள்
ஏழு மாடி கட்டடத்தில் இருந்து வீழ்ந்த வாலிபன்
Author: நலன் விரும்பி Published Date: 29/01/2022 Leave a Comment on ஏழு மாடி கட்டடத்தில் இருந்து வீழ்ந்த வாலிபன்
ஏழு மாடி கட்டடத்தில் இருந்து வீழ்ந்த வாலிபன்
பம்பலப்பிட்டியில் ஏழு மாடி கட்டடத்தில் இருந்து தவறி விழுந்த 15 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பம்பலப்பிட்டி, க்ரஸ்டர் பிளேஸில் அமைந்துள்ள கட்டடம் ஒன்றில் இருந்து நேற்று (28) மாலை குறித்த சிறுவன் தவறி விழுந்துள்ளார்.
இதில், படுகாயமடைந்த சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
பம்பலப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






