Posted in இலங்கை செய்திகள்

இன்றைய காலநிலை மக்களுக்கு எச்சரிக்கை – கடும் ,மழை ,புயல் வீசும்

இன்றைய காலநிலை மக்களுக்கு எச்சரிக்கை – கடும் ,மழை ,புயல் வீசும்

மழை நிலைமை:
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது

இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

தென் கடற்பரப்புகளில் ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.

காற்று :
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து

வீசக்கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

காங்கேசந்துறையிலிருந்து மன்னார்இ கொழும்புஇ காலி மற்றும் ஹம்பாந்தோட்டை

ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது

அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-65 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடல் நிலை:
காங்கேசந்துறையிலிருந்து மன்னார்இ கொழும்புஇ காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான

கடற்பரப்புகள்அவ்வப்போது கொந்தளிப்பாகக்காணப்படும்.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள்அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

பேருவளையிலிருந்து காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில்கடல் அலைகள் 2.0 – 3.0 மீற்றர் உயரம் வரை (இது

கரைக்கு வரும் அலைகளின் உயரம் அல்ல) மேலெழும்பக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் கரையோரப் பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்களும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

      Posted in இலங்கை செய்திகள்

      தமிழ் மக்களுக்கு துரோகம் செய்ய தயார் இல்லை : கூட்டமைப்புக்கு விக்னேஸ்வரன்பதிலடி

      தமிழ் மக்களுக்கு துரோகம் செய்ய தயார் இல்லை : கூட்டமைப்புக்கு விக்னேஸ்வரன்பதிலடி

      கர்ணன் வழியில் செஞ்சோற்றுக் கடன் தீர்ப்பதற்காக தமிழ் மக்களுக்கு வஞ்சகம் செய்ய தயார் இல்லை என்று தமிழ் மக்கள்

      தேசிய கூட்டணியின் தலைவரும் வட மாகாண முன்னாள் முதலமைச்சருமான நீதியரசர் விக்னேஸ்வரன் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

      தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தன்னை அரசியலுக்குள் கொண்டுவந்த நன்றியை மறந்து விக்னேஸ்வரன்

      அவரை விமர்சிப்பதாகவும் எதிராக செயற்படுவதாகவும் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் கடந்த சில நாட்களாக

      விக்னேஸ்வரனுக்கு எதிராக செய்துவரும் விமர்சனங்களுக்கு அவர் இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளார்.

      தேர்தல் பிரசாரங்கள் நாளை ஞாயிறுக்கிழமையுடன் முடிவடையும் நிலையில் தமிழ் மக்கள் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களிக்குமாறு

      பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்து வெளியிட்டுள்ள விசேட அறிக்கை ஒன்றிலேயே இதனை தெரிவித்துள்ள விக்னேஸ்வரன், “நான் எவ்வளவு காலம் இருப்பேன் என்பது தெரியாது.

      ஆனால், எனக்குப் பின்னர் முகவர்கள் நுழைந்து தமிழ் தேசியத்தின் பாதை தடம்புரளாமல் இருக்கவேண்டுமானால் வலுவான

      நிறுவனமயப்படுத்தப்பட்ட செயற்பாடுகள் அவசியம். ஆகவே, புத்திஜீவிகளே, செயற்பாட்டாளர்களே! எம்முடன்

      ஒன்றிணையுங்கள் என்று இந்த சந்தர்ப்பத்தில் வேண்டிக்கொள்கின்றேன்.” என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

      விக்னேஸ்வரன் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

      எனது அன்புக்குரிய தமிழ் மக்களே,

      வாக்களிப்பு தினத்துக்கு இன்னமும் சில நாட்களே இருக்கின்றன. கட்சிகளின் தேர்தல் பிரசாரங்கள் மற்றும் விஞ்ஞாபனங்களின் அடிப்படையில் எந்த கட்சிக்கு வாக்களிப்பது என்பது தொடர்பில்

      ஒரு தெளிவான முடிவுக்கு நீங்கள் தற்போது வந்திருப்பீர்கள். தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் கொள்கைகள், நோக்கங்கள் மற்றும் அந்த நோக்கங்களை அடைவதற்கான எமது அணுகுமுறைகள்

      மற்றும் உபாயங்கள் தொடர்பில் தெளிவான ஒரு தேர்தல் விஞ்ஞாபனத்தை நாம் உங்கள் முன்வைத்திருக்கிறோம். இதுவரை

      அதனை நீங்கள் படித்து பார்க்கவில்லையானால் தயவுசெய்து வாக்களிக்க செல்வதற்கு முன்னர் அதனைப் படித்துப்பாருங்கள்.

      எமது பூர்வீகப் பகுதிகளான இணைந்த வடக்கு கிழக்கில் சுயநிர்ணய அடிப்படையில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வு ஒன்றைப் பெறுவதே எமது நோக்கம். ஆனால், வரலாற்று

      படிப்பினைகளின் அடிப்படையிலும் சமகால உலக நடைமுறைகள், முரண்பாடுகளுக்கான தீர்வு கோட்பாடுகள், பூகோள அரசியல், சர்வதேச உறவு கோட்பாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில்

      இறுதித் தீர்வு தொடர்பில் சர்வதேச ரீதியான ஒரு சர்வஜன வாக்கெடுப்பை நாம் கோருகின்றோம்.

      அத்தகைய ஒரு சர்வஜன வாக்கெடுப்பு நடைபெறும்வரை இடைக்கால தீர்வு ஒன்று ஏற்படுத்தப்படவேண்டும் என்பது எமது கோரிக்கை ஆகும். இதனை சாத்தியம் ஆக்குவதற்கும் எமது சமூக,

      பொருளாதார, கலாசார மேம்பாட்டை அடைவதற்கும் நிலத்திலும் புலத்திலும் உள்ள புத்திஜீவிகளை உள்வாங்கி நிறுவன ரீதியான

      கட்டமைப்புக்களை உருவாக்கி செயற்படும் ஒரு அணுகுமுறையை முன்மொழிந்திருக்கின்றோம்.

      இங்கு நாம் முதலீடு செய்யவிருப்பது எமது அறிவையே. ஆயுதங்கள்தான் இன்று தமிழ் மக்களிடையே

      மௌனிக்கப்பட்டிருக்கிறதே அன்றி அது எமது அறிவாற்றல் அல்ல. முன்னரைவிட பன்மடங்கு பெருகி உலகம் பூராவும் இன்று அது சுடர்விட்டுப் பிரகாசிக்கின்றது.

      இதனை கடந்த 10 வருடங்களாக தமிழ் தேசிய கூட்டமைப்பு சரியாக இனங்கண்டு பயன்படுத்தத் தவறியதுடன் ஒரு சிலரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களுக்கு ஏற்ப செயற்பட்டமையே எமது எல்லா

      பின்னடைவுகளுக்கும் காரணம் ஆகும். இந்த அறிவை நாம் எமது நிறுவனமயப்படுத்தப்பட்ட செயற்பாடுகளில் சரியாகப்

      பயன்படுத்துவோமானால் வெற்றிகள் எம்மை நிச்சயம் தேடி வரும். இதற்கு தமிழ் அரசியல் கட்சிகளிடையே மட்டுமன்றி புலம்பெயர்

      தமிழ் அமைப்புக்கள் மத்தியிலும் ஒருங்கிணைந்த செயற்பாடு அவசியமாகும்.

      நான் எவ்வளவு காலம் இருப்பேன் என்பது தெரியாது. ஆனால், எனக்குப் பின்னர் முகவர்கள் நுழைந்து தமிழ் தேசியத்தின் பாதை தடம்புரளாமல் இருக்கவேண்டுமானால் வலுவான

      நிறுவனமயப்படுத்தப்பட்ட செயற்பாடுகள் அவசியம். ஆகவே, புத்திஜீவிகளே, செயற்பாட்டாளர்களே! எம்முடன்

      ஒன்றிணையுங்கள் என்று இந்த சந்தர்ப்பத்தில் வேண்டிக்கொள்கின்றேன்.

      இம்முறை தேர்தலில் பெரும் போட்டிகளும் பிளவுகளும் தமிழ் தேசிய கட்சிகளுக்கு இடையே இருந்தாலும், தமிழர் அரசியலை

      செப்பனிடுவதற்கும் கொள்கைகள் அணுகுமுறைகள் ஆகியவற்றின் அடிப்படையில் எமது மக்களுக்கு பொறுப்பு கூறும் வகையிலுமான

      ஒன்றுபட்ட ஒருங்கிணைந்த அரசியல் பரிமாணம் ஒன்றுக்கு இம்முறை தேர்தல் முடிவுகள் வழிவகுக்கும் என்பது எனது ஆழமான நம்பிக்கை.

      தேர்தலுக்கு முன்னர் ஒத்த கொள்கை உடைய எல்லோரையும் ஒன்றிணைக்க எல்லா முயற்சிகளையும் எடுத்தேன். ஆனால் சிலர் இணைந்து செயற்பட முன்வரவில்லை. அவர்களுக்கு தமிழ்

      மக்களின் பிரச்சனைகளைவிட கட்சி நலன் முதன்மையாக இருந்தது போல் தெரிந்தது. நான் இன்றும் சொல்கிறேன்

      இத்தேர்தலின் பின் கூட பலரை இந்தக் கூட்டணியுடன் இணைத்து முன்னோக்கிச் செல்லவே விரும்புகின்றேன்.

      அதனால் தான் ஒத்த கொள்கை உடையவர்களை பலமாகத் தாக்கி எமக்குள்ளே பிளவுகளை ஆழமாக்காமல் பிரச்சாரம் செய்வதை தவிர்த்து வருகின்றேன். ஆனால், பரந்த ஒரு கூட்டணி அமைப்பது

      தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தொடர்பில் பொதுமக்களுக்கு தவறான கருத்துக்கள் கூறப்பட்டுவருவதை நான் அறிவேன். இதேவேளை, தேர்தல் பிரசாரங்கள் அனைத்தும்

      ஞாயிறுக்கிழமையுடன் நிறைவடையும் நிலையில் எனக்கு எதிராக சில அவதூறுகளை வெளியிடும்வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முடிவுகளை எடுக்கும் தலைவர் ஒருவர்

      யாழ்ப்பாணத்தில் வெளியாகும் சில பத்திரிகைகளின் அட்டை பக்கங்களை விலைகொடுத்து வாங்கி இருப்பதாக அறிகின்றேன்.

      தனது அவதூறுகளுக்கு நான் பதில் வழங்குவதற்கு சந்தர்ப்பம் வழங்காமல் இருக்கும்வகையில் மிகவும் தந்திரமான நகர்வு என்று தான் கருதும் செயல் ஒன்றை அவர் செய்திருப்பதாக நான்

      அறிகின்றேன். தான் மட்டும் தான் புத்திசாலி என்று நினைத்துக்கொண்டிருக்கும் இந்த நபர் எமது மக்கள் எவ்வளவு புத்திசாலிகள் என்பதையும் தனது சுத்துமாத்துக்கள் எமது

      மக்களிடம் இனியும் பலிக்காது என்பதையும் இன்னமும் உணரவில்லை போல் தெரிகின்றது. இதே நபர் சில தினங்களுக்கு முன்னர் என்னை அரசியலுக்கு கொண்டுவந்த சம்பந்தனை நான்

      நன்றி உணர்வு எதுவும் இன்றி அவருக்கு எதிராக செயற்படுவதாகவும் விமர்சனம் செய்வதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

      நான் ஒன்றை அவருக்கு கூறி வைக்க விரும்புகிறேன். அதாவது, அரசாங்கத்திடம் பெற்றுக்கொண்ட சலுகைகள் பணத்துக்காக அவர் வேண்டுமானால் சிங்களக் கட்சிகளுக்கு நன்றியுணர்வுடன்

      இருக்கட்டும். ஆனால், அந்த நன்றி உணர்வை என்னிடம் அவர் எதிர்பார்க்கக் கூடாது. நான் எனது மக்களுக்கே நன்றிக்கடன்

      பட்டுள்ளேன். கர்ணன் வழியில் செஞ்சோற்றுக் கடன் தீர்ப்பதற்காக தமிழ் மக்களுக்கு வஞ்சகம் செய்ய நான் தயார் இல்லை என்பதை அவர் புரிந்துகொள்ளவேண்டும்.

      ஆகவே எனதருமை மக்களே, நாம் ஒருபோதும் தமிழ் மக்களின் உரிமைகள், நல்வாழ்வு பாதுகாப்பு ஆகியவற்றுக்கான எமது

      பற்றுறுதியில் இருந்து தளரமாட்டோம். ´மீனுக்கு´ புள்ளடி இட்டு நல்லதொரு மாற்றத்தை தமிழர் வாழ்வில் ஏற்படுத்தும்

      ஆயுதங்களாக உங்கள் வாக்குகள் மாறட்டும்! எமது தமிழ் மக்களின் அரசியல் சமூக, பொருளாதார மாற்றுக்கும் கலாசார அபிலாஷகளை வென்றெடுப்பதற்கும் வலுவூட்டுவதாக அவை அமையட்டும்! இனப்படுகொலைக்கு நீதியை பெற்றுத் தருவதாக

      அவை அமையட்டும்! உங்களை ஏமாற்றியவர்களுக்கு பாடம் புகட்டுவதாக அவை அமையட்டும்! நிதி நிறுவனங்களை உருவாக்கி மக்களின் பணத்தைக் கொள்ளை அடித்தவர்களை நிராகரிப்பதாக

      அமையட்டும்! தமது பிள்ளைகளின் பிறந்த நாட்களுக்கு ஜனாதிபதி, பிரதமரை அழைத்து விருந்துகொடுத்தவர்களை விரட்டுவதாக

      அமையட்டும்! அரசாங்கத்துக்கு முண்டுகொடுத்து சலுகைகளை அனுபவித்தவர்களுக்கு தண்டனை வழங்குவதாக அவை அமையட்டும்!

      இதே போலத் தான் பெரும்பான்மையினக் கட்சிகளில் இருந்து இங்கு வந்து போட்டியிடும் வேட்பாளர்களை விரட்டி அடியுங்கள்.

      ஆகவே, மக்களே வீட்டைவிட்டு வெளியே வாருங்கள்! மீனுக்கு வாக்களியுங்கள்!

          Posted in இலங்கை செய்திகள்

          14 பெண்களை துரத்தி குற்றிய குளவிகள் -பேர் மருத்துவமனையில் சிகிச்சை

          14 பெண்களை துரத்தி குற்றிய குளவிகள் -பேர் மருத்துவமனையில் சிகிச்சை

          இலங்கை டிக்கோயா தோட்ட பகுதியில் தொழில் ஈடுபட்டு கொண்டிருந்த

          அப்பாவி கூலி தொழிலாளிகளை இலக்கு வைத்து குளவிகள் நடத்திய

          திடீர் விரட்டி குற்றிய தாக்குதலில் பதின் நான்கு அப்பாவி பெண்கள் பாதிக்க பட்டுளள்னர்

          இவ்வாறு பாத்திக்க பட்டவர்கள் டிக்கோயா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

              Posted in இலங்கை செய்திகள்

              யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதியில் கடும் புயல் – மக்களுக்கு எச்சரிக்கை

              யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதியில் கடும் புயல் – மக்களுக்கு எச்சரிக்கை

              தற்போது நெடுங்கும் பலமான கற்று வீசி வருகிறது இது 60 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசி வருகிறது


              இது காங்கேசன் துறை ,பொதுவில் ,கொழும்பு ,காலி ,கம்பந்தோட்டை பகுதிகளை இலக்கு வைத்து நகர்கிறது

              இவ்வேளை மக்களை மிக விழிப்பாக இருக்கும் படி வானொலி அவதானிப்பு மையம் அவசர கோரிக்கை விடுத்துள்ளது


              கடற்கரை பகுதியில் உள்ள மக்கள் மிகவும் எச்சரிக்கியாக இருக்கும் படி வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது

                  Posted in இலங்கை செய்திகள்

                  எமது ஆட்சியில் இனவாதத்திற்கு இடமில்லை சஜித் – கட்சியை விட்டு ஓடியவர்கள் மீது நடவடிக்கை ரணில்

                  எமது ஆட்சியில் இனவாதத்திற்கு இடமில்லை சஜித் – கட்சியை விட்டுஓடியவர்கள் மீது நடவடிக்கை ரணில்

                  இலங்கையில் ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து விலகி ஒப்பிடபியவர்கள் மெது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள படும் என கடைசி தலைவர் ரணில் விக்கிரமசிங்கா தெரிவித்துள்ளார்

                  அதேவேளை தமது அராசாங்கத்தின் கீழ் எவ்வித இனவாதங்கள் செயல்பாடாது

                  எனவும் ,தூய்மையான ஆட்சியை தாம் தருவோம் என சஜித் பிரேமதாசா முழக்க மிட்டுள்ளார்

                  தேர்தல் பார்ப்புரைகள் முடிவடையும் வேளையில் பிரதான காட்சிகள் மக்கள் மூளையை கழுவும் முறையில் வாக்குறுதிகளை அள்ளி எறிந்து வருகின்றனர்

                      Posted in இலங்கை செய்திகள்

                      அச்சுறுத்தல்கள் முறியடிக்க – சட்டத்தை கடுமையாக அமுல்படும் -இராணுவ தலைமையகம்

                      அச்சுறுத்தல்கள் முறியடிக்க – சட்டத்தை கடுமையாக அமுல்படும் -இராணுவ தலைமையகம்

                      இயற்கை அனர்த்தங்களை கட்டுப்படுத்துவது ஒரு கடினமான காரியம் என்றபோதிலும் சட்டத்தை கடுமையாக

                      அமுல்படுத்துவதன் மூலம் மனிதனால் உருவாக்கப்படும் அச்சுறுத்தல்களை கட்டுப்படுத்த அரசாங்கம் தன்னாலான

                      அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

                      ‘சட்ட அமலாக்க முறைமையை ஒழுங்குபடுத்தியதன் மூலம், அண்மைக்காலங்களில் சட்டவிரோத நடவடிக்கைகளை முகாமை செய்ய முடிந்தது’ என நிலையான அபிவிருத்தி இலக்குகளை

                      அடைவதில் பாதுகாப்பு அமைச்சினது அதிகாரிகளின் வகிபாகம் தொடர்பாக இடம்பெற்ற கலந்துரையாடலின்போது அவர் இதனை தெரிவித்தார்.

                      ‘ஒருங்கிணைத்தல் அல்லது பிரதான பொதுச்சேவை விநியோக மூலோபாயத்தினூடாக நிலையான அபிவிருத்தி இலக்குகளை

                      மேம்படுத்தல்’ தொடர்பாக பாதுகாப்பு அமைச்சில் பணிபுரியும் அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தும் செயலமர்வு பாதுகாப்பு அமைச்சில் இன்று நடைபெற்றது.

                      நிலையான அபிவிருத்தி இலக்குகள் என்பது, ஒவ்வொரு பெண் மற்றும் பெண் குழந்தைகள் உட்பட நாட்டின் அனைத்து

                      பிரஜைகளினதும் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையிலும் வன்முறையற்ற சூழலில் ஒவ்வொரு குழந்தையும் வளர்வதனை உறுதி செய்யும் வகையிலும் சட்டத்தின் ஆட்சி இடம்பெறும்

                      நாட்டினை குறிக்கும். இவைகளே, தேசிய பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கும் அரசாங்கத்தின் கொள்கை

                      கட்டமைப்பின் கீழ், பாதுகாப்பு அமைச்சின் செயற்பட்டியலில் உள்ளடக்கப்ட்ட வேண்டிய மிக முக்கிய அம்சங்களாகும், ‘என அவர் தெரிவித்தார்.

                      காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் மாசுறுதல் மற்றும் வளங்கள் அழிவடைதல், தொற்று நோய்கள், இயற்கை பேரழிவுகள், உணவு பற்றாக்குறை போன்ற இயற்கை அச்சுறுத்தல்கள், சட்டவிரோத

                      குடிபெயர்வு, துப்பாக்கி பாவனை, ஆட் கடத்தல், போதைப்பொருள் கடத்தல் மற்றும் நடுத்தர மற்றும் உயர் தீவிரத்தன்மையான முறன்பாடுகள் போன்ற மனிதனால் உருவாக்கப்படும்

                      அச்சுறுத்தல்கள் என்பன அரசாங்கத்தினால் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயங்களாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.

                      ‘நாங்கள் அரச அதிகாரிகள் என்ற வகையில் நமக்கு கிடைக்கக்கூடிய அனைத்து வழிகளிலும் நமது முழுமையான ஒத்துழைப்பை தேசிய கொள்கை திட்டத்திற்கு வழங்க

                      கடமைப்பட்டுள்ளோம். எமது அதிகார வரம்புக்குள் காணப்படும் வழிகளை அடையாளம் காண, தற்காலத்திலும் எதிர்காலத்திலும் இவ்வையகம் மற்றும் அதில் வாழும் மக்களின் அமைதியான

                      மற்றும் செழிப்பான வாழ்க்கைக்கான முன்மொழிவு திட்டத்தை அளிக்கக்கூடிய நிலையான அபிவிருத்தி இலக்குகள் தொடர்பாக

                      நாம் ஒரு நல்ல புரிதலைக் கொண்டிருக்க வேண்டும்’ என அவர் விளக்கமளித்தார்.

                      ஒரு தேசம் என்ற வகையில், இலங்கையானது, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதோடுஇ சமூக நீதியை ஊக்குவிப்பதிலும் பொருளாதார

                      செழிப்பை வளர்ப்பதிலும் உலகளாவிய முயற்சிகளுக்கு அதன் உறுதிப்பாட்டை நிரூபித்துள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்தார்.

                      நிலையான அபிவிருத்திக்கான 2030 நிகழ்ச்சிநிரல், 17 நிலையான அபிவிருத்திக்கான இலக்குகளை கொண்டுள்ளதுடன் 2016 ஜனவரி 1

                      முதல் அமுலுக்கு வரும் வகையில் 15 வருட கால அதனோடு இணைந்த 169 இலக்குகள் எட்டப்பட உள்ளன.

                      இது முழு நாட்டிலும் இ அனைத்து பங்குதாரர்களாலும் இணைந்து செயற்படக்கூடிய ஒன்றிணைந்த கூட்டுப் பொறுப்பு வாய்ந்த திட்டத்தை வழங்குகிறது.

                      தேசிய கொள்கை கட்டமைப்பின் 10 முக்கிய கொள்கைகள் 2030 ஆம் ஆண்டிற்கான நிகழ்ச்சி நிரலில் ‘செழிப்பு மற்றும் பிரகாசமான

                      எதிர்காலம்’ திட்டத்தினூடாக தேசத்தின் அமைதியை உள்ளடக்கிய நாட்டை உறுதிப்படுத்துகின்றன.

                      அமைதிஇ நீதி மற்றும் சமமான அபிவிருத்தி உள்ளிட்ட உலகளாவிய நிகழ்ச்சி நிரல் ஊடாக இலங்கையின் அபிவிருத்தி கொள்கை

                      ஏற்படுத்துவது பொருத்தப்பாடாக அமையும் என மேஜர் ஜெனரல் குணரத்ன தெரிவித்தார்.

                          Posted in இலங்கை செய்திகள்

                          தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் நாளை நள்ளிரவுடன் நிறைவு.

                          தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் நாளை நள்ளிரவுடன் நிறைவு.

                          தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் நாளை ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுடன் நிறைவடைகிறது.

                          நாளை ஞாயிற்றுக்கிழமை இரவு 10.00 மணியின் பின்னர் பிரசாரத்திற்கான பொறிமுறைகளைப் பயன்படுத்துவது தடை

                          செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய அறிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அமைதி காலம் ஆரம்பமாகிறது.

                          எனவே அமைதி காலத்தில் சட்டத்திற்கு முரணாக செயற்படுபவர்களுக்கு எதிராக துரிதமாக நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

                          நாளை நள்ளிரவு 12 மணிக்கு பின்னர் பிரசார கூட்டங்களை நடத்துதல், கிராமங்களிலும் வீடுகளிலும் கூட்டங்களை நடத்துதல்,

                          வீடு வீடாகச் சென்று வாக்குகளை கேட்டல், துண்டு பிரசுரங்களை விநியோகித்தல் தடை செய்யப்பட்டுள்ளது.

                          அத்துடன், அறிவித்தல் கொடுக்கப்பட்ட கிளை அலுவலகங்களில் பிரசார பலகைகளை காட்சிப்படுத்தியிருத்தல் மற்றும்

                          சுவரொட்டிகளையும் அறிவித்தல்களையும் பதாதைகளையும் காட்சிப்படுத்தல் என்பவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

                          ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவின் பின்னர் ஆரம்பமாகும் அமைதி காலப்பகுதியினுள் அனைத்து அரசியல் கட்சிகள், குழுக்கள்,

                          வேட்பாளர்கள் இவற்றை தவிர்த்து சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலொன்றுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்

                          எனவும் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.

                              Posted in இலங்கை செய்திகள்

                              சீனா ,இலங்கை உறவு மிக நெருக்கம் – பாதுகாப்பு மந்திரி

                              சீனா ,இலங்கை உறவு மிக நெருக்கம் – பாதுகாப்பு மந்திரி

                              அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம், கல்வி மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகளில் பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையில்

                              கட்டியெழுப்பப்பட்ட சீனாவிற்கும் இலங்கைக்குமிடையிலான வரலாற்று ரீதியான உறவு, மேலும் வலுவடைந்து வருவதாக

                              பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரட்ன தெரிவித்துள்ளார்.

                              கொழும்பு, சங்கரில்லா ஹோட்டலில் நேற்றைய முன்தினம் இடம்பெற்ற சீன தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக முன்னைநாள் அதிகாரிகள் சங்கத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம

                              அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய பாதுகாப்புச் செயலாளர், மாபெரும் இந்த சர்வதேச நிகழ்வானது இலங்கையுடன் சீனா கொண்டுள்ள உறவை நிச்சயபடுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

                              மேலும் அவர் “கடினமான வேளையில் கை கொடுப்பவனே உண்மையான நண்பனாகும்” எனவும் தெரிவித்தார்.

                              முன்னைனாள் அதிகாரிகள் சங்கத்தின் எதிர்கால செயற்பாடுகள் வெற்றிகரமாக அமைய தனது வாழ்த்துக்களை தெரிவித்த

                              பாதுகாப்புச் செயலாளர், பௌத்த மதம், வர்த்தகம், உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் உலகளாவிய இணைப்பு உட்பட பல

                              வழிவகைகளில் சீனா இலங்கையின் வரலாற்று ரீதியான நட்பு அணியாக தடம் பதித்துள்ளதாக தெரிவித்தார்.

                              “அண்மைக்காலங்களில் உள்நாட்டிலும் உலகளாவிய மட்டத்திலும் நாடு எதிர் நோக்கிய கடினமான வேளையில் சீனாவினால்

                              வழங்கப்பட்ட ஒத்துழைப்பினை இலங்கையர்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்” என அவர் உறுதி அளித்தார்.

                              நாட்டில் தற்போது செயலிழக்கச் செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது எதிரிகளுக்கு

                              எதிராக தலை சிறந்த திட்டங்கள் மற்றும் உத்திகளை கையாள போரியல் நிபுணத்துவம் வழங்கி பயிற்சி அளித்தமைக்காக சீனா

                              அரசாங்கத்திற்கும் சீன தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கும் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டார்.

                              சீன தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் முன்னைனாள் அதிகாரிகள் சங்கத்தின் இந்த அங்குரார்ப்பண நிகழ்வானது, இரு

                              நாடுகளுக்கும் இடையில் காணப்படும் இறுக்கமான இணைப்பினை எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்க வழிவகுக்கும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

                              இந்த சங்கத்தின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட இலங்கை சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஜிவி. ரவிப்பிரியவினால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது.

                              சீன தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் முன்னைனாள் அதிகாரிகள் சங்கத்தின் அங்குரார்ப்பண விழாவில் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியும் இராணுவத் தளபதியுமான

                              லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா, இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கல டயஸ், முன்னாள் இராணுவ மற்றும் கடற்படை தளபதிகள், சீனத் தூதரகத்தின் பாதுகாப்பு

                              ஆலோசகர் சிரேஷ்ட கேர்ணல் வான் டொங், தூதரக அதிகாரிகள், ஓய்வுபெற்ற மற்றும் சேவையில் உள்ள சிரேஷ்ட முப்படை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  கைவிடப்பட்ட விவசாயத்தை கட்டி எழுப்புவேன் – கோட்டா

                                  கைவிடப்பட்ட விவசாயத்தை கட்டி எழுப்புவேன் – கோட்டா

                                  இளைஞர் தலைமுறை விவசாயத்தை கைவிட்டு வேறு தொழில்களுக்கு செல்வதை நிறுத்தி, விவசாயத்துறைக்கு

                                  அவர்களை ஈர்க்கும் வகையில் விவசாயப் பொருளாதாரம் ஒன்று மொனராகலை மாவட்டத்தில் கட்டியெழுப்பப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

                                  சிறிய நிலப்பரப்பில் குறைந்த உற்பத்திச் செலவுடன் உயர் தொழிநுட்ப முறையை பயன்படுத்தி அதிக தரம் வாய்ந்த,

                                  கூடுதலான அறுவடையைப் பெறக்கூடிய விவசாயப் பொருளாதாரம் ஒன்றை கட்டியெழுப்புவது தனது கொள்கையாகும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

                                  பொதுஜன பெரமுனவில் பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் வெற்றியை உறுதிசெய்யும் வகையில் இன்று (31)

                                  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மொனராகலை மாவட்டத்தில் சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்த வேளையில் இதனை தெரிவித்தார்.

                                  ஜனாதிபதியின் மொனராகலை மாவட்ட சுற்றுப் பயணம் தனமல்வில தேசிய பாடசாலை விளையாட்டரங்கிலிருந்து ஆரம்பமானது.

                                  பாடசாலைக்கு வருகை தந்த ஜனாதிபதியை, அபேட்சகர் சஷிந்திர ராஜபக்ஷ, பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். பாடசாலை வரலாற்றில்

                                  முதன்முறையாக அரச தலைவர் ஒருவர் வருகை தந்ததைப் பாராட்டி மாணவி சுலோச்சனா சந்தீபனி சிறு உரையொன்றை ஆற்றினார்.

                                  கட்டிடங்கள் மற்றும் குடிநீர் உள்ளிட்ட குறைபாடுகளை நிறைவேற்றித் தருமாறு மாணவர்கள் முன்வைத்த கோரிக்கையை நிறைவேற்றுமாறு ஜனாதிபதி, இராணுவத் தளபதியிடம் தெரிவித்தார்.

                                  அபேட்சகர் ஜகத் புஷ்பகுமார தனமல்வில பொது விளையாட்டரங்கில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் பங்குபற்றிய ஜனாதிபதி, மக்களின் பிரச்சினைகளை

                                  கேட்டறிந்தார். பாரிய பிரச்சினையாக உள்ள யானைகளின் அச்சுறுத்தல், காணி உறுதிகள் கிடைக்காமை, பொல்கட்டுவெவ

                                  கால்வாயை புனரமைக்க வேண்டியதன் தேவை குறித்து மக்கள் ஜனாதிபதியிடம் தெரிவித்தனர்.

                                  பசு மாடுகளை கடத்திச் செல்லும் பிரச்சினை பற்றியும் ஜனாதிபதியிடம் தெரிவிக்கப்பட்டது. அபேட்சகர் கயாஷான்

                                  நவனந்த வெல்லவாய எத்திலிவெவ தெலுள்ள போதிராஜராம விகாரைக்கு அருகில் உள்ள விளையாட்டரங்கில் ஏற்பாடு

                                  செய்திருந்த மக்கள் சந்திப்புக்கு வருகை தந்த ஜனாதிபதியை மக்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

                                  செவனகல சீனித் தொழிற்சாலையின் களஞ்சிய வசதிகள் போதுமானதாக இல்லாமை, காணி உறுதிகள் கிடைக்காமை,

                                  கிரிந்தி ஓயவிற்கு அண்மித்த காணிகளின் பிரச்சினை எத்திலிவெவ மூன்றாம் நிலை பாடசாலையின் குறைபாடுகள், பிரதேச

                                  மின்வழங்கல் பிரச்சினைகள் ஜனாதிபதியிடம் தெரிவிக்கப்பட்டது. மின்சார வழங்கல் சம்பந்தமான பிரச்சினையை உடனடியாக தீர்ப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்தார்.

                                      Posted in இலங்கை செய்திகள்

                                      பிரச்சார கூட்டத்திற்கு துப்பாக்கி எடுத்து வந்தவர் கைது

                                      பிரச்சார கூட்டத்திற்கு துப்பாக்கி எடுத்து வந்தவர் கைது

                                      றிப்பிட்டர் ரக துப்பாக்கியை மறைத்து வைத்திருந்ததாக கைதான சந்தேக

                                      நபரை 3 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ள சம்மாந்துறை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

                                      அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் ஒன்றில் பிரசார நடவடிக்கை ஒன்றிற்காக வந்திருந்த

                                      தேசிய காங்கிரஸ் அணியின் வாகனம் ஒன்றில் நேற்று (30) மாலை பாய் ஒன்றின்

                                      கீழ் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் றிப்பிட்டர் ரக துப்பாக்கி ஒன்று 6 தோட்டாக்களுடன் மீட்கப்பட்டிருந்தது.

                                      குறித்த துப்பாக்கியை குறித்த பிரசார கூட்டத்திற்கு பாதுகாப்பு வழங்கிய பொலிஸார் மீட்டதுடன் குறித்த துப்பாக்கியை எடுத்து

                                      வந்து குறித்த கட்சிக்கு சொந்தமான வாகனமொன்றில் மறைத்து வைத்ததாக

                                      சந்தேகத்தின் பேரில் 37 வயதான இறக்காமம் பகுதியை சேர்ந்தவரை கைது செய்திருந்தனர்.

                                      இவ்வாறு கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி

                                      வரை தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கபட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

                                          Posted in இலங்கை செய்திகள்

                                          தேர்தலுக்கு பின்னர் இலங்கையில் நடக்க போகும் பயங்கரம் – மக்களுக்கு எச்சரிக்கை -நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

                                          தேர்தலுக்கு பின்னர் இலங்கையில் நடக்க போகும் பயங்கரம் – மக்களுக்கு எச்சரிக்கை -நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

                                          இணக்கஅரசியல் என்ற பெயரில் தமிழர்களின் நலன்களைப் பலி கொடுக்காமல், சர்வதேச அரசுகளின் நிலைப்பாடுகளிடையே அரசுகளின் நலன்களையும்;, தமிழர்களின் நலன்களையும்

                                          இணைக்கும் அரசதந்திரம் கொண்டு, தமிழ்த் தேசியத்தை தமது சொல்லாலும் செயலாலும் உண்மையாக வலுப்படுத்துக்கூடியர்களை சிறிலங்காவின் நாடாளுமன்றத்

                                          தேர்தலில் தமிழ்மக்கள் தமது பிரதிநிதிகளாக தேர்வு செய்யவேண்டும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

                                          சிறிலங்காவின் நாடாளுமன்றத்தில் தமிழர் தேசிய பிரச்சனைக்கு தீர்வினைக் காண முடியாது என்ற போதும், அத் தளத்தினை தமிழர் தேசத்தின் சுதந்திர வேட்கையினை வெளிப்படுத்தும் ஒரு மேடையாக, களமாக, கருவியாகக் கையாளக் கூடிய வாய்ப்பை தமிழர் தேசம் முடிந்த அளவு பயன்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், இத்தேர்தலில் மக்கள் தமது பிரதிநிதிகளைத் தேர்தவு செய்யும் முன் கீழ் வரும் விடயங்களில் அவர்களுக்கு உள்ள உறுதிப்பாட்டை கவனத்தில் கொள்ளுமாறு கோரியுள்ளது.

                                          1 – ஈழத்தமிழர்களின் தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வு தமிழர் தேசம் என்ற அங்கீகாரத்துடன் – தாயகத்திலும் புலம்பெயர்ந்தும் வாழும் தமிழ் மக்கள் மத்தியில் நடத்தப்படும் ஒரு பொதுவாக்கெடுப்பு மூலமே காணப் படவேண்டும். இவ் விடயம் கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்ணணி, முன்னாள் நீதியரசர், வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, ஆகிய கட்சிகளது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டிருப்பது நம்பிக்கையையும், உற்சாகத்தையும் தருவதாக உள்ளது.

                                          2 – இனப்படுகொலை, மானிடத்துக்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள் புரிந்த சிறிலங்கா அரசும் அதன் அரசியல், இராணுவ தலைவர்களும் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும்.

                                          3 – நடந்தேறிய சர்வதேசக் குற்றங்கள் ‘systemic crime ‘ என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரது அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது தமிழர்களுக்கு எதிராகப் புரியப்பட்ட குற்றங்கள் எனும்போது அவை தனிநபர்களாலோ, ஒரு குறிப்பிட்ட இராணுவப் பிரிவினாலோ புரியப்பட்டவை அல்ல. முhறாக இவை சிறிலங்கா என்ற ‘அரசு’ செய்த குற்றங்களாகவே உள்ளன. எனவே சிறிலங்கா அரசை சர்வதேச நீதிமன்றத்தின் முன்னால் இனஅழிப்புக்கு எதிரான சர்வதேச சட்டத்தின் கீழ் கொண்டு செல்லத் தமிழர் பிரதிநிதிகள் பாடுபடுவேண்டும்.

                                          4 – சர்வதேச தளத்தில் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்துக்கான ஆதரவை வலுப்படுத்துவதற்கான செயற்பாடுகளில் உறுதியாக ஈடுபடவேண்டும்.

                                          1. தாயகத்தில் தமிழர் தேச நிர்;மாணத்தை உறுதியாக மேற்கொள்ளக் கூடியவர்களாகவும் இருத்தல் வேண்டும்.

                                          சர்வதேச சமூகத்தை நோக்கி எமது அரசியல் பெருவிருப்புக்களை வெளிக்காட்டுவதற்கான ஒரு கருவியாக நாடாளுமன்றத்தையும் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அந்தஸ்தையும் தமிழர் தேசம் கையாள வேண்டும் எனவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

                                          அறிக்கையின் முழுவிபரம் :

                                          சர்வதேச தளத்தில் தமிழர் அரசியலை அரசதந்திரத்துடன் மேற்கொள்வதற்கு மக்கள் சக்திகளை வலுவாக அணிதிரட்டக் கூடிய, தமிழ்த் தேசியத்தை தமது சொல்லாலும் செயலாலும் உண்மையாக வலுப்படுத்துக்கூடியர்களை மக்கள் தேர்வு செய்யவேண்டும் !

                                          எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5ம் திகதி நடைபெறவுள்ள சிறிலங்காவின் நாடாளுமன்றத் தேர்தல் குறித்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிலைப்பாட்டை இவ் ஊடக அறிக்கையினூடாக தெளிவுபடுத்துகிறோம். இவ் விடயம் குறித்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை யூலை 18ஆம் திகதியன்று சிறப்பு அமர்வாகக் கூடி விவாதித்து எடுத்த நிலைப்பாடுகள் கீழே தரப்படுகின்றன.

                                          1. சிறிலங்காவின் நாடாளுமன்றம் சட்டபூர்வமாகவோ அல்லது தார்மீகரீதியாகவோ தமிழர் தேசத்தை ஆளுகை செய்வதற்கு அருகதையோ தகுதியோ அற்றது.
                                          2. 1972ம் ஆண்டிலிருந்து நடைமுறைக்கு வந்த அரசியலமைப்பு சட்டங்கள் எவையும் தமிழர் தேசத்தின்; பங்குபற்றலுடனும் சம்மதத்துடனும் உருவாக்கப்பட்டவை அல்ல. இந்த அரசியலமைப்பு சட்டங்கள் சிங்கள தேசத்தால் தமிழர் தேசத்தின் மீது திணிக்கப்பட்டவை. தமிழர் தேசம் தனது இறைமையினை என்றும் சிங்கள அரசிடம் தாரைவார்த்துக் கொடுத்ததில்லை.
                                          3. சிறிலங்கா உண்மையில் ஒரு ஜனநாயக நாடல்ல. அது ஒரு இனநாயக நாடு. சிங்கள இனத்தின் மேலாண்மையினை தமிழ், முஸ்லீம் மக்கள் மீது நிலைநிறுத்தும் இயந்திரமாகவே சிறிலங்கா அரசு இயங்குகிறது. சிறிலங்கா அரசின் அங்கங்களான நாடாளுமன்றம், அரசாங்கம், நீதிமன்றம் போன்ற அனைத்து அலகுகளிலும் சிங்கள பௌத்த பேரினவாதம் இறுகிப் புரையோடிப் போயுள்ளது. நாடாளுமன்றத்தில் அங்கம் வகிப்பதன் ஊடாக சிறிலங்கா அரசுடன் பேரம் பேசும் சக்தி தமிழர்களுக்கு இதுவரை இருந்தது இல்லை. இனி மேல் இருக்கப் போவதும் இல்லை.
                                          4. தற்போதய சிறிலங்கா அரசின் நாடாளுமன்ற உறுப்பினர்களினது மொத்த எண்ணிக்கை 225 ஆகும். இதில் தமிழர் பிரதேசங்களுக்குரிய ஆசனங்களின் எண்ணிக்கை மொத்தம் 23. இதன்படி தமிழர்களின் பிரதிநிதித்துவம் மொத்த உறுப்பினர்கள் தொகையில் பத்தில் ஒரு வீதத்துக்கும் குறைவாகவே இருக்கும். நடைபெறவுள்ள தேர்தலில் ராஜபக்சக்களின் கட்சி நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு ஆசனங்களைப் பெறமுடியாது போனாலும் கூட மூன்றில் இரண்டு பங்கு ஆசனங்கள் சிங்கள கட்சிகளுக்குடையதாகவே இருக்கும்.
                                          5. குடியுரிமைச்சட்டம், தனிச் சிங்களச் சட்டம், பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் என தமிழர்களுக்கு எதிரான பல சட்டங்கள், தமிழர்கள் பிரதிநிதிகளாக நாடாளுமன்றத்தில் இருந்த நிலையிலேயே தான் சிங்கள ஆட்சியாளர்களால் நிறைவேற்றப்பட்டன. அந்;நேரத்தில் தமிழர்களால் இதனைத் தடுக்க முடியவில்லை. தமிழர்கள் அமைச்சர்களாகவும், இரண்டு முறை எதிர்க்கட்சித் தலைவர்களாகவும் கூட இருந்திருக்கின்றார்கள். அப்படியிருந்தும் அவர்களால் தமிழர்களின் நலன் சார்ந்து எதனையுமே செய்ய முடியவில்லை.
                                          6. சிறிலங்கா நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் அங்கம் வகிப்பதன் மூலம் தமிழர் தேசத்தின் தேசியப் பிரச்சனைக்குத் தீர்வு காண முடியாது. சிறிலங்காவின் அரசகட்டமைப்புக்குள் தமிழ் மக்களின் தேசியப்பிரச்சனைக்குத் தீர்வு காணமுடியாது என்பதனை உய்த்தறிவது என்பது ஒன்றும் கடினமான விடயமல்ல.
                                          7. ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச்செயலர் பான் கீ மூன் அவர்களால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கையில் சிறிலங்கா அரசியலில் தமிழர்களுக்கு ஒரு காத்திரமான பங்கு இல்லாமை, இலங்கையின் தேசிய இனப்பிரச்சனைக்கு முக்கியமான ஒரு காரணம் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
                                          8. இப் பின்னணியை வைத்துப் பார்க்கும் போது, தமிழர்கள் சிறிலங்காவின் நாடாளுமன்றத்; தேர்தலில் ஏன் போட்டியிட வேண்டும் என்ற வினா எழுவது இயல்பானதே. உரிமைக் கோட்பாட்டின் அடிப்படையில் இவ் வினா எழுவது நியாயம் எனினும் இரண்டு தந்திரோபாயக் காரணங்களுக்காக தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்டவர்கள் இத் தேர்தலில் போட்டியிடுவது தவிர்க்க முடியாததாக இருக்கிறது.
                                          9. முதலாவது காரணம்: சிறிலங்காவின் நாடாளுமன்றத்தில் தமிழர் தேசிய பிரச்சனைக்கு தீர்வினைக் காண முடியாது என்ற போதும், அத் தளத்தினை தமிழர் தேசத்தின் சுதந்திர வேட்கையினை வெளிப்படுத்தும் ஒரு மேடையாக, களமாக, கருவியாகக் கையாளக் கூடிய வாய்ப்பை தமிழர் தேசம் முடிந்த அளவு பயன்படுத்த வேண்டும். சர்வதேச சமூகத்தை நோக்கி எமது அரசியல் பெருவிருப்புக்களை வெளிக்காட்டுவதற்கான ஒரு கருவியாக நாடாளுமன்றத்தையும் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அந்தஸ்தையும் தமிழர் தேசம் கையாள வேண்டும்.
                                          10. இரண்டாவது காரணம்: சிறிலங்காவின் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்டுள்ளோர் போட்டியிடத் தவறின் சிறிலங்காவின் சிங்களக் கட்சிகளும், இக் கட்சிகளது அடிவருடிகளும் தமிழர் பிரதிநிதிகளாக நாடாளுமன்றம் செல்லும் நிலை உருவாகும். இந் நிலை உருவாகுவதனைத் தவிர்த்தல் தமிழ்த் தேசிய நிலைப்பாடு என்ற நோக்குநி;லையில் நன்மையானதே.
                                          11. இந்தத் தேர்தலில் தமிழர்களின் தேசிய அரசியல் பரப்பானது சாதி, மத பேதங்களுடன் பிளவுபட்டுவிடுமோ என்ற அச்சத்தினையும் சில ஆய்வாளர்கள் வெளிப்படுத்துகிறார்கள். இப் பேதங்களையெல்லாம் கடந்ததுதான் விடுதலை அரசியல் என்ற தெளிவுடன் நமது மக்கள் செயலாற்றுவார்கள் என்பது எமது நம்பிக்கை.
                                          12. 1985ல் இருந்து எமது தேசிய இனப் பிரச்சனை கொழும்பைக் கடந்து திம்புவுக்கு சென்றது. பின்னர் ஆயிரம் ஆயிரம் மாவீரர்களதும், மக்களதும் உயிர்த்தியாகத்தினாலும், அளப்பரிய அர்பணிப்புக்களாலும், வீரத்தினாலும் அது திம்புவில் இருந்து தாய்லாந்து, ஜெனீவா, நோர்வே, சுவிஸ், ஜேர்மனி என்று அனைத்துலக அரசியல் வெளியினை நோக்கி சென்றுள்ளது.
                                          13. இன்று சிறிலங்கா அரசின் திட்டமி;டப்பட்ட தமிழின அழிப்பு அனைத்துலகப் பேசுபொருளாகியுள்ள இந் நிலையில் தேர்வு செய்யப்படும் தமிழர் பிரதிநிதிகள் இந்த சர்வதேச தளத்தில் எமது தேசிய அரசியல் பெருவிருப்பினை கொள்கையாகவும், செயற்பாடாகவும் கொண்டு செல்லக்கூடியவர்களாக இருக்க வேண்டும் என்பது தெட்டத் தெளிவு.

                                          இதனால் தமிழ்த் தேசியத்தை தமது சொல்லாலும் செயலாலும் உண்மையாக வலுப்படுத்துக்கூடியர்களை இனம் கண்டு மக்கள் தமது பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகள் பின்வரும் நிலைப்பாடுகளைக் கொண்டியங்குவோராக இருத்தல் வேண்டும்.

                                          அ – ஈழத்தமிழர்களின் தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வு தமிழர் தேசம் என்ற அங்கீகாரத்துடன் – தாயகத்திலும் புலம்பெயர்ந்தும் வாழும் தமிழ் மக்கள் மத்தியில் நடத்தப்படும் ஒரு பொதுவாக்கெடுப்பு மூலமே காணப் படவேண்டும். இவ் விடயம் கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்ணணி, முன்னாள் நீதியரசர், வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, ஆகிய கட்சிகளது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டிருப்பது நம்பிக்கையையும், உற்சாகத்தையும் தருவதாக உள்ளது.

                                          ஆ – இனப்படுகொலை, மானிடத்துக்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள் புரிந்த சிறிலங்கா அரசும் அதன் அரசியல், இராணுவ தலைவர்களும் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும்.

                                          இ – நடந்தேறிய சர்வதேசக் குற்றங்கள் ‘systemic crime ‘ என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரது அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது தமிழர்களுக்கு எதிராகப் புரியப்பட்ட குற்றங்கள் எனும்போது அவை தனிநபர்களாலோ, ஒரு குறிப்பிட்ட இராணுவப் பிரிவினாலோ புரியப்பட்டவை அல்ல. முhறாக இவை சிறிலங்கா என்ற ‘அரசு’ செய்த குற்றங்களாகவே உள்ளன. எனவே சிறிலங்கா அரசை சர்வதேச நீதிமன்றத்தின் முன்னால் இனஅழிப்புக்கு எதிரான சர்வதேச சட்டத்தின் கீழ் கொண்டு செல்லத் தமிழர் பிரதிநிதிகள் பாடுபடுவேண்டும்.

                                          ஈ – சர்வதேச தளத்தில் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்துக்கான ஆதரவை வலுப்படுத்துவதற்கான செயற்பாடுகளில் உறுதியாக ஈடுபடவேண்டும்.

                                          உ. தாயகத்தில் தமிழர் தேச நிர்;மாணத்தை உறுதியாக மேற்கொள்ளக் கூடியவர்களாகவும் இருத்தல் வேண்டும்.

                                          தேர்தலுக்குப் பின்னர் உருவாகக் கூடிய நிலைமைகள்:

                                          தேர்தலுக்குப் பின்னர் சிறிலங்கா ஆட்சியாளர்கள் தமிழர்களின் தேசிய அடையாளத்தினைச் சிதைத்து, தமிழ் மக்களை ‘சிறிலங்கன்’ என்ற அடையாளத்துடன் சிங்களத்துடன் கரைக்கும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபடக் கூடிய நிலைமைகள் உள்ளன. இம் முயற்சியினை வெற்றிகரமாகச் செயற்படுத்தும் வகையில் வெளியுறவுக் கொள்கையில் தந்திரமான யதார்த்தத்தினைக் கடைப்பிடித்து பலம் மிக்க அனைத்துலக அரசுகளுடன், அவர்களின் நலன்களுடன் அனுசரித்துப் போகும் ‘சமரசமான’ நிலைப்பாட்டை எடுக்கக்கூடிய நிலைமைகளும் உள்ளன. சர்வதேச சக்திகளும் தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுப்பதனை விடத் தமது நலன்களின் அடிப்படையில் சிங்கள ஆட்சியாளர்களுடன் சமரச நிலைiயில் உறவாடுவதனையே விரும்புவார்கள்.

                                          இத்தகையதொரு நிலை உருவாகாமல் தடுப்பதில் நடைபெறப்போகும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறும் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட பிரதிநிதிகளுக்குப் பெரும் பொறுப்பு உண்டு. அரசுகளுடன் நமது உரிமைகளுக்காகச் செயற்படுவது என்பது நித்திரை கொள்பவனை எழுப்பும் வேலை அல்ல, மாறாக நித்திரை கொள்வது போல நடிப்பவனை எழுப்பும் வேலை என்ற புரிதலுடன் இவர்கள் தமது செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

                                          சிறிலங்கா அரசுடன் தமது நலன்களை அடைந்து கொள்ளும் இலக்குடன் அனைத்துலக அரசுகள் தமிழர்; தேசத்தின் நலன்களைப் பலிகொடுக்க முயலும் சந்தர்ப்பங்களில் எல்லாம் அவற்றை எதிர்த்து உறுதியாகச் செயலாற்றக் கூடியவர்கள் தமிழர் பிரதிநிதிகளாகத் தேர்வு செய்யப்படுவது அவசியம்.

                                          அனைத்துலக அரசுகளின் நிலைப்பாட்டை நாம் அறிந்தவர்கள் என்பதனை அவ் அரசுகளுக்கு உணர்த்திக் கொண்டு, அதேசமயம் இணக்க அரசியல் என்ற பெயரில் தமிழர்களின் நலன்களைப் பலி கொடுக்காமல், அரசுகளின் நிலைப்பாடுகளிடையே அரசுகளின் நலன்களையும்;, தமிழர்களின் நலன்களையும் இணைக்கக் கூடிய அரசதந்திரம் கொண்டவர்களாக இருக்க வேண்டும். செயலாற்ற வேண்டும்.

                                          தமிழீழத் தேசியத் தலைவர் கூறியவாறு எந்தவொரு அரசியல் முன்னெடுப்புக்கும் பலம் அவசியமானது. எனவே சர்வதேச தளத்தில் அரசியலை மேற்கொள்வதற்கு அரசதந்திரத்துடன் மக்கள் சக்திகளை வலுவாக அணிதிரட்டக் கூடியவர்களை மக்கள் தேர்வு செய்யவேண்டும்.

                                          தேர்தலுக்குப் பின்னர் நாம் தொடர்ந்து முன்னோக்கிச் செல்ல வேண்டிய பாரிய அரசியல் செயற்பாட்டுக்கான பொறுப்பும் தமிழர் தேசத்துக்கு உண்டு. சிறிலங்காவின் தேர்தல் அரசியல் மாயைகளுக்குள் தலையைப் புதைக்காமல், நாம் ஒரு தேசமாக நிமிர்ந்து நிற்க உதவும் தமிழ் தேசிய பேரியக்கம் ஒன்று கட்டியெழுப்பப் படவேண்டும். அதனை நோக்கிய முன்னெடுப்பைத் தமிழர் பிரதிநிதிகள் மேற்கொள்ள வேண்டும்.

                                          இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

                                          Posted in இலங்கை செய்திகள்

                                          கடற்படையின் பூஸ்ஸ, கற்பிட்டி தனிமைப்படுத்தல் மையங்களை விட்டு மேலும் 21 பேர் வெளியேறினர்

                                          கடற்படையின் பூஸ்ஸ, கற்பிட்டி தனிமைப்படுத்தல் மையங்களை விட்டு மேலும் 21 பேர் வெளியேறினர்

                                          பூஸ்ஸ கடற்படை முகாமில் மற்றும் கற்பிட்டி பகுதியில் உள்ள கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தங்களது

                                          தனிமைப்படுத்தலை முடித்த மேலும் 21 நபர்கள் 2020 ஜூலை 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் மையங்களை விட்டு வெளியேறினர்.

                                          அதன்படி 15 நபர்கள் பூஸ்ஸ கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் இருந்தும் 06 நபர்கள் கற்பிட்டி கடற்படை

                                          தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் இருந்தும் வெளியேறினர். இவர்கள் அனைவரும் அரசாங்கத்தின் சுகாதார

                                          வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வீடுகளுக்கு அனுப்பப்பட்டதுடன் தனிமைப்படுத்தலை வெற்றிகரமாக முடித்ததற்கான சான்றிதழ்கள் கடற்படையால் வழங்கப்பட்டன.

                                          தற்போதைய நிலவரப்படி, 61 நபர்கள் பூஸ்ஸ கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையத்திலும் 18 நபர்கள் கற்பிட்டியில்

                                          உள்ள கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையத்திலும் தனிமைப்படுத்தப்பட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

                                          கடற்படையின் பூஸ்ஸ
                                          கடற்படையின் பூஸ்ஸ
                                              Posted in இலங்கை செய்திகள்

                                              மக்கள் இனி கொரோனாவுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும் – உலக சுகாதர அமைப்பு

                                              மக்கள் இனி கொரோனாவுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும் – உலக சுகாதர அமைப்பு

                                              மக்கள் இனி கொரோனாவுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என உலக சுகாதர அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

                                              சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா (கொவிட் 19) வைரஸினால்

                                              ஜூலை 30 ஆம் திகதி நிலவரப்படி உலகிலேயே ஒரு கோடியே 72 லட்சத்து ஆயிரத்து, 277 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

                                              ஜெனிவா நகரில் வீடியோ கான்பரன்சிங் மூலம் நடந்த மாநாட்டில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


                                              6 லட்சத்து 70 ஆயிரத்து 454 பேர் பலியாகி உள்ளனர். ஒரு கோடியே 7 லட்சத்து 16 ஆயிரத்து 271 பேர் மீண்டுள்ளனர் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

                                              உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரசை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில்

                                              உள்ளோம். கொரோனா பாதிப்பால் மனிதனின் வாழ்கை முடிந்துவிட்டதாக அர்த்தம் கொள்ளக் கூடாது ஆகையால் மக்கள்

                                              இனி கொரோனாவுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

                                                  Posted in இலங்கை செய்திகள்

                                                  முன்னாள் CID பணிப்பாளர் கைது- கோட்டா ஆட்டம் ஆரம்பம்

                                                  முன்னாள் CID பணிப்பாளர் கைது- கோட்டா ஆட்டம் ஆரம்பம்

                                                  பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள முன்னாள் குற்றப்புலனாய்வு

                                                  திணைக்கள பணிப்பாளர் ஷானி அபேசேகர கைது செய்யப்பட்டுள்ளார்.

                                                  கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் அவர் கைது

                                                  செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

                                                      Posted in இலங்கை செய்திகள்

                                                      கருக்கலைப்பு நிலையத்தை நடத்திச் சென்ற போலி வைத்தியர் கைது

                                                      கருக்கலைப்பு நிலையத்தை நடத்திச் சென்ற போலி வைத்தியர் கைது

                                                      நிட்டம்புவ பகுதியில் கருக்கலைப்பு நிலையம் ஒன்றை நடத்திச் சென்ற போலி வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

                                                      நேற்று மமாலை 5 மணியளவில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.40 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

                                                      குறித்த நபரிடம் இருந்து கருக்கலைப்பிற்காக பயன்படுத்தும் உபகரணங்கள் சிலவும் வேன் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

                                                      சம்பவம் தொடர்பில் நிட்டம்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

                                                          Posted in இலங்கை செய்திகள்

                                                          ஐக்கிய தேசிய கட்சியினால் மாத்திரமே நாட்டை காப்பற்ற முடியும்- ரணில்

                                                          ஐக்கிய தேசிய கட்சியினால் மாத்திரமே நாட்டை காப்பற்ற முடியும்- ரணில்

                                                          கட்சியில் இருந்து பிரிந்து சென்ற யாரும் உண்மையான ஐக்கிய தேசிய கட்சியினராக இருக்க முடியாது என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

                                                          கொழும்பில் நேற்று (30) இடம்பெற்ற மக்கள சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

                                                          ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தில் மாத்திரமே மூன்று வேளைகள் உண்ண முடியும் எனவும் அதற்காகவே ஐக்கிய தேசிய கட்சியை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவர வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

                                                          ஐக்கிய தேசிய கட்சியினால் மாத்திரமே நாட்டை காப்பற்ற முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

                                                              Posted in இலங்கை செய்திகள்

                                                              கபொ.த சாதாரண தரப் பரீட்சை விண்ணப்பங்களை ஒன்லைன் முறையில் பெறுவது என பரீட்சைகள் திணைக்களம் தீர்மானம்

                                                              கபொ.த சாதாரண தரப் பரீட்சை விண்ணப்பங்களை ஒன்லைன் முறையில் பெறுவது என பரீட்சைகள் திணைக்களம் தீர்மானம்

                                                              எதிர்வரும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் தோற்றும் பரீட்சார்த்திகளின் விண்ணப்பங்களை ஒன்லைன் முறையில்

                                                              பெறுவதென தீர்மானித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.

                                                              அடுத்த மாதம் 31ஆம் திகதி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும். அரச பாடசாலைகளின் ஊடாக தோற்றுவோர் அதிபர் மூலமாக ஒன்லைன் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.

                                                              தனிப்பட்ட பரீட்சார்த்திகள் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தின் ஊடாக விண்ணப்பிப்பது அவசியம். இதற்குரிய முகவரி www.doenets.lk என்பதாகும்.

                                                              தனிப்பட்ட பரீட்சார்த்திகள் விண்ணப்பத்தின் அச்சுப்பிரதியைப் பெற்று உரிய முறையில் பூர்த்தி செய்து கிராம உத்தியோகத்தரின்

                                                              அத்தாட்சிப்படுத்தலுடன் விண்ணப்பங்களை பதிவுத் தபாலில் பரீட்சைகள் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

                                                              விண்ணப்பங்களை அனுப்புவதற்கான முகவரி பரீட்சைகள் ஆணையாளர் நாயகம், பாடசாலை பரீட்சை ஒருங்கிணைப்பு

                                                              மற்றும் பெறுபேறுகள் பிரிவு, பரீட்சைத் திணைக்களம், தபால் பெட்டி – 153, கொழும்பு என்பதாகும்.

                                                              தபால் உறையின் இடது பக்க மேல் மூலையில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2020 என்பதையும் விண்ணப்பதாரியின் நகரத்தின்

                                                              பெயரையும் குறிப்பிடல் வேண்டும். இது தொடர்பான மேலதிக தகவல்களை 1911 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக பெற்றுக்கொள்ள முடியும்.

                                                                  Posted in இலங்கை செய்திகள்

                                                                  பொதுத் தேர்தலின் தபால் மூல வாக்களிப்பு சுதந்திரமாகவும் நியாயமானதாகவும் இடம்பெற்றுள்ளது – பெப்ரல் அமைப்பு

                                                                  பொதுத் தேர்தலின் தபால் மூல வாக்களிப்பு சுதந்திரமாகவும் நியாயமானதாகவும் இடம்பெற்றுள்ளது – பெப்ரல் அமைப்பு

                                                                  எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் தபால் மூல வாக்களிப்பு சுதந்திரமாகவும் நியாயமானதாகவும்

                                                                  இடம்பெற்றுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

                                                                  கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்; இவ்வாறு குறிப்பிட்டார். கடந்த தேர்தலுடன் ஒப்பிடும் போது

                                                                  தேர்தல் வன்முறைகள் தொடர்பான முறைப்பாடுகள் குறைந்த மட்டத்திலேயே காணப்பட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்

                                                                      Posted in இலங்கை செய்திகள்

                                                                      களனி நகரத்தை கட்டியெழுப்புவேன் – கோட்டா முழக்கம்

                                                                      களனி நகரத்தை கட்டியெழுப்புவேன் – கோட்டா முழக்கம்

                                                                      போதைப்பொருள் மற்றும் பாதாள உலகத்தை ஒழித்து வரலாற்று சிறப்புமிக்க உரிமைகளையும் பெருமைகளையும்

                                                                      பாதுகாக்கக்கூடிய வகையில் களனி நகரத்தை கட்டியெழுப்புவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

                                                                      பொதுஜன பெரமுனவில் பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் இன்று (30)

                                                                      கம்பஹா மாவட்டத்திற்கு இரண்டாம் தடவையாகவும் சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அவர்கள், களனி

                                                                      ரஜமகா விகாரை பிரதான நுழைவாயிலுக்கு முன்னால் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டபோதே இவ்வாறு குறிப்பிட்டார்.

                                                                      வேட்பாளர் சட்டத்தரணி சிசிர ஜயக்கொடி இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார். பிரதேசத்தின் அபிவிருத்தியை

                                                                      நோக்கமாகக்கொண்ட “பத்தம்ச களனி பிரகடனம்” சிசிர ஜயக்கொடி அவர்களால் ஜனாதிபதி அவர்களுக்கு கையளிக்கப்பட்டது.

                                                                      வருகை தந்திருந்த மக்கள் முன்வைத்த பிரச்சினைகள் தொடர்பாக அவதானத்தை செலுத்திய ஜனாதிபதி அவர்கள், வரலாற்று

                                                                      சிறப்புமிக்க களனிக்கு உரிய பெருமையை பாதுகாக்கும் வகையிலான அபிவிருத்தி செயற்திட்டத்திற்காக பலமான பாராளுமன்றம் ஒன்றை பெற்றுத் தருமாறு மக்களிடம் கேட்டுக்கொண்டார்.

                                                                      பேராசிரியர் சங்கைக்குரிய கும்புறுகமுவே வஜிர தேரர் உட்பட மகாசங்கத்தினர், அமைச்சர்களான தினேஷ் குணவர்தன, பிரசன்ன

                                                                      ரணதுங்க மற்றும் வேட்பாளர் பிரசன்ன ரணவீர, வைத்தியர் சீத்தா அரம்பேபொல ஆகியோர் இச்சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டனர்.

                                                                      வேட்பாளர் நளின் பெர்ணான்டோ ஜா-எல நகர மத்தியில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட ஜனாதிபதி அவர்கள் வருகை தந்திருந்த மக்களிடம் பிரதேசத்தின்

                                                                      குறைபாடுகள் பற்றி கேட்டறிந்தார்.

                                                                      கம்பஹா மாவட்டத்தில் அனைத்து கால்வாய்களையும் புனர்நிர்மாணம் செய்து வெள்ள அனர்த்தத்தை குறைப்பதற்கும் ஜா-எல நகர அபிவிருத்திக்கும் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

                                                                      வேட்பாளர் லலந்த குணசேகர கட்டான, ஆண்டியம்பலம் பிரதேசத்தில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட ஜனாதிபதி அவர்களுக்கு மக்கள் அமோக வரவேற்பளித்தனர்.

                                                                      வருகை தந்திருந்த மகாசங்கத்தினர் அரசாங்கம் முன்னெடுக்கும் சுபீட்சமிகு வீட்டுத் தோட்டம்” வேலைத்திட்டத்தை பாராட்டியதோடு, அதனை அபிவிருத்தி செய்வதற்காக மக்களை ஆர்வமூட்டுவதற்காக விகாரை மற்றும் மதத் தளங்களை பயன்படுத்திக்கொள்வதாக குறிப்பிட்டார்கள்.

                                                                      விதைகள் மற்றும் பயிர்ச் செய்கை சம்பந்தமான தகவல்களை வழங்குவதற்கு அனைத்து மதத் தளங்களையும் இணைத்துக்கொள்வதன் முக்கியத்துவத்தையும் மகாசங்கத்தினர்

                                                                      சுட்டிக்காட்டினர். 20 வயதில் பட்டத்தை நிறைவு செய்வதற்கு “சுபீட்சத்தின் நோக்கு” திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள கல்விக் கொள்கையை உடனடியாக செயற்படுத்துமாறு மாணவர்கள் சிலர் ஜனாதிபதி அவர்களை கேட்டுக்கொண்டனர்.

                                                                      Posted in இலங்கை செய்திகள்

                                                                      இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

                                                                      இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

                                                                      இலங்கை மற்றும் மாலைதீவு நாடுகளுக்கான ரஷ்ய தூதுவர் யூரி மாதரி

                                                                      பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்னவை நேற்று முன்தினம் (ஜுலை, 28) சந்திதித்தார்.

                                                                      பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற சினேகபூர்வ சந்திப்பின் போது

                                                                      இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.

                                                                      இலங்கைக்கான ரஷ்ய
                                                                      இலங்கைக்கான ரஷ்ய