மக்களின் நீண்ட நாள் தேவை நிரைவேற்றம்

Spread the love

மக்களின் நீண்ட நாள் தேவை நிரைவேற்றம்

நுவரெலியா மாவட்டம் ராகலை பிரதேசத்திற்கு உட்பட்ட ராகலை குரூப் 01 தோட்ட மக்களின் குடியிருப்புகளுக்கு இக்கரையில் இருந்து அக்கரைக்கு செல்வதற்கு பாலம்

ஒன்று இன்மையால் மக்கள் பல இன்னல்களை அனுபவித்து வந்தனர். இந்த பிரதேசம் அடிக்கடி வெள்ள பெருக்கில் பாதித்து வந்ததும் குறிப்பிடதக்கது.


மழைக்காலங்களில் இந்த பிரசேத்தில் வெள்ளம் பெருக்கெடுக்கும் சந்தர்பங்களில் மக்கள் பல வருடங்களாக தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து

வந்தனர். இதற்கு தீர்வினை பெற்றுக் கொள்ள மக்கள் முயற்சிகள் பல மேறக்;கொண்ட போதும் அவை பயனளிக்கவில்லை.

இந் நிலையில் இப்பிதேசத்தில் வசித்து வரும் மக்கள் முன்னால் அமைச்சரும் தற்போதைய நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள்

முன்னணியின் தலைவருமான கலாநிதி வே.இராதாகிருஸ்ணன் அவர்களிடம் நிலமையை விபரித்தனர் இதன் பயனாக பாராளுமன்ற உறுப்பினரின்

நிதி ஓதுக்கீட்டின் மூலம் இந்த பாலம் முழுமையாக நிர்மாணிக்கபட்டு மக்களின் பாவனைக்காக மக்களிடம்

கையளிக்கப்பட்டது. இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி வே.இராதாகிருஸ்ணன் அவர்கள் கலந்துக் கொண்டார்

மக்களின் நீண்ட நாள்
மக்களின் நீண்ட நாள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *