உரப்பையில் சுற்றப்பட்ட நிலையில் சிசு சடலம் மீட்பு

உரப்பையில் சுற்றப்பட்ட நிலையில் சிசு சடலம் மீட்பு
Spread the love

உரப்பையில் சுற்றப்பட்ட நிலையில் சிசு சடலம் மீட்பு

ஆனமடுவ திவுல்வெவ பிரதேசத்தில் வீடொன்றிலிருந்து காணாமல் போன 4 வயது குழந்தை உர பையில் சுற்றி முட்புதரில் வீசப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

நேற்று மதியம், வீட்டில் இருந்து தனியாக வெளியே சென்ற குழந்தை கை, கால்கள் கட்டப்பட்டு உரப் பையில் சுற்றப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டு ஆனமடுவ வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உரப்பையில் சுற்றப்பட்ட நிலையில் சிசு சடலம் மீட்பு

குழந்தையின் வீட்டில் இருந்து சுமார் 150 மீற்றர் தொலைவில் உள்ள முட்புதரில் குழந்தை சுற்றப்பட்டிருந்த உரப்பை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் அதே பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குழந்தையை கடத்தியமைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்பதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆனமடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *