அமெரிக்கா வாயில் மண்ணை தூவிய ரசியா – செக்மேட் நடவடிக்கை

Spread the love

அமெரிக்கா வாயில் மண்ணை தூவிய ரசியா – செக்மேட் நடவடிக்கை

தற்போது 23 ஐரோப்பிய நாடுகள் ரஷியாவிடம் இருந்து எரிவாயுவை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

ரூபிளில் வர்த்தகம் செய்ய 10 ஐரோப்பிய நாடுகள் சம்மதம்- ரஷியா அறிவிப்பு
ரஷிய கேஸ்ப்ரோம் நிறுவனம்
இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.

ரஷியா உக்ரைன் போர் 64-அது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த போரில் ரஷியா பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த நடவடிக்கைக்கு

எதிர்ப்பு தெரிவித்த அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ரஷியா மீது பொருளாதார தடை விதித்தன.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ரஷியா, நட்பற்ற நாடுகள் தங்களிடம் இருந்து பெறப்படும் எரிவாயுவிற்கான கட்டணத்தை அமெரிக்க டாலருக்கு பதிலாக ரூபிளில்

மட்டுமே செலுத்த வேண்டும் என தெரிவித்தது. ஐரோப்பாவில் பெரும்பாலான நாடுகள் ரஷியாவிடம் இருந்தே எரிவாயு இறக்குமதி செய்வதால் இந்த அறிவிப்பு அந்நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்நிலையில் பல்கேரியா மற்றும் போலாந்து ஆகிய நாடுகள் அவ்வாறு ரூபிளில் பணத்தை வழங்குவதற்கு மற்றுப்பு தெரிவித்தன. இதையடுத்து அந்த இரு

நாடுகளுக்கும் எரிபொருள் விநியோகத்தை வழங்குவதை ரஷியா நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

இரு நாடுகளையும் பொறுத்தவரையில், போலந்து 53 சதவீத எரிவாயுவை ரஷ்யாவிடமிருந்தே இதுவரை இறக்குமதி செய்து வந்தது. பல்கேரியா 90 சதவீத எரிவாயுவை ரஷ்யாவிடமிருந்தே பெற்று வந்தது.

இந்நிலையில் 10 ஐரோப்பிய எரிவாயு நிறுவனங்கள் ரஷியாவிடம் இருந்து ரூபிளில் எரிவாயு வர்த்தகத்தை மேற்கொள்ள சம்மதித்துள்ளதாக ரஷிய எரிவாயு நிறுவனம்

கேஸ்ப்ரோம் தெரிவித்துள்ளது. இதில் 4 நிறுவனங்கள் ஏற்கனவே ரூபிளில் கட்டணத்தை செலுத்தி விட்டன. இவர்களுக்கு விரைவில் எரிவாயு விநியோகம்

செய்யப்படும். ரூபிள் வர்த்தகத்திற்கு சம்மதிக்காத நாடுகளுக்கு விற்பனை நிறுத்தப்படும் என கூறியுள்ளது.

தற்போது 23 ஐரோப்பிய நாடுகள் ரஷியாவிடம் இருந்து எரிவாயுவை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *