முல்லையில் வாய் சண்டையில் – வெட்டி வீச பட்ட மீனவர் கை

Spread the love

முல்லையில் வாய் சண்டையில் – வெட்டி வீச பட்ட மீனவர் கை

முல்லைத்தீவு நாயாற்று பகுதியில் அமைந்துள்ள வாடியில் இரு குடும்பங்களுக்கு இடையில் இடம்பெற்ற வாய்த்தர்க்கம் மோதலாக மாறி கத்தி வெட்டில் முடிவடைந்துள்ளது.

கடந்த 17 ஆம் திகதி மாலை நாயாற்று வாடிப்பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. புத்தளம், மன்னார் மாவட்டத்தினை சேர்ந்த மீனவர்கள் வாடி அமைத்து தொழில் செய்து வருகின்றார்கள்.

இவர்களில் புத்தளம் கலாவத்தை பகுதியினை சேர்ந்த 41 அகவையுடைய மீனவர் கைவிரல் ஒன்று துண்டாடப்பட்ட நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் கத்தியால் வெட்டிய குற்றவாளியான மன்னாரை சேர்ந்த நபரை முல்லைத்தீவு பொலிசார் கைது செய்துள்ளார்கள்.

இச்சம்பவம் குறித்து முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்


    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *