வீடுகளில் இருந்தவாறு இம்முறை தீபாவளியை கொண்டாட வேண்டுதல்

Spread the love

வீடுகளில் இருந்தவாறு இம்முறை தீபாவளியை கொண்டாட வேண்டுதல்

வடக்கு மக்கள் வீடுகளில் இருந்தவாறு இம்முறை தீபாவளியை கொண்டாவேண்டும் என்று அந்த மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆலயங்களுக்கு செல்வதையும் தவிர்த்து வீடுகளில் இருந்தவாறு கொரோனா தொற்றிலிருந்து விடுபட வேண்டி தீபாவளி தினத்தில்

இறைவனைப் பிரார்த்திக்குமாறும் அரசாங்க அதிபர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தீபாவளி பண்டிகை தொடர்பில் இன்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.


இந்துக்களின் பண்டிகையான தீபாவளி பண்டிகை நாளைய தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் இந்து ஆலயங்களிலும் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெறும். அத்துடன் தற்போது இந்து

கோவில்களில் விரத பூசைகளும் இடம்பெற்று வருவதனால் பொதுமக்கள் கோயிலுக்கு சென்று ஒன்று கூடுவதை தவிர்க்க வேண்டும்.இந்து கலாச்சார திணைக்களத்தினரால்

ஆலயங்களுக்குள் 5 பேருக்கு மேல் செல்ல அனுமதிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே யாழ்ப்பாணத்தில் மக்கள் வீடுகளில் இருந்தவாறு தீபாவளியை கொண்டாடுவது மட்டுமல்லாது ஆலயங்களுக்கு செல்வதையும் தவிர்த்து வீடுகளில் இருந்தவாறு கொரோனா

தொற்றிலிருந்து விடுபட வேண்டி இறைவனைப் பிரார்த்திக்க வேண்டும்.


குறிப்பாக வடக்கு மாகாண சுகாதார திணைக்களத்தினரால் ஏற்கனவே ஆலயங்களுக்குரிய சுகாதார விதிமுறைகள்

தொடர்பான அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *