அமெரிக்காவில் ஒரே நாளில் 1 லட்சத்து 39 ஆயிரம் பேருக்கு கொரோனா

Spread the love

அமெரிக்காவில் ஒரே நாளில் 1 லட்சத்து 39 ஆயிரம் பேருக்கு கொரோனா

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 கோடியே 24 லட்சத்தை கடந்தது.

அமெரிக்காவில் ஒரே நாளில் 1 லட்சத்து 39 ஆயிரம் பேருக்கு கொரோனா – அப்டேட்ஸ்

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த

வைரஸ் தற்போது உலகின் 217 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கிட்டத்தட்ட கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 5 கோடியே 24 லட்சமாக அதிகரித்துள்ளது.

குறிப்பாக அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 39 ஆயிரத்து 681 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் இந்திய அரசு நேற்று வெளியிட்ட தகவலில் 24 மணி நேரத்தில் 44 ஆயிரத்து 281 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பிரேசிலில் 47 ஆயிரத்து 724 பேருக்கும், பிரான்சில் 35 ஆயிரத்து 879 பேருக்கும் புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 5 கோடியே 24 லட்சத்து 18 ஆயிரத்து 628 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 1 கோடியே 44 லட்சத்து 66 ஆயிரத்து 250 பேர் சிகிச்சை பெற்று வருகிறனர். சிகிச்சை பெறுபவர்களில் 94 ஆயிரத்து 739 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

வைரஸ் பாதிப்பில் இருந்து 3 கோடியே 65 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளது . ஆனாலும், கொரோனாவால் இதுவரை 12 லட்சத்து 88 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா – 1,07,05,503
இந்தியா – 86,36,012
பிரேசில் – 57,49,007
பிரான்ஸ் – 18,65,538
ரஷியா – 18,36,960

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *