உயர்தர பரீட்சை குறித்து நாளை இறுதி முடிவு
கொவிட் – 19 தொடர்பான தற்போதைய நிலைமைகளை அரசாங்கம் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றது.
எதிர்வரும் 48 மணித்தியாலங்களில் கிடைக்கவுள்ள பி.சி.ஆர் பிரிசோதனைக்கு அமைவாக தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும்
என்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல்ல சற்று முன்னர் தெரிவித்தார்.
இதேபோன்று இந்த மாதம் 11 ஆம் திகதி நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்வி தராதர உயர்தர
பரீட்சைகளை நடத்துவது தொடர்பிலும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும்.
பரீட்சைகள் தொடர்பில் நாளைய தினம் தீர்மானிக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். இதுவரையில் கிடைத்துள்ள
பி.சி.ஆர் பரிசோதனை பெறுபேறுகளுக்கு அமைவாக 321 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருப்பது உறுதி செய்யப்பட்டிருப்படிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பான பெறுபேற்று அறிக்கை நாளை கிடைக்கவுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர்களுடனான சந்திப்பு
இன்று (6) அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது இதன்போதே அமைச்சர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்






