சிங்கள பொலிசார் மீது திடீர் தாக்குதல் – பலர் கைது

Spread the love

சிங்கள பொலிசார் மீது திடீர் தாக்குதல் – பலர் கைது

பண்டாரகம, அட்டுலுகம, மாராவ பிரதேசத்தில் போதைப்பொருள் சுற்றிவளைப்பு

நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸார் மீது பிரதேச மக்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பிரதேசத்தில் கஞ்சா விநியோகத்தில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர்

கைதுசெய்யப்பட்ட நிலையில் அவரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய பிரதான சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, சந்தேக நபரை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச்

சென்ற ஜீப் வண்டியை வழிமறித்து பிரதேச மக்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.

நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக அருகிலுள்ள பொலிஸ்

நிலையங்களின் உத்தியோகத்தர்கள் மற்றும் விசேட அதிரடிப்படையினர் அங்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் இரண்டு பெண் மற்றும் இரண்டு ஆண் உத்தியோகத்தர்கள்

காயமடைந்துள்ளதாகவும் பண்டாரகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், சம்பவம் தொடர்பில் 3 பெண்கள் உள்ளிட்ட நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

நான்கு பெண்கள் மற்றும் நான்கு ஆண்கள் ஆகியோர் பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *